ரசத்தை நல்ல கம கமன்னு வாசத்தோடு ஒரு முறை இப்படி வதக்கி செய்து பாருங்க இது வரை இப்படி ஒரு சுவையான ரசத்தை எங்கும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க.

rasam
- Advertisement -

முன்பெல்லாம் நம்முடைய வீட்டு விசேஷங்கள் ஆகட்டும் அல்லது விருந்தாளிகள் வரும் பொழுது விசேஷமான சமையலாக இருக்கட்டும் எந்த வகையான சைவ அசைவ குழம்பு வைத்தாலும் கடைசியில் ரசம் கொஞ்சம் வைப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார்கள். ரசம் ஜீரண சக்தியை தூண்டுவதுடன் ஒரு முழு சமையலை சாப்பிட்டதற்கான திருப்தியை தரும் அந்த ரசத்தை பல்வேறு வகையில் வைக்கலாம் இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ஒரு வித்தியாசமான ரசத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த ரசம் செய்வதற்கு முன் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் கரைத்து நன்றாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள் அதன் பிறகு மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் 10 பல் பூண்டு தோல் உரிக்காமல் நசுக்கி அதையும் சேர்த்து விடுங்கள். அதன் பிறகு மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்த பிறகு இரண்டு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் இதில் சேர்த்து விடுங்கள். இந்த தக்காளி வதங்கிக்கொண்டிருக்கும் போது கால் டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி இரண்டரை டீஸ்பூன் ரசப்பொடி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு நான் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் புலி தண்ணீரை இதில் ஊற்றிய பிறகு மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் சேர்ந்து இந்த ரசத்திற்கு தேவையான உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு வைத்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் வரை இந்த ரசம் அப்படியே சிம்மில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து ரசம் மேலே நுரைத்து பொங்கும் தருவாயில் இருக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள் அதன் பிறகு மீண்டும் கொஞ்சமாக கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து ரசத்தை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள் நல்ல கமகமவென்று வாசத்துடன் வதக்கிய ரசம் தயார்.

இதையும் படிக்கலாமே: வாழைக்காயை இப்படி பொரியல் செய்து கொடுத்து பாருங்க இது வாழைக்காயில் செய்தது தான் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. வாழக்காயே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட தட்டு தட்டா சாப்பிடு காலி பண்ணிடுவாங்க.

பொதுவாகவே ரசம் ஒரு சுவை மிகுந்த அதே நேரத்தில் நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம் இந்த குறிப்பில் உள்ளது போல படைக்கு ரசம் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை பல மடங்கு அதிகமாக இருக்கும் ரசம் சாப்பாடு கூட ஒரு தட்டு தனியாக சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இருக்கும் ஒரு முறை இப்படியும் ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்க இனி எப்போதும் இப்படித்தான் செய்வீங்க.

- Advertisement -