உங்கள் வீட்டில் நீங்களும் ரோஜா செடியை வளர்க்க வேண்டுமா? அப்படினா நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 குறிப்புகள் இதோ!

- Advertisement -

எல்லோருக்குமே செடி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும் ஆனால் முதன் முதலில் செடி வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வகையான செடி தான் ரோஜா. ரோஜா செடியை விரும்பாதவர்கள் என்று யாருமே கிடையாது என்று கூறலாம். ஆண், பெண் வித்தியாசமின்றி ரோஜாவை விரும்புபவர்கள் அதனை வளர்த்து அதிலிருந்து வரும் ரோஜாவை தனக்கு பிடித்தமானவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். முதன் முதலாக இவ்வாறு ரோஜா செடியை வாங்கி வளர்க்க நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய 10 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

குறிப்பு 1
ரோஜா செடியை நீங்கள் நர்சரிகளில் வாங்கும் பொழுது அதில் செம்மண் கலவை இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள். செடி வளர செம்மண் கலவை நல்ல தேர்வாக இருக்கும். செம்மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து தயாரித்த தொட்டியில் ரோஜா செடியை வளர்த்தால் நன்கு செழிப்புடன் வளரும்.

- Advertisement -

குறிப்பு 2
ரோஜா செடியின் மண் வளம் கவனித்த பிறகு அதில் காற்றோட்டம் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். மண் தளர்வாக பொலபொலவென்று இருக்க வேண்டும். இறுகிய நிலையில் மண் இருந்தால் அதற்கு தேவையான காற்று கிடைக்காமல் செடியின் வளர்ச்சி தடைபடும். எனவே மண் தளர்வாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருங்கள்.

rose-plant

குறிப்பு 3
ரோஜா செடியை நடவு செய்த பின் அதன் வேர்களை சூழ்ந்திருக்கும் மண்ணை மற்ற எந்த வகையான பொருட்களும் அல்லது செடியின் வேர்களும் இல்லாதவாறு சுத்தம் செய்து கொள்ளுங்கள். இது புதிய மண்ணை அந்த செடி ஏற்று தன் வளர்ச்சியை சிறப்பாக கொடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4
ரோஜா செடியில் தண்ணீர் ஊற்றிய பிறகு அது நன்கு தண்ணீரை உறிஞ்சி கொள்கிறதா? என்பதை கவனியுங்கள். அதன் பிறகு அதில் இயற்கையாக கிடைக்கும் எரு கலவை பயன்படுத்தி உரம் கொடுக்க வேண்டும். எருவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் ரோஜா செடி பசுமையாக வளர்வதற்கு நல்ல ஒரு தேர்வாக இருக்கும்.

குறிப்பு 5
நாட்டு ரோஜாவாக இருந்தால் அதனை நீங்கள் மண் தரையிலேயே வைத்து வளர்ப்பது முறையாகும். மற்ற அனைத்து வகையான ரோஜா செடிகளையும் தரையில் வளர்ப்பதை விட தொட்டியில் வைத்து வளர்ப்பது தான் மிகவும் நல்லது. அப்போது தான் அதிக தளிர்கள் விட்டு பூக்களும் அதிகம் பூக்கும்.

- Advertisement -

குறிப்பு 6
ரோஜா செடிக்கு தேவையான அளவிற்கு மட்டுமே தண்ணீரை ஊற்ற வேண்டும். நீங்கள் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் கூட இல்லை. மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தான் தண்ணீரை நாம் கவனித்து ஊற்ற வேண்டும். மண் ஈரப்பதத்துடன் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும், அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.

rose2

குறிப்பு 7
ரோஜா செடியில் இருந்து பூக்களை அவ்வபோது பறித்து விட வேண்டும். அதை அப்படியே விட்டு விட்டால் பூத்து உதிர்ந்து விடும். அதன் பிறகு அதிலிருந்து தளிர்கள் புதிதாக முளைக்காமல் போய்விடும். பூக்களைப் பறித்து விட வேண்டும் அப்படி பறிக்க முடியாமல் உதிர்ந்து விட்டால், அது பூத்த கிளையை நறுக்கி விட வேண்டும். அப்பொழுது தான் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கும், இல்லை என்றால் செடிகள் கருகிவிடக் கூட வாய்ப்புகள் உண்டு.

குறிப்பு 8
இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறும் பொழுது அல்லது இலைகள் சுருங்கி கருகும் பொழுது அதனை நறுக்கி விட்டு விட வேண்டும், அப்படியே விட்டு விட்டால் மற்ற இலைகளுக்கும் அது பரவி விடும் அபாயம் உண்டு. எனவே இதனை தினமும் நன்கு கண்காணித்து வர வேண்டும்.

paneer-rose-plant

குறிப்பு 9
ரோஜா செடிகளை பொறுத்த மட்டும் குட்டையாக வளர்ப்பது தான் மிகவும் நல்லது. ரோஜா செடியை உயரமாக வளர விட்டால் அதில் அதிக பூக்கள் பூக்காது. அவ்வப்போது கிளையின் உயரத்தை வெட்டி விட்டுக் கொண்டே வந்தால் தான் மீண்டும் மீண்டும் முளைத்து அதிக பூக்களை நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். எனவே செடியிலிருந்து பூக்கள் பூக்க பூக்க அதன் கிளைகளை சிறிது சிறிதாக நறுக்கி விட்டு கொண்டே வாருங்கள்.

rose

குறிப்பு 10
ரோஜா செடிகளில் எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதற்கு இயற்கையாக கிடைக்கும் பூச்சிக் கொல்லிகளை மட்டுமே தெளித்து வாருங்கள். சிறிதளவு வேப்பம் பிண்ணாக்கை எடுத்து தண்ணீரில் கலந்து ஊற வைத்து செடிகளின் வேர் பகுதிகளில் அல்லது செடிகளின் மீது நன்கு தெளித்து விடுங்கள். இதனால் நோய் தாக்கும் அபாயம் குறையும். குறைந்தது ஆறு மணி நேரமாவது சூரிய ஒளியில் காற்றோட்டமாக இருக்கும் படி அதனை வைத்து வளர்ப்பது தான் செடியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமையும்.

- Advertisement -