இன்று நிறைய பேர் வாழ்க்கை தடம் புரண்டு போவதற்கு காரணமாக இருப்பது இந்த எதிர்மறை ஆற்றல் தான். பொறாமையில் ஒருவருக்கு ஒருவர், நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஏவல் பில்லி சூனியம் வைப்பது, செய்வினையை ஏவி விடுவது, இது போன்ற மந்திர தந்திர வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சில பேருக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது.
சில பேருக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால் உங்களுடைய வாழ்க்கையும் இதுபோல எதிர்மறை ஆற்றலின் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுடைய வீட்டில் இதுபோல ஏதாவது கெட்ட சக்திகள் தங்கி இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு முருகர் வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முருகன் மந்திரம்
உலக மக்களை காக்க வேண்டும் என்பதற்காக பராசக்தி தாய், தன்னுடைய அத்தனை சக்தியையும் வேல் ரூபத்தில் முருகனுக்கு கொடுத்துள்ளார்கள். அந்த வேல் நம்மை 24 மணி நேரமும் பாதுகாக்கும். வேலவனை நினைத்து பின் சொல்லக்கூடிய இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் வந்துவிடும். எவ்வளவு பெரிய செய்வினை ஆக இருந்தாலும் அது நம்மை நெருங்காது. ஏற்கனவே உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் அந்த செய்வினை கட்டு உடையும்.
ஒரு தாம்பூல தட்டில் சுத்தமான பசு சாண விபதியை கொட்டி விடுங்கள் அந்த விபூதிக்கு மேலே ‘ஓம்’ என்ற வார்த்தையை உங்கள் ஆள்காட்டி விரலால் எழுதி விடுங்கள். இதை அப்படியே பூஜை அறையில் வைக்கவும். உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலை எடுத்து இந்த விபூதி மேல் நிற்க வைக்கலாம். இன்னும் சக்தி இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.
பிறகு செவ்வரளி பூக்களை வைத்து இந்த வேலுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வேல் இல்லை என்றால் அந்த விபூதிக்கும் மேலேயே செவ்வரளி பூக்களை போடுங்கள். ஓம் என்று எழுதி வைத்திருக்கிறீர்கள் அல்லவா அதுதான் முருகப்பெருமான். ஒவ்வொரு முறை பூக்களை போடும்போதும் ‘ஓம் ஐம் ரீம் வேல் காக்க’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். வழக்கம் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பூஜையை செய்ய வேண்டும்.
இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இப்போது தட்டில் இருக்கும் விபூதியை மட்டும் சேகரித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் குளிக்கும் போது இந்த விபூதியை அந்த தண்ணீரில் போட்டு குளிக்க வேண்டும். கொஞ்சம் விபூதியை தண்ணீரில் போட்டு வீடு முழுவதும் தினமும் தெளிக்க வேண்டும். தினமும் நீங்கள் வெளியே செல்லும்போது இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். விபூதியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் முருக்குப் பெருமானின் வேல் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பொருளாதார பிரச்சினையை நீக்கும் வெண்கடுகு பரிகாரம்
‘ஓம் ஐம் ரீம் வேல் காக்க’ என்ற இந்த மந்திரத்தை சொல்லும் போதெல்லாம் உங்களுக்கு அந்த வேல் வந்து துணையாக காவலாக நிற்கும். இந்த பூஜையை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக செய்து, அந்த விபூதியை எடுத்து தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். 48 நாட்களுக்கு அந்த விபூதியில் பவர் இருக்கும். செய்வினை கட்டு ஏவல் பில்லி சூனியம் கண் திருஷ்டி இது போன்ற எல்லா கெட்ட சக்திகளிடமிருந்து உங்களை காக்கும் மந்திரம், காக்கும் விபூதி இது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் பெறலாம்.