ரோஜா செடி வைக்க போறீங்களா? தொட்டியில் மண்ணை எப்படி தயாரிக்க வேண்டும்? இப்படி பண்ணிட்டு ரோஜா செடி வைங்க ஒரு கிளையிலேயே கொத்து கொத்தா பூக்கள் பூத்து தள்ளும்!

rose-uram-cocopit
- Advertisement -

பூக்காத ரோஜா செடியும் பூப்பதற்கு முதலில் மண்வளம் சரியாக இருக்க வேண்டும். மண்ணின் தரம் சரியாக இருந்தால் எந்த விதமான செடியும் நன்கு செழித்து வளரும். அந்த வகையில் புதிதாக ரோஜா செடி வாங்கி வைப்பவர்கள் அதற்கு உரிய மண்ணை முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரோஜா செடி வைப்பதற்கு தேவையான மண் கலவை என்ன? என்பதைத் தான் இந்த தோட்டக் குறிப்பு ரகசியங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடியை வைப்பவர்கள் முதலில் வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை தூக்கி எறியாமல் சேகரித்துக் கொண்டே வாருங்கள். சமையல் கட்டில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து கிடைக்கக் கூடிய நார் செடி வளர்ச்சிகளுக்கு மிக முக்கியமான உரமாக இருக்கிறது. கோகோ பீட் எனப்படும் இந்த தேங்காய் நார் உரத்தை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

- Advertisement -

சேகரித்து வைத்த தேங்காய் நாரை நன்கு வெயிலில் காய வைத்துக் கொண்டே வாருங்கள். பின்னர் தேவையான அளவிற்கு சேர்த்ததும் ஒரு பேப்பரில் தேங்காய் நாரை ஒவ்வொன்றாக எடுத்து சிறிது சிறிதாக பிரித்துக் கொள்ளுங்கள். இப்படி பிரிக்கும் பொழுது தேங்காய் நாரிலிருந்து தூள்கள் கொட்ட துவங்கும். இது போல எல்லா நாரையும் பிரித்து எடுத்த பின்பு மீதம் இருக்கும் நாரை சிறு சிறு துண்டுகளாக கத்தரிக்கோலால் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். தூளாக கிடைத்த தேங்காய் நாரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மண்புழு உரம் மற்றும் செம்மண் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செம்மண் இல்லையென்றால் நீங்கள் சாதாரண தோட்ட மண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு தொட்டி அல்லது பக்கெட்டில் முதலில் சிறு சிறு கற்களை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது செம்மண் அல்லது தோட்ட மண்ணை போடுங்கள். பின்னர் நீங்கள் வெட்டி வைத்துள்ள தேங்காய் நாரை சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஊற வைத்துள்ள தேங்காய் துளையும் சேர்த்து அதன் மீது தோட்ட மண்ணை மீண்டும் நிரப்புங்கள். இது போல ஒவ்வொரு லேயராக கொஞ்சம் தோட்டம் மண்ணும் கொஞ்சம் மண்புழு உரமும் சேர்த்து கலந்து போட வேண்டும். அதே போல இடை இடையே நீங்கள் தயாரித்து வைத்துள்ள தேங்காய் நார் தூளையும் சேர்க்க வேண்டும். இப்படி கலந்து வைத்த பின்பு நீங்கள் உங்களுடைய செடியை நட்டு வைக்கலாம்.

செடியை நட்டு வைத்த பின்பு மீண்டும் கடைசியாக மண்ணை போட்டு மூடி தண்ணீர் தெளித்து விடுங்கள். இது சத்துள்ள நல்ல ஒரு மண் கலவையாக இருக்கும். அதனால் ஒவ்வொரு கிளைகளும் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதற்கு இது பெரும் அளவிற்கு உதவி செய்யும். மேலும் மண்புழு சேர்ப்பதால் மண்ணின் தரம் மேலும் மேலும் கூடிக் கொண்டே இருக்கும். இதனால் செடிகள் எப்பொழுதும் வாடாமல் செழித்து வளரும். வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்து கொண்டே வாருங்கள், பூச்சிகளும் தாக்காமல் செடிகள் சூப்பராக நிறைய பூக்களை கொடுக்கும்.

- Advertisement -