உங்களுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய தத்துவங்கள்! இந்தப் பிரபலம் அப்படி என்னதான் சொல்லி இருக்கின்றார்? ஒருமுறை நீங்களும் படிச்சு தான் பாருங்களேன்!

robin-sharma

இந்த உலகத்தில் நாம் பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கின்றோம். உங்களை சுற்றி உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்தார்கள். ஆனால் இறக்கும் போது அமைதியாக இருந்து போகின்றோம். அந்த சமயம் மற்றவர்கள் சிரிக்க கூடாது. அழ வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு.

baby-cry

தனக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை கேட்டுப் பெற்றுக் கொள்பவன், அந்த நிமிடம் மற்றவர்கள் கண்களுக்கு, முட்டாளாக தெரியலாம். ஆனால், தனக்கு என்ன வேண்டும் என்று கேட்காதவன் அவனுடைய வாழ்நாள் முழுவதுமே முட்டாளாக வாழ்கின்றான்.

தினம் தினம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுடைய ஆசிரியர் தான். உங்களுக்கு அவர் குருதான். ஏனென்றால் ஏதாவது ஒரு பாடத்தை, அவர் உங்களுக்குக் கற்றுத் தந்து விட்டு சென்றிருப்பார். அவர்களை கட்டாயம் மதிக்க வேண்டியது உங்களுடைய கடமை.

winning

உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தில் கவனத்தை செலுத்துங்கள். பிடிக்காத விஷயத்தில், கட்டாயத்திற்காக ஒரு நிமிடத்தை கூட வீணாக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.

- Advertisement -

வாழ்க்கையில் இன்று ஜெயித்தவர்கள் எல்லாமே அதிகாலை வேளையில் எழுத்தவர்கள் தான். முடிந்தவரை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து பழகுங்கள்.

sun1

எப்போதுமே நடந்த கஷ்டத்தை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. வருந்துவதற்கு என்று தனியாக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி விடுங்கள். அந்த நேரம் முழுவதையும் வருத்தப்படும் அதற்காகவே செலவழித்து, வருத்தத்தை மறந்து விடுங்கள். வருத்தப்பட்டு கொண்டே இருந்தால் அடுத்த வேலையில் கவனம் செலுத்த முடியாது.

மனதை மாற்றும் நல்ல புத்தகங்களை படிக்க பழக வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்கும்போது ஆரம்பகட்டத்திலேயே அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். பிடிக்காத புத்தகத்தைக் கூட படிக்க கூடாது என்பதுதான் வாழ்க்கையின் தத்துவம்.

books1

நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யாமல் ஓய்வு எடுக்கும் நேரத்தில் எதையாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பயணத்திற்கு செல்லும்போதும், பயணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது இரவில் தூக்கம் வராமல் இருக்கும் போதும் சும்மாவே இருப்பதைவிட ஒரு புத்தகத்தைப் படிப்பது உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கும்.

மற்றவர் செய்ததையே நீங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு புதுமையாக எதையாவது செய்யவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருங்கள். இந்த எண்ணம் உங்களை இந்த உலகத்திற்கு தனியாக அடையாளப்படுத்திக் காட்டும்.

உங்களுடைய குடும்பமும், உங்களுடைய குழந்தைகளும் தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. முடிந்தவரை உங்களுடைய குடும்பத்துடன் உங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை சந்தோஷமாக செலவிடும் தருணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுடைய குடும்பத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் நல்ல பழக்கம். அந்தசந்தோஷத்தை திரும்பத் திரும்ப நினைவு கூறும்போது வாழ்க்கை இனிமையாகும்.

friends

எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் பல பேரின் நல்ல நட்பு நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ஒருவர் அதிகப்படியான  சொத்துக்களை வைத்து வாழ்ந்து முடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவருக்கு குறைந்தது இரண்டு நல்ல நண்பர்கள் ஆவது இருக்க வேண்டும் என்பது அவசியம்.

எந்த ஒரு பழக்கமும் ஒருவரை முழுமையாக சென்றடைய குறைந்தது 21 நாட்களாவது ஆகும். நீங்கள் பழகும் அந்த பழக்கம் நல்ல பழக்கமா அல்லது கெட்ட பழக்கம் என்பது உங்களுக்கே தெரியும். முடிந்தவரை நல்ல பழக்கமாக இருந்தால் அதை தொடரலாம். கெட்டது என்று நினைத்தால் அந்தப் பழக்கத்தை முடிந்தவரை 21 நாட்களுக்கு பழக்கப் படுத்திக் கொள்ளாமல் நிறுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

music

தினமும் காலை எழுந்தவுடன் உற்சாகமாக, உங்களை உற்சாகப்படுத்தும் நான்கு பாடல்களையாவது கட்டாயம் கேட்க வேண்டும். அந்த நாள் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி அந்த ஒரு நல்ல இசைக்கும் உண்டு.

எவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் அடைந்தாலும் தலைகனம் வரக்கூடாது. வெற்றியிலும், எளிமையாக இருந்த மனிதர்கள் தான் இன்று வாழ்க்கையின் உச்சிக்கே சென்று உள்ளார்கள் என்பது இதற்கு சான்று. ஆணவம் ஒரு மனிதனுக்கு வரவே கூடாத ஒன்று.

robin-sharma-book

மேற்குறிப்பிட்டுள்ள வாழ்க்கை தத்துவங்கள் அனைத்தும், Who Will Cry when you Die?(நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?) என்ற புத்தகத்தில் Robin Sharma எழுதிய வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்கள். ஒருவருடைய வாழ்க்கையை சரியான முறையில் வாழவேண்டும் என்றால் இவைகளை பின்பற்றினாலே போதும்.

English Overview:
Here we have Robin sharma quotes in Tamil. Robin sharma quotes on life. Robin sharma quotes. Robin sharma life quotes. Robin sharma thoughts.