ருண விமோசன பிரதோஷம்

Sivan

இன்று சிவ்வாய் கிழமை பிரதோஷ தினம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இன்றைய பிரதோஷ தினத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இன்றைய பிரதோஷ தினம், ருண விமோசன பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது பிறவி கடன் முதல் நமது வாழ்வில் உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளையும் தீர்க்க வல்ல பிரதோஷ தினம் இது. நமது வாழ்வில் உள்ள கடன் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறார் செவ்வாய் பகவான். ஆகையால் இன்று சிவனோடு சேர்த்து செவ்வாயையும் வழிபடுவது அவசியமாகிறது. செவ்வாய் கிழமையில் இந்த பிரதோஷம் வந்திருப்பதால் இது ருண விமோசன பிரதோஷம் ஆகிறது.

sivan

இன்றைய பிரதோஷ நேரத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றுவதோடு, சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அதோடு இன்று செவ்வாய் பகவானுக்கு செண்பக மலரால் அர்ச்சனை செய்து, துவரை மற்றும் வெண்பொங்கலை நெய்வேத்தியம் செய்து வழிபடுவதன் மூலம் நமது கடன் பிரச்சனைகள் தீரும்.

இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, சித்தர்களின் சமாதிக்கு சென்று அவர்களின் ஆசியை பெறுவது போன்ற செயல்களும் நமக்கு நல்ல பலன்களை தரும். அதோடு முருகப்பெருமானை வணங்கினாலும் நாம் செவ்வாய் பகவானின் அருளை பெறலாம்.

இன்றைய நாள் முழக்க பிரதோஷ விரதம் இருந்து சிவன் நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ கூறியபடி இருந்து சிவனை தரிசிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும். இன்று உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். நிச்சயம் இறைவன் உங்கள் மீது கருணை மழை பொழிவார். இந்த ருண விமோசன பிரதோஷ வழிபாடு மூலம் உங்கள் கடன் பிரச்சனைகள் முழுமையாக தீரும் என்று நம்பி வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே:
2018 ஆம் ஆண்டின் பிரதோஷ நாட்கள் எவை எவை தெரியுமா

English overview:
This article is about runa vimochana pradosham benefits in tamil. Pradosham is a good day to worship lord Shivan. If work Sivan as well as Chevvai on Runa vimochana pradosham then all our loan problems will get solved.