அதிவிரைவான அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற, நம்பர் ஒன் ஹேர் ஸ்பிரே வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? எப்பேர்பட்ட முடி பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்ட இந்த 2 பொருள் போதும்.

hair13
- Advertisement -

அதிகப்படியான தலை முடி உதிர்வு, முடி உதிர்ந்த இடத்தில், ஒரு பங்கு கூட முடி வளர்ச்சி இருப்பதில்லை, இதனால் தலையில் வழுக்கை ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதை தடுக்கவும், தலைமுடியில் ஏற்படக்கூடிய அரிப்பு பொடுகு போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும், இந்த குறிப்பு ஒன்றே போதும்.  அதுவும் மிக மிக சுலபமான முறையில், குறைந்த செலவில் தலைமுடி பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல தீர்வை பெறுவதற்கு ஒரு ஸ்பிரே எப்படி தயார் செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த ஸ்ப்ரே தயார் செய்ய ரோஸ்மேரி இலைகள், லவங்கம், அதாவது கிராம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா. இந்த இரண்டு பொருட்கள் போதும். ரோஸ்மேரி இலைகள் உங்களுக்கு பச்சையாகவே கிடைத்தால் அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பச்சையாக ரோஸ்மேரி இலைகள் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் காய்ந்த ரோஸ்மேரி ஆன்லைனில் விற்பனையில் இருக்கின்றது. அதை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 1/2 கைப்பிடி கைப்பிடி அளவு ரோஸ்மரி இலை, 1 டேபிள் ஸ்பூன் கிராம்பை போட்டு, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 15 நிமிடம் தண்ணீர் நன்றாக கொதித்து அரை பாகமாக சுண்டி வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு தட்டு போட்டு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். (காய்ந்த ரோஸ்மேரி இலைகள் இருந்தால் 2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)

கிராம்பிலும் ரோஸ்மேரியிலும் இருக்கக்கூடிய சத்து அந்த தண்ணீரில் நன்றாக இறங்கி இருக்கும். அதன் பின்பு அந்த தண்ணீரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்து நன்றாக ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்தால் 5 நாட்கள் இது கெட்டுப் போகாது. இன்னும் தயார் செய்த ஸ்பிரே நிறைய இருக்கிறது என்றால், ஐஸ் ட்ரேவில் ஊற்றி இதை ஐஸ் கியூபுகளாக செய்து வச்சுக்கோங்க. ஒரு மாசத்துக்கு கெட்டுப் போகாது. தேவையான அளவு ஐஸ் கட்டிகளை எடுத்து வெளியே வைத்து உருக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தலையில் நன்றாக எண்ணெய் வைத்த பின்பு இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் நன்றாக படும்படி இந்த ஸ்ப்ரேவை அடித்துக் கொள்ளுங்கள். முடியின் நுனி பாகம் வரையும் இந்த ஸ்ப்ரேவை அடித்து விட்டு உங்கள் விரல்களைக் கொண்டு மயிர் கால்களை லேசாக மசாஜ் செய்து விடுங்கள். அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு குளித்து விடலாம்.

மாலை இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொண்டு ஈரத்தை நன்றாக காய வைத்து விட்டு, மறுநாள் காலை தலைக்கு குளித்தாலும் தவறு கிடையாது. அது உங்களுடைய விருப்பம் தான். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஸ்பிரேவை பயன்படுத்தி வர மூன்றே மாதத்தில் நம்ப முடியாத மாற்றங்களை காண முடியும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -