ரோகிணி நட்சித்திரக்காரர்கள் இதை செய்தால் மிகுதியான பலன்களை பெறலாம்

chandra

நமது புராணங்களின் படி 27 நட்சத்திரங்களையும் மணம் முடித்துக் கொண்ட சந்திர பகவான் அந்த நட்சத்திரங்களில் ரோகிணி நட்சத்திரத்தின் மீது மட்டும் தனி பிரியம் கொண்டிருந்தார். இதன் காரணமாக நட்சத்திரங்களின் தந்தையான தட்சனின் சாபம் பெற்று, தேய்பிறை மற்றும் வளர்பிறையாக சந்திரன் சஞ்சரிக்கும் நிலை உண்டானது. சந்திர பகவானின் அன்பிற்கும், அருட்கடாட்சத்திற்க்கும் பாத்திரமானவர்களாக ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டங்களும், யோகங்களையும் பெற செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord-Chandra

27 நட்சத்திர வரிசையில் நான்காவதாக வருவது ரோகிணி நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சந்திர பகவானுக்கு மிகவும் விருப்பமான நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. சந்திர பகவானின் முழுமையான அருட்கடாட்சம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷங்கள் நீங்கி வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களும், யோகங்களும் உண்டாக கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வர வேண்டும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் பெற ஒவ்வொரு மாதமும் வருகின்ற ரோகிணி நட்சத்திர தினத்தில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் நவக்கிரக சன்னிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு வெள்ளை நிற மலர்கள் சமர்ப்பித்து, தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, நெய்தீபம் ஏற்றி, சந்திர பகவான் மூல மந்திரங்களை 108 முறை துதித்து வழிபடுவதால் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் உண்டாகும்.

chandra bagavan

பௌர்ணமி தினங்களில் இரவு 7 மணிக்கு மேல் வானில் தெரிகின்ற முழுமையான சந்திரனுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவதால் சந்திர பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும். வசதி குறைந்தவர்களுக்கு அமாவாசை பிறகான வளர்பிறை நாட்களில் உங்களால் இயன்ற தானங்களை செய்வது உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் வழிவகுக்கும். திங்கட்கிழமைகளில் தூய வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்ளலாம் அல்லது குறைந்தபட்சம் வெள்ளை நிற கைக்குட்டை மட்டுமாவது உங்களுடன் வைத்திருப்பது அதிர்ஷ்டங்களை உங்களை நோக்கி ஈர்க்கச் செய்யும். மேலும் திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற பசு மாடுகளுக்கு வாழைப்பழம் மற்றும் அகத்திக்கீரை கொடுப்பது உங்கள் நட்சத்திர தோஷம் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:
கன்னி ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்ய வேண்டும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rohini nakshatra dosha pariharam in Tamil. It is also called as Rohini natchathiram in Tamil or Rohini natchathira athipathi in Tamil or Chandra bhagavan nakshatras in Tamil or Rohini natchathiram in Tamil.