ரோஜா செடிகளின் இலையில், பூச்சி பிடிக்காமல், நிறைய மொட்டுக்கள் வைத்து பூ பூக்க, இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் போட்டாலே போதும்.

rose-plant
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் ரோஜா செடியாக இருந்தாலும், மற்ற பூச்செடியாக இருந்தாலும், காய்கறி செடியாக இருந்தாலும், அந்த மண்ணிற்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து என்பது சரியான முறையில் இருக்கவேண்டும். அப்படி ஊட்டச்சத்து குறைந்த செடிகளின் இலைகள், சீக்கிரமாகவே பூச்சி பிடித்து, பழுப்பு நிறம் அடைந்து, இலைகள் உதிர ஆரம்பிக்கும். அப்போது, செடிகள் நன்றாக வளராது. நிறைய பூக்கள், நிறைய காய் காய்க்காது. இதற்கு நம் வீட்டில் இருக்கும், பொருட்களை வைத்தே சுலபமான முறையில், உரத்தை நம் கையாலேயே தயாரிக்கப் போகிறோம். கஷ்டப்பட வேண்டாம். சுலபமான முறையில் தயாரிக்கக்கூடிய பொடி தான் இது. அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rose

நம் வீட்டில் சமையலில் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் கருவப்பிள்ளையை நிறைய பேர் வீன் ஆக்கிவிடுவார்கள். ஆனால், அந்த கருவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களுக்கு மட்டும், அந்த இரும்புச்சத்து பயன்படுவது இல்லை. செடிகளுக்கும் இந்த இரும்பு சத்து அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற ஒரு விஷயம்தான். இந்த உரத்திற்கு, கட்டாயமாக கறிவேப்பிலை இருக்க வேண்டும்.

- Advertisement -

ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் செடிகளுக்கு, காய்ந்த கறிவேப்பிலை, காய்ந்த வாழைப்பழத்தோல், காய்ந்த வெங்காயத் தோல் இவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கருவேப்பிலையை ஒரு பேப்பரில் போட்டு நிழலிலேயே உங்கள் வீட்டில், ஓரமாக வைத்து உலர விடுங்கள். அது மூன்றிலிருந்து நான்கு நாட்கள் நன்றாக காய்ந்ததும், கைகளால் எடுத்து அதை நொறுக்கினால், உடையும். அந்தப் பதத்தில் இருக்க வேண்டும்.

karuvepilai

இதேபோல், வாழைப் பழத் துண்டுகளையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பேப்பரில் போட்டு நிழலில் உலர்த்தி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தின் மேல் தோலை மட்டும் தண்ணீரில் போட்டுக் கழுவுவதற்கு முன்பாகவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் முட்டை தோல் இருந்தால் அதையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் சைவம் என்றால் அதை தவிர்த்து விடுங்கள். வேக வைத்து அவித்த முட்டையிலிருந்து உரித்த தோலை பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

பச்சை முட்டை தோலை, கொஞ்சம் தண்ணீரில் போட்டு கழுவி, காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உலர்ந்த கறிவேப்பிலை, உலர்ந்த வாழைப்பழத் தோல், உலர்ந்த வெங்காயத்தை தோல், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளலாம். (உங்களால் மீதமுள்ள பொருட்களை எல்லாம் சேமிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, வெறும் கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைத்து, பொடி செய்து செடிகளுக்கு உரமாக போடுவதில் தவறு ஒன்றும் இல்லை.)

உங்கள் வீட்டில் எந்த செடி இருந்தாலும் பரவாயில்லை. அந்த செடியின் வேரை சுற்றி கொஞ்சம் மண்ணை கிளறி விட்டு, ஒரு ஸ்பூன் அளவு இந்தப் பொடியை போட்டு மண்ணில் மீண்டும் மூடி விட்டால், போதும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த உரத்தை போடுங்கள். செடியின் வேருக்கு அதிகப்படியான சத்துக்கள் சேர்ந்து, உங்களது செடியின் இலைகள் பூச்சி அரிக்காமல், கறுத்துப் போகாமல், பழுத்துப் போகாமல், செழிப்பாக வளர்ந்து அதிகப்படியான பூக்களை தரும். காய்கறி செடிகளாக இருந்தால், பழ செடிகளாக இருந்தால், அதிகப்படியான காயும் காய்க்கும், என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
செல்வ வளத்தை தரும் இந்த 2 செடிகளை இந்த திசையில் வைத்து பாருங்கள்! இன்னும் அதிர்ஷ்டம் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான தோட்டக்கலை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -