கை பக்குவம் நிறைந்த உங்கள் சமையலுக்கு மேலும் ருசி கூட்டும் 10 வகையான இதுவரை அறிந்திராத எளிய சமையல் குறிப்புகள்!

verkadalai-vadai
- Advertisement -

என்னதான் நாம் கை பக்குவத்துடன் ருசியாக சமைத்தாலும் சில வகையான சமையல் டிப்ஸ் தெரிந்து வைத்திருந்தால் இன்னும் நம்முடைய சமையலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சின்ன சின்ன குறிப்புகளின் மூலம் நம்முடைய சமையல் மேலும் மேலும் மெருகேறுகிறது. அந்த வகையில் இந்த 10 வகையான குறிப்புகளும் உங்களுடைய சமையலை கூடுதல் ருசி சேர்க்கும் என்பதில் ஐயமில்லை! வாருங்கள் அதையும் தான் பார்த்து விடுவோம்.

குறிப்பு 1:
மோர் குழம்பு செய்யும் பொழுது மோர் திரியாமல் இருக்க மசாலா கலவை சேர்த்த பின்பு தான் அடுப்பில் மோரை வைக்க வேண்டும். வைத்த பின் குறைந்த தீயில் வைத்து கொதிக்க வைக்கும் பொழுது மோர் திரியாது. அது போல இறக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கி பாருங்கள், அவ்வளவு மணமாக சுவையுடன் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
முற்றிய பாகற்காயை விட, பிஞ்சு பாகற்காய் சமைத்து பாருங்கள், கசப்பு அவ்வளவாக தெரியாது. மேலும் பச்சையாக இருக்கும் பாகற்காயை விட, வெண்மையாக இருக்கும் பாகற்காயில் தான் சத்துக்கள் அதிகம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு 3:
மசாலாக்களுக்கு மிளகாய் வத்தல் வறுக்கும் பொழுது நெடி எடுக்கும். இந்த நெடி எடுக்காமல் இருக்க, இதனால் வரக்கூடிய தும்மல் பிரச்சனையை தடுக்க, மிளகாய் வற்றல் வறுக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 4:
வடகம் தயார் செய்பவர்கள் முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் எண்ணெயில் போட்டு வறுத்தால் மொறுமொறுவென்று சூப்பராக பொறியும்.

குறிப்பு 5:
ஜுரம் வருவது போல இருந்தாலும், ஜுரம் வந்த பின்பும் சிறிதளவு வேப்பம்பூவை நெய்யில் நன்கு வறுத்து எடுத்து உப்பு போட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் ஜுரம் பறந்து போய்விடும். வேப்பம்பூ கடைகளிலும் கிடைக்கிறது.

- Advertisement -

குறிப்பு 6:
அருகம்புல் சார் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஏராளமான தாது உப்புகளும், விட்டமின்களும் அடங்கியுள்ள இந்த அருகம்புல் சாற்றை நேரடியாக குடிக்க முடியாதவர்கள் சப்பாத்தி மாவுடன் பிசைந்து சாப்பிட்டால் இதன் நன்மைகளை முழுமையாக அடையலாம்.

குறிப்பு 7:
பாயாசம் செய்பவர்கள் உலர் திராட்சை இல்லாத சமயங்களில் பேரிச்சம் பழம் இருந்தால் அதை குட்டி குட்டியாக நறுக்கி நெய்யில் பொரித்து எடுத்து சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

குறிப்பு 8:
வேர்க்கடலை கைவசம் இருக்கும் பொழுது அதை தோல் உரித்து நன்றாக வறுத்து பின்னர் ஆற வைத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் இல்லாத சமயங்களில் இந்த வேர்க்கடலை பவுடரை போட்டுக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் வெங்காய பக்கோடா செய்யும் பொழுது கொஞ்சம் இந்த நிலக்கடலை பவுடர் சேர்த்து செஞ்சு பாருங்க, மொறுமொறுன்னு பக்கோடா டேஸ்ட்டியாக இருக்கும்.

குறிப்பு 9:
துருவிய தேங்காய் மீதமாகி விட்டால் அதை வாணலியில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை மீண்டும் சமையலுக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு 10:
அடிக்கடி வடை சுடுபவர்கள் வடை அதிக எண்ணெயை குடிக்காமல் இருக்க உளுந்த மாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வடை சுட்டுப் பாருங்கள். சுவையும் பிரமாதமாக இருக்கும், எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று வடையும் ருசியாக கிடைக்கும்.

- Advertisement -