எதிரிகளின் தொல்லை வேரோடு ஒழியவும், 16 வகையான செல்வங்களும் நம்மை நாடி வரவும் இந்த ஒரு மந்திரத்தை சொன்னாலே போதும்.

sakkarathazhvar
- Advertisement -

ஒருவருக்கு கஷ்டம் ஏற்பட காரணமாக இருப்பது எதிரிகள், நோய்கள் மற்றும் கடன். இவை மூன்றும் இல்லாத ஒருவன் மன நிம்மதியுடன் வாழ்வான் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. நம் கண்களுக்கு தென்படும் எதிரிகளை விட, தெரியாத எதிரிகளால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான் அதிகம். எப்பேர்பட்ட எதிரியாக இருந்தாலும் அந்த எதிரியை ஒழிப்பதற்கு எந்த தெய்வத்தை எந்த மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விஷ்ணு பகவான் தீயவர்களை அழிப்பதற்காக கையில் ஏந்தி நிற்கும் ஆயுதமே சக்கரம். அந்தச் சக்கரத்தை தான் நாம் சக்கரத்தாழ்வார் என்று வணங்குகிறோம். ஒவ்வொரு விஷ்ணு ஆலயங்களிலும் விஷ்ணுவிற்கு எதிராக இந்த சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருப்பார். சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மர் இருப்பார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் மிக்க இந்த சக்கரத்தாழ்வாரை நாம் வணங்கும் பொழுது நம்முடைய எதிரிகளும் நமக்கு இருக்கக்கூடிய தீய சக்திகளையும் அவர் அகற்றுவார்.

- Advertisement -

சக்கரத்தாழ்வாரை வணங்கும் முறை:
சக்கரத்தாழ்வாரை நாம் புதன், வியாழன், சனி போன்ற கிழமைகளில் வணங்கினால் சிறப்புகள் அதிகம். மேலும் ஆனி மாதத்தில் வரக் கூடிய சித்திரை நட்சத்திர நாளன்று சக்கரத்தாழ்வாருக்கு ஜெயந்தி நாளாக விழா எடுத்து கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் நாம் அவரை வணங்கும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

சக்கரத்தாழ்வாருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் துளசி மாலை அணிவிக்க வேண்டும். அவருக்கு நெய்வேத்தியமாக புளி சாதம், தயிர் சாதம் வைக்க வேண்டும். அவருக்கு பின்புறமாக நரசிம்மர் இருப்பதால் பானகமும் சேர்த்து வைக்க வேண்டும்.இவரை நாம் நம் வீட்டிலும் வழிபடலாம். சக்கரத்தாழ்வாரின் புகைப்படம் இருப்பின் அவருடைய புகைப்படத்தை வைத்து நெய் விளக்கேற்றி மேல் சொன்ன முறையில் வழிபடலாம். அவரின் புகைப்படம் இல்லாத பட்சத்தில் பூஜையறையில் சக்கரத்தை கோலமாக வரைந்து அந்தக் கோலத்தில் அவரை நினைத்து நாம் வழிபாடு மேற்கொள்ளலாம்.

- Advertisement -

“ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தை 11, 24, 54, 108 என்ற எண்ணிக்கையில் பாராயணம் செய்ய சக்கரத்தாழ்வாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். “ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நம” இந்த மந்திரத்தையும் மேல் சொன்ன எண்ணிக்கையில் நாம் பாராயணம் செய்யும் பொழுது, நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

சக்கரத்தாழ்வாரை நாம் வணங்குவதால் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகள் அழிவார்கள். வெற்றிப் பாதை தெளிவாக தெரியும். நோய்கள் அகலும். எப்பேற்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகி ஓடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகள் தீரும். நாள் பட்ட கடன் ஒழியும். நவக்கிரகங்களால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் விலகும். நமக்கு தெளிவான ஞானம் கிடைக்கும். 16 செல்வங்களையும் நமக்கு அவர் அருள்வார்.

இதையும் படிக்கலாமே: கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள் கூட உங்களை பார்த்ததும் ஓடி வந்து பணத்தை திருப்பி தந்து விடுவார்கள்.

16 கரங்களையும் அதில் 16 ஆயுதங்களையும் தாங்கி நிற்கும் சக்கரத்தாழ்வாரை நாம் வணங்கி நமக்கு இருக்கக் கூடிய எதிரிகள் அனைவரையும் வெற்றி கண்டு வாழ்வில் நன்மைகள் அனைத்தையும் பெறுவோம்.

- Advertisement -