நியூசிலாந்தில் இருந்து வந்தவுடன் தனது ஏஞ்சல் உடன் நடனமாடியதை பகிர்ந்த ஹிட்மேன் ரோஹித் – கியூட் வீடியோ

Rohith

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளது. ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்தது.

rohith

இதற்கடுத்து இந்திய அணிக்கு சில நாட்களே ஓய்வு ஏனெனில், இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய தொடர்கள் இருப்பதால் இந்திய அணி வீரர்கள் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.

நீண்ட சுற்றுப்பயணத்தில் இருந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவிற்கு கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது நாட்கள் குழந்தையை காண வந்த ரோஹித் மீண்டும் நியூசிலாந்து தொடருக்காக அணியில் இணைந்தார். தற்போது வீடு திரும்பிய அவர் முதல் வேலையாக தனது குழந்தையுடன் விளையாடும் ஒரு விடீயோவினை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ :

தனது பெண் குழந்தைக்கு சமைரா என்று பெயரிட்டுள்ளார் ரோஹித். இன்னும் 12 நாட்களில் ஆஸ்திரேலிய தொடர் துவங்க இருப்பதால் அடுத்த வாரம் இந்திய அணி பயிற்சியில் ரோஹித் கலந்து கொள்வார். அதுவரை அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தை கழிக்க முடிவெடுத்துள்ளார் ஹிட்மேன்.

இதையும் படிக்கலாமே :

இரும்புக்கம்பி, ஹாக்கி ஸ்டிக்கால் தர்மஅடி. கால் கணுவில் முறிவு, 7 இடத்தில தையல் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர். அணியில் தேர்வாகாத வீரர்கள் தாக்கியதாக வழக்கு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்