நாளை ஆக்லாந்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றால் மீண்டும் பந்துவீச்சினை தேர்வு செய்வீர்களா – ரோஹித் ஓபன் டாக்

Rohith

வெலிங்டனில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.

Team

இந்த தோல்வியின் மிக முக்கிய காரணமாக அமைந்தது பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தால் பெரிய ஸ்கோரினை அடித்து வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், பவுலிங்கை தேர்வு செய்து இந்திய அணி தோல்வியை அடைந்தது.

இந்நிலையில் நாளைய இரண்டாவது போட்டியில் டாஸ் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் இடம் பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த ரோஹித் : கொஞ்சம் குழப்பமான கேள்வி இது. முதல் போட்டியில் எடுத்த தவறான முடிவால் இந்திய அணி தோல்வியை அடைந்தது.

Newzealand

அடுத்த போட்டியில் மைதானத்தின் தன்மை, முந்தய போட்டிகளின் முடிவுகள் மற்றும் மைதானத்தின் பவுண்டரி எல்லைகளின் தூரம் என அனைத்தையும் கணக்கிட்டு பின்னரே டாஸ் முடிவை எடுக்க போகிறேன். அடுத்த போட்டியின் முடிவு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும்.

இதையும் படிக்கலாமே :

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிற்கும் வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு – சேவாக் பதிலை பாருங்கள். அட செம போங்க

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்