ரோஸ் செடிக்கு முதல் உரமாக இதை மட்டும் கொடுத்துட்டீங்கன்னா போதும். உங்க ரோஸ் செடி வருஷம் முழுசும் பூத்துகிட்டே இருக்கும்.

rose plant
- Advertisement -

செடி வைக்க வேண்டும் என முடிவு செய்து விட்டாலே முதலில் வாங்குவது ரோஜா செடி தான். பூச்செடி என்றாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவதும் இந்த ரோஜா செடி தான். செடி வளர்ப்பவர்கள் தோட்டம் வைத்திருப்பவர்கள் என அனைவரும் கட்டாயம் இந்த ரோஜா செடிகளை விதவிதமான வண்ணங்களில் வாங்கி வைத்திருப்பார்கள். இப்படி வாங்கி வைக்கும் இந்த ரோஜா செடி வாடி வதங்கி விடாமல் வருடம் முழுதும் பூ வைத்துக் கொண்டே இருக்க, செடி வைக்கும் போது இந்த ஒரு உரத்தை தயாரித்து முதல் உரமாக ஊற்றி விட்டால் போதும். அது என்ன உரம் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை எல்லாம் இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரோஜா செடி வருடம் முழுவதும் பூக்க கொடுக்க வேண்டிய உரம் தயாரிக்கும் முறை:
இந்த உரம் தயாரிக்க நமக்கு தேவையான முக்கியமான பொருள் வாழைப்பழம் தோல். அடுத்து ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவை அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் பத்து வாழைப்பழத் தோலை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு முழு நீள கற்றாழை மடலை எடுத்து அதையும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி இந்த வாழைப்பழ தோலுடனே சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு கற்றாழை ஜெல்லை அலசி மேல் தோல் நீக்கி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நாம் செடிக்கு தான் உரமாக கொடுக்கப் போகிறோம் எனவே அப்படியே எடுத்து நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையெல்லாம் சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் காபித் தூளை இதில் சேர்க்க வேண்டும். காபித் தூள் இல்லை என்றால் டீ தூள் அல்லது டீ போட்டு வடிகட்டிய சக்கை கூட இதற்கு பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு ஸ்பூன் அளவிற்கு இதில் சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்த பிறகு இது ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக ஒரு குச்சி வைத்து கலந்து விடுங்கள். தேன் இல்லாதவர்கள் வெல்லம் சேர்த்தும் இந்த உரத்தை தயாரிக்கலாம். இதில் தேன், வெல்லம் சேர்ப்பதால் இனிப்பிற்கு எறும்பு, பூச்சிகள் வரும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனென்றால் இந்த உரத்தை நாம் மூன்று நாட்கள் வரை நொதிக்க வைக்க போகிறோம். அப்படி செய்யும் பொழுது இதில் இருக்கும் இனிப்பு தன்மை அனைத்தும் நீங்கி விடும்.

இந்த கலவையை மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து இதை ஒரு பக்கெட்டில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதை வடிகட்டிய பிறகு மீதம் இருக்கும் பழத்தோலை வீணாக்காமல் மறுபடியும் அதில் ஒரு ஸ்பூன் காபித்தூள் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இன்னொரு முறையும் உரத்தை தயார் செய்யலாம். இப்போது வடிகட்டிய 1 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் அளவு தண்ணீர் கலந்து ஒரு ரோஜா செடிக்கு 1 டம்ளர் வீதம் இந்த உரத்தை கொடுத்தால் போதும்.

- Advertisement -

இந்த உரத்தை கொடுக்கும் பொழுது சூரியன் உதயத்திற்கு முன்பு அல்லது மறைந்த பிறகு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் தான் கொடுக்க வேண்டும். அதே போல இதை கொடுக்கும் பொழுது நாம் ஏற்கனவே செடிக்கு தண்ணீர் ஊற்றி ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் இந்த உரத்தை ஊற்றிய பிறகு செடிக்கு தண்ணீர் ஊற்றினால் இந்த உரக்கலவை நேரடியாக வேருக்கு சென்று அதிகமான சத்துக்களை வேர் உறிஞ்சிக் கொள்ள உதவியாக இருக்கும்.

இதையும் படிக்காலமே: கத்திரிக்காய் செடி பூ வைத்தும் காய்க்காமல் உதிர்ந்து விடுகிறதா? அப்ப இத செஞ்சு பாருங்க. பூக்கும் எல்லா பூவுமே காயாகும். கத்திரிக்காய் அதிகமாக காய்க்க சுலபமான வழி.

இந்த உரத்தை உங்கள் ரோஜா செடிக்கு முதல் உரமாக கொடுத்து விட்டால் வருடம் முழுவதும் பூத்துக் கொண்டே இருக்கும். இதை வாரத்திற்கு ஒருமுறை,

- Advertisement -