- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்கலர் துணியில் ஒட்டிய சாயத்தை நீக்க டிப்ஸ்.

கலர் துணியில் ஒட்டிய சாயத்தை நீக்க டிப்ஸ்.

- Advertisement -

துணி துவைப்பது என்பது அன்றாடம் நம் வாழ்வில் செய்யக்கூடிய ஒரு செயலாகும். இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் வீட்டில் வாஷிங் மெஷின் இருக்கிறது. அதில் அனைத்து துணிகளையும் போட்டு துவைத்து விடுவார்கள். அவ்வாறு துவைக்கும் பொழுது ஒரு துணியில் இருக்கும் சாயம் மற்றொரு துணியில் ஒட்டிக்கொள்ளும். அதனால் நமக்குப் பிடித்த துணியை நம்மால் அணிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி கலர் துணியில் ஒட்டிய சாயத்தை நீக்குவது என்று தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

தனித்தனியாக துணியை கையால் துவைக்கும் பொழுது சாயம் போகும் துணி எது? சாயம் போகாத துணி எது என்பதை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஊறவைத்து துவைக்கும் பொழுதோ அல்லது வாஷிங் மிஷினில் போட்டு துவைக்கும் பொழுது ஒவ்வொரு துணிக்கும் நம்மால் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதுமட்டுமல்லாமல் இன்றைய அவசர உலகத்தில் எதில் சாயம் போகிறது என்பதை கவனிக்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

- Advertisement -

இதனால் நமக்கு பிடித்தமான துணியை நம்மால் அணிந்து கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படும். மேலும் இதனால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சரி இப்பொழுது ஒட்டிய சாயத்தை நீக்க என்ன டிப்ஸை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

சாயம் ஒட்டிய துணியை சாயம் ஒட்டிய உடனே சரி செய்ய முயற்சி செய்யும் பொழுது மிகவும் எளிதில் அந்த சாயம் நீங்கிவிடும். அதை தவிர்த்து விட்டு அதை காய வைத்தோ அல்லது அயன் செய்து பிறகோ முயற்சி செய்யும்பொழுது சிறிது சிரமப்பட்டு தான் சாயத்தை நீக்க வேண்டும். முதலில் ஒரு பக்கெட்டில் சாயம் ஒட்டிய துணி மங்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் நாம் துணி துவைக்கும் வாஷிங் பவுடரை சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஹைட்ரஜன் பெராக்சைடு என்று சொல்லக்கூடிய கெமிக்கலை கெமிக்கல் கடையிலிருந்து வாங்கி வந்து ஐந்து மூடி அளவு சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் சாயம் ஒட்டிய துணியை போட்டு நன்றாக அமுக்கிவிட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை எடுத்து துவைக்கும் பொழுது அதில் ஒட்டி இருக்கும் சாயம் நீங்கிவிடும். மேலும் அந்த துணிக்குரிய நிறம் மங்கவே மங்காது. இந்த கெமிக்கலால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனினும் துணியை ஊற வைக்கும் பொழுது ஏதாவது ஒரு குச்சியை பயன்படுத்தி அந்த தண்ணீருக்குள் அமுக்கி வைத்து ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் கைகளிலேயே நாம் அதை துவைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட வீட்டு குறிப்பு.

இந்த ஒரே ஒரு லிக்விட் இருந்தாலே நம்முடைய துணியில் ஒட்டிக்கொண்ட சாயத்தை நம்மால் எளிதில் நீக்க முடியும்.

சற்று முன்