நீண்டநாள் பிரச்சனையைக் கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் சரி செய்யக் கூடிய சக்தி இந்த அம்மனுக்கு உண்டு. ஒருமுறை இந்த அம்மனின் பெயரை உச்சரித்து வேண்டி பாருங்கள்!

kaliamman-compressed
- Advertisement -

கஷ்டம் இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது. ஆனால், தீராத கஷ்டங்கள் என்பது சில பேரது வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருக்கும். தீராத பிரச்சனைக்கான தீர்வை தேடி, நம்மில் பலபேர், பல இடங்களுக்கு சென்று இருப்போம். பல ஜோதிடர்கள், பல கோவில்கள், பல பரிகாரங்கள், இப்படியாக நம்முடைய தேடல் எல்லையை தாண்டி போயிருக்கும். சில பேர், பிரச்சனை தீர்வதற்கு அதிகப்படியான பணத்தை கூட செலவழித்து இருப்பார்கள். ஆனால், பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்காது. இருப்பினும் பிரச்சனையை தீர்த்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை.

amman

உங்களுடைய பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி, நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தாலும் சரி, நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, நோய் நொடிகள் தீர வேண்டும் என்றாலும் சரி, குடும்ப பிரச்சனை தீர வேண்டும், சொத்துப் பிரச்சனை தீர வேண்டும் எந்த பிரச்சனையாக இருந்தாலும், இந்த பரிகாரம் உங்களுக்கு உடனடி பலனை கைமேல் கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

பொதுவாகவே தீராத துயர் தீர்ப்பதற்கு துணை நிற்பவள் அம்மன். சக்தி வடிவில் அவதாரம் எடுத்த அம்பாளை வழிபட்டால் நம்முடைய துயரங்கள் அனைத்தும் தீரும் என்பதில் சந்தேகமே கிடையாது. அதிலும் குறிப்பாக விஸ்வரூபத்தில், கோபத்துடன் இருக்கக்கூடிய அம்மனை வழிபட்டால் எப்பேர்பட்ட பெரிய பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கிடைக்கும். திடீரென்று உங்களுக்கு ஏதாவது கஷ்டம் வந்து விட்டால் கூட, அம்மனை நினைத்து ‘பராசக்தி’ என்ற பெயரை உச்சரித்தால், நம்மை அறியாமலேயே நமக்கு ஒரு சக்தி கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

kaliamman

நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கும் தீராத துயர் தீர, காளியம்மன், வனபத்ரகாளி, பிரளய காளி, அங்காள பரமேஸ்வரி இப்படியாக எந்த அம்மனை வேண்டுமென்றாலும் நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். துர்க்கையம்மனை கூட மனதில் நினைத்துக் கொள்ளலாம். மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் கொண்டு நினைத்து இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சிவப்புநிற குங்குமத்தை கொஞ்சமாக பன்னீர் அல்லது தண்ணீர் ஊற்றி குழைத்துக் கொள்ள வேண்டும். கலவையை உங்களது மோதிர விரலால் தொட்டு தயாராக இருக்கும் வெள்ளை காகிதத்தில் பின் வரும் மந்திரத்தை எழுத வேண்டும். வெள்ளைக் காகிதத்தில் நான்கு பக்கத்திலும் மஞ்சள் இட்டுக் கொள்ளுங்கள். இந்த மந்திரம், அந்த அம்மனின் சொரூபம் கொண்ட மந்திரம்.

kungumam

முதலில் நீண்ட நாட்களாக இருந்து வரும் ஒரு துயரத்தை நினைத்துக் கொண்டு, அந்தப் பிரச்சனை நீங்க வேண்டும் என்று, அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, வீட்டில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு தீபம், கொஞ்சமாக நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி வைத்துவிட்டு, அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, வாசமுள்ள தூபம் ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு சிவப்பு நிறக் குங்குமத்தை, வலது கை மோதிர விரலால் தொட்டு, தயாராக இருக்கும் வெள்ளை காகிதத்தில் இந்த மந்திரத்தை எழுத வேண்டும். உங்களுக்கான அந்த மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் ஐம் க்லீம் க்ளொம் சாமுண்டாயை விச்சே!

Kaali Amman

ஒரு முறை இந்த மந்திரத்தை எழுதி விட்டால் எல்லா கஷ்டமும் தீர்ந்து விடுமா? என்ற எண்ணத்தோடு எழுதுபவர்களுக்கு நிச்சயம் பலன் கிடையாது. இந்த மந்திரத்தை எழுதுவதன் மூலம் நம்முடைய தலையெழுத்தே மாறப்போகின்றது. நீண்டநாள் துயரம் ஒரு நொடியில் தீரப் போகிறது என்ற எண்ணத்தோடு இதை எழுதி மடித்து அம்மனின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்களுடைய பிரச்சனை தீர்த்ததாகவே நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். கட்டாயம் நீண்டநாள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு அந்த அம்பாள் காட்டுவாள் என்பதில் சந்தேகமே கிடையாது.

lemon-kaali

ஆண் பெண் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பின்பு அந்த காகிதத்தை ஏதாவது ஒரு அம்மன் கோவில்களுக்கு சென்று, மரத்தடியில் வைத்து விட்டு வந்து விடலாம் தவறொன்றும் கிடையாது. மந்திரத்தை எழுதி அம்மனின் பாதங்களில் வைத்துவிட்டு தீப ஆராதனை காட்டி, உங்களால் முடிந்த நெய்வேத்திய பிரசாதத்தை அம்பாளுக்கு படைக்க வேண்டும். ஒரு டம்ளர் பானமாக இருந்தாலும் போதும். முடிந்தால் சர்க்கரைப் பொங்கலை செய்து வைக்கலாம். நம்பிக்கை உள்ள பல பேர் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்துள்ளார்கள், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தினசரி வைக்கும் சாதத்தை எடுக்க வரும் காகம், அமாவாசை திதியிலும், முன்னோர்களை வழிபடும் தினத்திலும், சாதத்தை எடுக்க வரவே மாட்டேங்குதா? இதற்கு என்னதான் காரணம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -