சமையலறையில் இருந்து வீணாக கீழே ஊற்றும் இந்த தண்ணீரை ரோஜா மற்றும் தக்காளி செடிக்கு கொடுத்து பாருங்க கொத்துக்கொத்தாக பூத்துக் காய்த்து தள்ளும்!

rose-tomato-plants
- Advertisement -

ரோஜா செடி மற்றும் தக்காளி செடி வளர்ப்பவர்கள் அதில் அதிக அளவு பூக்களையும், தக்காளி பழங்களையும் அள்ளுவதற்கு செலவில்லாமல் வீட்டிலேயே சமையல் கட்டில் தேவையில்லை என்று கீழே ஊற்றும் இந்த தண்ணீரை உரமாக கொடுத்தாலே போதும். சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுடைய செடிகள் கொத்துக்கொத்தாக பூத்தும், காய்த்தும் உங்களுக்கு பலன்களை கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு இயற்கை உரம் பற்றிய தோட்டக்கலை தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

ரோஜா மற்றும் தக்காளி செடியின் இலைகள் எப்பொழுதுமே பச்சை பசேல் என இருந்தால் தான் அதில் அதிக மகசூலை பார்க்க முடியும். இலைகள் நிறம் மாறுவது, நோய் தாக்குதலுக்கு உட்படுவது, காய்ந்து போவது போன்ற பிரச்சனைகளை முதலில் சரி செய்ய வேண்டும். இதற்கு நாம் காசு கொடுத்து சத்துள்ள உரத்தை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

நாம் சமையல் கட்டில் சமையல் செய்யும் பொழுது சத்துள்ள நிறைய பொருட்களை வீணாக கீழே ஊற்றி விடுவது உண்டு. அந்த வகையில் அரிசி களைந்த தண்ணீர் நிறையவே சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே அரிசியை கழுவிய தண்ணீர் ஒரு லிட்டர் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீருடன் ஒரு டம்ளர் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கும்.

அரிசி களைந்த நீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனுடன் நீங்கள் கால்சியம் சத்து கிடைக்க பாலுக்கு பதிலாக முட்டை வேக வைத்த தண்ணீரையும் பயன்படுத்தலாம். பின்னர் நீங்கள் காலையில் டீ போட்டு வைத்திருந்தால் அந்த டீ பாத்திரத்தில் இருக்கும் டீ தூளுடன் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதற்கு பொட்டாசியம் சத்து கிடைக்க ஒரு மூன்று பழுத்த வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அழுகிய பழமாக இருந்தாலும் பரவாயில்லை, அதை மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். மூணு லிட்டர் அளவிற்கு வருமாறு தண்ணீரை தாராளமாக ஊற்றி அரை மணி நேரம் நன்கு ஊற விட்டு விடுங்கள். இப்போது ஒரு செடிக்கு தேவையான எல்லா சத்துக்கள் நிறைந்துள்ள இயற்கை உரம் நமக்கு வீணாக கீழே ஊற்றும் தண்ணீரிலேயே கிடைத்துவிட்டது.

பின்னர் இதை நன்கு திப்பிகள் எதுவும் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வேர் வழியாகவும், இலை மூலமாகவும் உரமாக நீங்கள் உங்களுடைய செடிகளுக்கு கொடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு ஒரு முறை வேரில் ஒரு சொம்பு ஊற்றி வந்தால் போதும். இலை வழியாக உரம் கிடைக்க ரெண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இலைகள் முழுவதும் படுமாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதுபோல நீங்கள் ரோஜா மற்றும் தக்காளி செடிக்கு செய்து வந்தால் அதற்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்து நன்கு செழித்து வளரும். நிறைய பூக்களையும், நிறைய தக்காளி பழங்களையும் உங்களுக்கு கொடுக்கும். இந்த இரண்டு செடிகள் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து வகையான பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகளுக்கும் இதை பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -