காண்போரை கொள்ளை கொள்ளும் பேரழகியாக மாறி அசர வைக்கும் அழகைப் பெற கொஞ்சம் உளுந்து இருந்தால் அத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பேக் போட்டுக் கொள்ளுங்கள்.

beauty urad dal
- Advertisement -

முகத்தை பளிச்சென்று நிறமாக வைத்திருப்பது அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். அதிலும் இந்த விஷயத்தில் பெண்கள் கூடுதல் அக்கறையோடு இருப்பார்கள். முகம் நல்ல நிறமாக பார்க்க வசிகரமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று பலரும் பல வகையில் முயன்று கொண்டிருக்கிறார்கள். அதற்கென பல ஆயிரம் ரூபாய்களையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் வீட்டின் சமையலறையில் இருக்கும் இந்த பொருளை வைத்தே முகத்தை பளிச்சென்று பிரகாசமாக மாற்ற முடியும். அது எப்படி என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகத்தை நல்ல நிறமாகவும் பிரகாசமாகவும் மாற்ற பேஸ் பேக் தயாரிக்கும் முறை
இந்த பேக்கை தயாரிக்க தேவைப்படும் அதி முக்கியமான பொருள் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உளுந்து தான். என்னது உளுந்தை வைத்து முகத்தை பிரகாசமாக மாற்ற முடியுமா? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழலாம். ஆமாம் இந்த உளுந்தில் நம்முடைய நிறத்தை அதிகரித்துக் கொடுக்கக் கூடிய தன்மை அதிகமாக உள்ளது. அதை கொண்டு தான் இப்பொழுது ஒரு அருமையான ஃபேஸ் பேக் தயாரிக்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பேக்கை செய்வதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் உளுந்தை எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உளுந்தை ஊற வைக்க தண்ணீர் ஊற்றாமல் அதற்கு பதில் பசும்பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த பாலுக்கும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பளிச்சென்று மாற்றி தரக்கூடிய தன்மை உண்டு. அதிலும் சுத்தமான பசும்பால் என்றால் இதன் பலன் சற்று கூடுதலாகவே கிடைக்கும். எனவே கூடுமானவரையில் காய்ச்சாத பசும் பாலை இந்த பேக் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவை இரண்டையும் இரண்டு மணி நேரம் வரை மூடி போட்டு அப்படியே ஊற விடுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த பொருட்களை சேர்த்து தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் கூட கொஞ்சம் பசும்பாலை சேர்த்து பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேக்கை தயாரிக்கும் போது கை வைத்து எடுக்கக் கூடாது. ஏனெனில் கை வைத்தால் உடனே புளித்து விடும் அடுத்த நாள் கூட இது பயன்படுத்த முடியாது.

- Advertisement -

இப்போது தயார் செய்து வைத்து இந்த பேக்கை ஒரு பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வாரம் வரை கூட வைத்து பயன்படுத்தலாம் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தயார் செய்து வைத்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் போட்ட பிறகு முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுங்கள். இந்த மசாஜ் முறை மிகவும் அவசியம். அதன் பிறகு இருபது நிமிடம் வரை இதை உங்கள் முகத்தில் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள்.

இந்த பேக்கை போட்ட பிறகு முகத்தை அலம்ப சோப்பை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக பாசி பருப்பு கடலைப்பருப்பு போன்றவற்றை பவுடர் ஆக்கி அதை கொண்டு முகத்தை கழுவினால் முகம் இன்னும் விரைவாக பளிச்சென்று மாறுவதுடன் பார்க்க வசீகரமாகவும் மாறி விடும் .எனவே நம் வீட்டில் சமையல் அறையில் தினம் தினம் பயன்படுத்தும் இந்தப் பொருட்களை வைத்து முகத்தை கொள்ளை கொள்ளும் பேரழகாக மாற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே: இயற்கையான முறையில் இப்படி ஒரு முறை பேசியல் செய்து பாருங்கள். முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் விலகி, முகம் பொலிவுடன் மாசு மரு இல்லாமல் இருக்கும்.

இந்த அழகு குறிப்பில் உள்ள டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முகத்தின் நிறத்தை கூட்டிக் கொடுக்க அதிக அளவில் பணத்தை செலவு செய்யாமல் இது போல எளிமையான முறையில் பேஸ் பேக் போட்டு நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -