ஞாயிற்றுக்கிழமை அசைவ விருந்திற்க்கு இந்த சுவையான மட்டன் வறுவலை செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் சுவைக்கு வீட்டிலுள்ளவர்கள் உங்களை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்

mutton
- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு தான். திங்கள் முதல் சனி வரை வேலைக்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வீட்டில் உள்ளனர். அன்றைய தினம் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கடைகளுக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி மட்டன் சமைப்பதாக இருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி மட்டன் கிரேவியை செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

chicken-gravy1

தேவையான பொருட்கள்:
மட்டன் – அரை கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சைமிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பிரியாணி இலை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, பட்டை சிறிய துண்டு – 1, எண்ணெய் – 5 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை கிலோ ஆட்டுக்கறியை தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொண்டு, அதனை குக்கரில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

mutton

பிறகு ஒரு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளியை நான்காக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு வெங்காயம் மற்றும் 2 தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரியாணி இலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காயம் பேஸ்ட்டையும் இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

mutton_2

பிறகு குக்கரை திறந்து அதில் உள்ள கறியை மட்டும் எடுத்து இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் குக்கரில் இருக்கும் தண்ணீரையும் இவற்றுடன் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் முழுவதுமாக சற்று கெட்டியாக மாறியதும் கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மட்டன் கிரேவி தயாராகிவிட்டது.

- Advertisement -