மென்மையான உதடுகள் பெற, உதடு கருமை நீங்கி ரோஸ் நிறமாக மாற அதிகம் செலவு செய்யாதீங்க இத செய்ங்க போதும்!

lip-care
- Advertisement -

ஒருவருடைய முகத்தில் பளிச்சென ரோஸ் நிறத்தில் தெரியும் உதடுகள் தான் கவர்ச்சியாக இருக்கின்றது. இந்த உதடுகள் சிலருக்கு மிகுந்த கருப்பாகவும், வறண்டு போயும் காணப்படும். அப்படி அல்லாமல் மீண்டும் மென்மையான பட்டு போன்ற உதடுகள் பெறவும், கருமை நீங்கி பிங்க் நிறத்தில் உதடுகள் செக்க செவேலென மாறவும் பெரிதாக செலவு செய்யாமல் என்ன செய்வது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு ரகசியங்களில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உதடுகள் கருமையாவதற்கு மிக முக்கிய காரணம் சூரிய ஒளியின் தாக்கமாக இருக்கிறது. அதிகம் வெயிலில் சுற்றி திரிபவர்களுக்கு உதடு கருப்பாகத் தான் இருக்கும். அது போல நிக்கோட்டின் புகை பிடிப்பவர்களுக்கும் உதடுகள் கருப்பாக காணப்படுகின்றன. இறந்த செல்கள் உதடுகளில் அப்படியே படிந்து விடுவதால் நாளடைவில் கடுமையாக மாறிவிடுகிறது. முகம் பளபளப்பாகவும் உதடுகள் கருமையாகவும் இருந்தால் நல்லாவா இருக்கும்?

- Advertisement -

இது மட்டும் அல்லாமல் கீமோதெரபி செய்பவர்கள், அனிமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விட்டமின் பற்றாக்குறை உள்ளவர்கள், ப்ளூரைட் அதிகமாக உபயோகப்படுத்துபவர்கள் போன்றவர்களுக்கும் உதடுகள் கருமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதிலிருந்து எளிமையாக நம்முடைய உதடுகளை மென்மையாக்கவும், நிறத்தை மாற்றவும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.

கற்றாழையில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து பேஸ்ட் போல ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து உதடுகளில் லேசாக தடவி பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு மெல்லிய ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளுங்கள். இதனால் உதடுகளில் மெலனின் உற்பத்தி குறைந்து கருமை நீங்கும்.

- Advertisement -

தேன் மற்றும் பன்னீர் இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து உதடுகளில் தினமும் மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் மென்மையாக மசாஜ் செய்து கொடுத்தால், பட்டு போன்ற உதடுகள் உங்களுக்கு கிடைக்கும் வறண்ட தன்மையிலிருந்து மீண்டு ஈர பதத்துடன் இருக்கும். கருப்பான உதடுகளும் குழந்தையின் உதடுகள் போல மிருதுவாக மாறும்.

மாதுளை மற்றும் பீட்ரூட் இவற்றின் சாறுகளை அடிக்கடி ஃபிரஷ் ஆக உதடுகளின் மீது தடவி உலர விட்டு விட வேண்டும். பிறகு ரோஸ் வாட்டர் கொண்டு உதடுகளை மசாஜ் செய்யுங்கள். இது போல தொடர்ந்து செய்து வந்தால் உதடுகளின் கருமை மிக விரைவாகவே நீங்குவதை கண்கூடாக காணலாம். மேலும் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பதாலும் உதடுகளின் வறண்ட தன்மையை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே நாளில் உங்க முகம் கண்ணாடி போல ஜொலிக்கணுமா? அப்படினா ஈசியாக இத ட்ரை பண்ணி பாருங்க!

விட்டமின் ஈ நிறைந்துள்ள பாதாம் பருப்பை பொடி ஆக்கிக் கொள்ளுங்கள். இந்த பாதாம் பருப்பு பொடியுடன் சிறிதளவு பால் சேர்த்து உதடுகளில் தடவி ஐந்து நிமிடம் உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் குளிர்ந்த நீரினால் உதடுகளை கழுவினால் ஈரப்பதத்துடன் மென்மையாக உங்களுடைய உதடுகள் மாறும். இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உங்கள் உதடுகளை மிருதுவாக்கி, ஈர பதத்துடன் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. விட்டமின் ஈ எண்ணெயும் நீங்கள் உதட்டில் தடவி வர நாளடைவில் உதடு கருமை மாறி மென்மையாக மாறும்.

- Advertisement -