- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல நன்மைகள் உண்டாக பரிகாரம்

சகல நன்மைகள் உண்டாக பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கையில் நமக்கு கஷ்டம் ஏற்படும்பொழுது எல்லாம் ஏதாவது ஒரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வோம். எந்த தெய்வத்தை வழிபட்டாலும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் மட்டும் தீரவே இல்லை என்று புலம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதற்கு அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறுவதற்கு ஒரு எளிமையான பரிகார முறை ஒன்று இருக்கிறது. அந்த பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம்குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சகல நன்மைகள் உண்டாக பரிகாரம்

ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதத்தில் வழிபட வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பூஜை முறைகள் இருக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் இருக்கும். இது நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றவாறு மாறுபடவும் செய்யும். இவ்வளவு விஷயங்களும் இருக்கக்கூடிய தெய்வ வழிபாட்டில் நாம் ஏதேனும் சிறு தவறை செய்துவிட்டாலும் அந்த வழிபாடு பூர்த்தி அடையாது என்று கூறப்படுகிறது. அப்படி நாம் செய்யக்கூடிய வழிபாடு பூர்த்தி அடையாமல் போய்விட்டால் நாம் வேண்டிய வேண்டுதல் நமக்கு நிறைவேறாமல் போய்விடும். இதனால் தான் பலரும் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறவில்லை என்று புலம்புகிறார்கள். இந்த புலம்பலை தீர்க்கவும் அனைத்து தெய்வங்களின் அருளை பெறவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை பச்சைப்பயிறு, கோதுமை மற்றும் கொண்டைக்கடலை. வியாழக்கிழமை அன்று இரவு இந்த மூன்று பொருட்களையும் சமமான அளவு எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊறவைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலை சுத்தமான ஒரு துணியை எடுத்து அதில் இந்த ஊற வைத்த பயறு வகைகளை சேர்த்து மூட்டையாக கட்டி முளைகட்ட வேண்டும். வெள்ளிக்கிழமை முழுவதும் இது அந்த ஈரத் துணியிலேயே இருக்க வேண்டும்.

அப்படி இருப்பதன் மூலம் இந்த பயறுகள் அனைத்தும் முளை கட்டிவிடும். சனிக்கிழமை அன்று இந்த பயறை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்பொழுது இதை அப்படியே எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய பசுமாடு இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும், பசுமாட்டிற்கு பின்பக்கம் இரண்டு புறமும் மஞ்சளை தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் பசு மாட்டின் முன்புறம் நெற்றியிலும் மஞ்சளை தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு பசு மாட்டிற்கு மலர்களை சாற்ற வேண்டும். தீபம் ஏற்ற முடியும் என்றால் தீபம் ஏற்றி வைத்து தூபம் கற்பூர ஆரத்தி காட்டிக்கொள்ளுங்கள். அப்படி இயலாத பட்சத்தில் மஞ்சள் குங்குமம் மலர்களை மட்டும் வைத்தால் போதும். பிறகு பசு மாட்டிற்கு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த முளைகட்டிய பயிறு வகைகளை வாழை இலையில் வைத்து பசு மாட்டிற்கு தானமாக தரவேண்டும். பசுமாடு இவை அனைத்தையும் முழுமையாக சாப்பிட்ட பிறகு பசுமாட்டை ஐந்து முறை வலம் வர வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் அல்லது 16 வாரங்கள் சனிக்கிழமை தோறும் பசு மாட்டிற்கு இந்த முறையில் நாம் தானம் தருவதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் நாம் சேர்த்துள்ள கோதுமை சூரிய பகவானையும், பச்சைப்பயிறு புதன் பகவானையும், கொண்டைக்கடலை குரு பகவானையும் குறிக்கிறது. இவர்கள் மூவரும் சுப கிரகங்கள் என்பதால் இவர்களின் அருளை நாம் பரிபூரணமாக பெற்று நலமுடன் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: நடக்காத காரியத்தை நடத்திக்காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு

இந்த எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்