பண வரவை அதிகரிப்பதற்காக பலவிதமான வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். அந்த வழிமுறைகளில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அதனால் பணவரவிலும் தடைகள் உண்டாகும். அப்படிப்பட்ட தடைகளை விலக்கி பணவரவை அதிகரிப்பதற்கு பலவிதமான பரிகாரங்கள் இருந்தாலும் புதன்கிழமை அன்று செய்ய வேண்டிய பரிகாரமாக தான் இந்த வெற்றிலை பரிகாரம் திகழ்கிறது. இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணவரவை அதிகரிக்க
புதன்கிழமை என்பது புதன் பகவானுக்குரிய கிழமை என்றும் புதன் பகவானுக்குரிய அதி தேவதையாக பெருமாள் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அதோடு மட்டுமல்லாமல் இன்று நவமி திதி. நவமி என்பது ராமபிரானுக்கு உரிய திதியாக கருதப்படுகிறது. அதனால் இன்றைய நாளில் பெருமாளை நினைத்து நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும் பரிகாரமும் நமக்கு அளவில்லா நன்மைகளை தரும். பெருமாளை வழிபாடு செய்து பணவரவு அதிகரிக்கவும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகவும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை புதன்கிழமையான இன்று இரவு 11 மணிக்குள் செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு வெற்றிலை, 3 கிராம்பு, 3 ஏலக்காய், கற்பூரம் இருந்தால் போதும். வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு நல்ல நிலையில் இருக்கக்கூடிய புதிதாக வாங்கிய ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆள்காட்டி விரலை பயன்படுத்தி ஒரு சொட்டு நெய்யை எடுத்து அந்த வெற்றிலை முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள்.
இந்த வெற்றிலையை ஒரு தட்டில் வைத்து விட வேண்டும். பிறகு முழுமையாக இருக்கக்கூடிய மூன்று கிராம்பை உங்களுடைய இடது கையில் வைத்து வலது கையால் மூடிக்கொண்டு உங்களுடைய செயலில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு அந்த மூன்று கிராம்பையும் வெற்றிலையின் மீது வைக்க வேண்டும். அடுத்ததாக மூன்று ஏலக்காயை எடுத்து அதையும் இடது உள்ளங்கையில் வைத்து வலது கையால் மூடிக்கொண்டு பணவரவில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த ஏலக்காயையும் கிராம்புடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதில் மூன்று கற்பூர துண்டுகளை வைத்து இந்த வெற்றிலையை தூபம் போடுவதற்கு பயன்படுத்தப்படும் தூப காலில் வைத்து கற்பூரத்தை ஏற்ற வேண்டும். கற்பூரம் எரியும் பொழுது கிராம்பு மற்றும் ஏலக்காயும் சேர்ந்து எரியும். இவ்வாறு எரியும் பொழுது நாம் இதை நம்முடைய வீட்டின் அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக பண வைக்கும் இடத்தில் காட்ட வேண்டும்.
தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் இந்த பரிகாரத்தை செய்து கல்லாப்பெட்டி இருக்கும் இடத்தில் காட்ட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய பணவரவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் ஏதேனும் தடைகள் இருந்தால் அந்த தடைகள் அனைத்தும் விலகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கடன் அடைவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். சொந்த வீடு கட்டும் யோகமும் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே:பணம் பெருக மண்பானை கலசம்
முழு மனதோடு புதன்கிழமை இரவு 11 மணிக்குள் வெற்றிலையை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் பணத்தை சம்பாதிப்பதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.