நோய் தாக்குதலுக்கு உண்டான ரோஜா செடியின் இலைகளை வெட்டிய பிறகு இதைத் தெளித்து பாருங்கள், மொட்டுகள் தாறுமாறாக பூக்கும்.

cow-dung-rose-plant
- Advertisement -

நோய் தாக்குதலுக்கு உண்டான ரோஜா செடிகள் பெரும்பாலும் நீங்கள் என்னதான் வெட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் அதே போல நோய் தாக்குதலுடன் துளிர்க்க ஆரம்பிக்கும். இலையில் மஞ்சள் நிறமாக இருப்பது, இலை சுருங்கல், பூச்சி அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இலைகள் வளர்ச்சி தடைபடும் போது நோய் தாக்குதலை உறுதி செய்து கொள்ளலாம். வேர் பகுதி அழுகிவிடும் போதும் இலைகளுக்கு இத்தகைய பாதிப்புகள் உண்டாகும். இதிலிருந்து தப்பிக்க வைக்க இந்த ஒரு இயற்கையாக கிடைக்கும் மருந்தை தெளித்தால் போதும். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ரோஜா செடியில் இருக்கும் இலைகள் வாடி வதங்கி போய் மீண்டும் துளிர்க்க முடியாத சமயத்தில் நாம் அந்த இலைகளை எல்லாம் வெட்டி விட்டு மீண்டும் துளிர்க்கும் வரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் மீண்டும் துளிர்க்கும் புதிய இலைகள் கூட அதே மாதிரியான பிரச்சினைகளோடு துளிர்க்கும் பொழுது என்ன செய்வது?

- Advertisement -

இது போல் நீங்கள் ரோஜா செடியினை வெட்டிவிடும் சமயத்தில் இந்த மருந்தை தெளிப்பது சரியாக இருக்கும். இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இந்த மருந்து வேறு ஒன்றும் இல்லைங்க. மாட்டில் இருந்து கிடைக்கக் கூடிய சாணம் தான். மாட்டு சாணத்தில் இருக்கும் சத்துக்கள் பூச்சி விரட்டியாக செடிகளுக்கு செயல்படும். செடிகளுக்கு உரமாகவும் மாட்டு சாணத்தை கொடுப்பது வழக்கம்.

dry-rose-plant

மாட்டுச் சாணத்தை உரமாக மட்டுமல்லாமல் இப்படி பூச்சி விரட்டியாக கொடுத்தால் கூட நோய் தாக்குதலுக்கு உட்பட்ட செடிகள் மீண்டும் துளிர்க்கும் பொழுது புத்தம் புதியதாக நோய் தாக்குதல் இன்றி துளிர்க்கும். அதிக மொட்டுக்களும் வைக்கும். எனவே தேவையான அளவிற்கு மாட்டு சாணத்தை எடுத்து தண்ணீரில் ஒரு பக்கெட் முழுக்க கரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் எனவே செடிகளுக்கும் பூச்சி விரட்டியாக செயல்பட்டு செடிகளின் வளர்ச்சியை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

- Advertisement -

கரைத்து வைத்துள்ள சாணம் மற்றும் மஞ்சள் கலவையை கைகளில் எடுத்து உங்கள் ரோஜா செடிகளில் இருக்கும் இலைகளை வெட்டிய பிறகு தெளித்து கொள்ளுங்கள். இப்படி எல்லா வகையான செடிகளுக்கும் நீங்கள் தெளித்தால் எவ்விதமான பூச்சி தாக்குதலும் இன்றி உங்களுடைய செடிகள் புத்தம் புதியதாக பூத்துக் குலுங்கும். மீண்டும் முளைக்கும் இலைகள் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் புத்தம் புதியதாக பிரஷ்ஷாக முளைக்கும்.

cow-dung-liquid

ரோஜா செடிகளை வாங்கி வைத்தால் மட்டும் போதாது, அதனை சரியான பராமரிப்பு கொடுத்து வளர்த்து வரும் பொழுது தான் அது நிறைய பூக்களை கொடுத்து நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். இயற்கையாக கிடைக்கக் கூடிய இந்த பூச்சி விரட்டிகளை வைத்து வீட்டில் இருக்கும் செடிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால் போதும், செயற்கை ரசாயனங்கள் கலந்துள்ள பூச்சி விரட்டிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் இச்செடிகள் நன்கு இலைகளை துளிர்த்த பிறகும், உரமாக வேர்களுக்கு மாட்டு சாணத்தை வாரம் ஒருமுறை கொடுத்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் இம்முறையில் உங்கள் வீட்டு ரோஜா செடிகளை நோய் தாக்குதல் இன்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -