இந்த கிரீமை முகத்தில் போட்டு வந்தால், பத்தே நாட்களில், 10 வயதை குறைத்து விடலாம். 10 ரூபாய் கூட செலவு இல்லாமல், இந்த கிரீமை எப்படி வீட்டிலேயே தயார் செய்வது?

face19

வயது ஆகாமல் எப்போதுமே இளமையாக இருப்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சில வெளிநாட்டவர்களை பார்க்கும் போது அவர்களுடைய முகம் மட்டும் எப்படி இவ்வளவு பளபளப்பாக இருக்கிறது! என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். குறிப்பாக ஜப்பானியர்கள், பார்ப்பதற்கு மொழுமொழுவென்று சருமத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லாமல் இளமையாக அழகான தோற்றத்தை பெற்றிருப்பார்கள். அதனுடைய ரகசியம் என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஜப்பானியர்கள் தங்களுடைய அழகுக்காக பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் அரிசி. நம்முடைய நாட்டில் அதிகம் கிடைக்கக்கூடிய இந்த அரசியை தான், அவர்கள் தங்களுடைய அழகுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

rice2

உங்களுடைய வீட்டில் நீங்கள் சமைக்கும்போது சாதம் நன்றாக வெந்தவுடன், அதில் இருந்து கஞ்சியோடு சேர்த்து சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதத்தை வடிப்பதற்கு முன்பு ஒரு குழி கரண்டி அளவு சாதத்தை கஞ்சியோடு சேர்த்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவே போதும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு முதலில் கஞ்சியோடு இருக்கும் சாதத்தை அந்த ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். அடுத்தபடியாக உங்களுக்கு அலோ வேரா ஜெல் இயற்கையாகவே கிடைத்தால் அதை சேர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கடையிலிருந்து வாங்கிய அலோ வேரா ஜெல் 2 ஸ்பூன் அளவு சாதத்தோடு மிக்ஸி ஜாரில் சேர்த்து விடுங்கள். அதன் பின்பு வைட்டமின் – E மாத்திரையில் ஒன்று அல்லது இரண்டு உங்களுடைய தேவைக்கு ஏற்ப போட்டுக் கொள்ளலாம். கேப்ஸ்யூலின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

vitamin-c-tab

மிக்ஸி ஜாரில் கஞ்சியோடு இருக்கும் சாதம் 1 குழி கரண்டி அளவு, அலோ வேரா ஜெல் 2 – ஸ்பூன், விட்டமின் E – 2, இந்த மூன்று பொருட்களையும் மைய விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். சாதத்தில் கஞ்சியோடு இருப்பதால் இது கொழகொழவென க்ரீம் பதத்தில் நமக்கு கிடைக்கும். தேவைப்பட்டால் கொஞ்சமாக 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரை விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். சாதம் அறைபடாமல் நம் கையில் தட்டுப்பட கூடாது.

இப்போது இந்த க்ரீமை ஒரு காற்று புகாத சிறிய பாட்டிலில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் 7 நாட்களுக்கு கெட்டுப் போகாது. தினமும் இரவு தூங்கும் போகும் போது இந்த க்ரீமை லேசாக எடுத்து உங்களுடைய முகம் முழுவதும் அப்ளை செய்து கொண்டு அப்படியே தூங்கினாலும் சரி, அப்படி இல்லை என்றால், கிரீமை முகத்தில் அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி கொண்டாலும் சரி, உங்களுடைய வயதான தோற்றம் நிச்சயமாக தள்ளிப்போகும். தோல் சுருக்கங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். இந்த கிரீமை முகத்தில் தடவும் போது கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல் பக்கமாக தடவி விட வேண்டும்.

face20

நிறைய பேருக்கு கண் பகுதிகளில், வாயைச் சுற்றி சீக்கிரமே வயதாகும்போது சுருக்கம் ஏற்படும். இதை தவிர்க்க இந்த ரைஸ்கிரீம் மிகவும் உதவியாக இருக்கும். தினந்தோறும் இந்த ரைஸ் கிரீமை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆன்ட்டி ஏஜிங் கிரீமில் பெஸ்ட் கிரீம் இது. உங்களுடைய அழகை பாதுகாத்து பராமரிக்க இயற்கையான முறையில் நீங்களே இப்படிப்பட்ட க்ரீம்களை தயார் செய்து பயன்படுத்துவது நல்லது. ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்.