தினசரி வைக்கும் சாதத்தை எடுக்க வரும் காகம், அமாவாசை திதியிலும், முன்னோர்களை வழிபடும் தினத்திலும், சாதத்தை எடுக்க வரவே மாட்டேங்குதா? இதற்கு என்னதான் காரணம்.

crow

நிறைய பேர் வீடுகளில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இது. முன்னோர்களை வழிபட கூடிய அமாவாசை தினத்திலும், அல்லது நம்முடைய முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுக்கும் நேரத்திலும், வீட்டில் அமைதி என்பதே இருக்காது. குறிப்பாக முன்னோர்களின் பூஜையை செய்து முடித்த பின்பு தான், பிரச்சினைகள் வர தொடங்கும். வீட்டில் இல்லாத அளவிற்கு சண்டைகள் வரும். குறிப்பாக மற்ற தினங்களில் எல்லாம் காகத்திற்கு சாதம் வைத்தால், காகம் கூப்பிடாமல் வந்து எடுத்துச் செல்லும். பித்ரு வழிபாட்டை முடித்து விட்டு சாதத்தைக் கொண்டு போய் வைத்தால், கூப்பிட்டாலும் வராது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்பதற்கான தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

tharpanam

நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளின் மூலம் பித்ருக்கள் மனக்குறையோடு இருக்கலாம். நாம் செய்த தவறுகளுக்காக மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள் நம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யாமல் இருந்திருந்தாலும் கூட, அந்தத் தவறு அடுத்தடுத்த சந்ததியினரை தொடரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பித்ருக்கள் நாம் செய்யக்கூடிய பூஜையை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், நாம் கொடுப்பதை மனநிறைவோடு பெற்றுக்கொண்டு, ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது மனக்குறையை முழுமையாக நீக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது? அவர்களை மனம் குளிர வைக்க சில முறைகள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

crow feeding

அதில் முதலாவது அமாவாசை தினத்தன்றும் பௌர்ணமி தினத்தன்றும் பால் கறக்கும் பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை வாங்கி தர வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதில் எல்லோரும் செய்யும் தவறு என்னவென்றால், அந்த கீரையை வாங்கி அப்படியே வீட்டிற்கு கொண்டு வராமல், பசுமாட்டிற்கு சாப்பிட கொடுப்பதுதான்.

- Advertisement -

அந்தக் கீரையை வீட்டிற்கு கொண்டு வந்து, பூஜை அறையில் வைத்து குல தெய்வத்தையும் பித்ருக்களையும் மனதார வேண்டிக்கொண்டு, ‘என்னுடைய முன்னோர்களோ அல்லது நாங்களோ தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுக்கான மன்னிப்பை வழங்க வேண்டும். நாங்கள் செய்யும் திதி தர்ப்பணங்களை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்’. என்று மனதார வேண்டிக்கொண்டு அதன் பின்பு அந்த அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும்.

agathi-keerai-dhanam

அகத்திக்கீரை யோடு சேர்த்து, தலை வாழை இலையில் பச்சரிசி மாவையும் வெல்லத்தையும் கலந்து பசுமாட்டிற்கு கொடுப்பதும் சிறப்பான ஒரு பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவதாக, கோதுமை மாவால் செய்யப்பட்ட பண்டங்களை வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கோதுமை மாவில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து உருண்டை பிடித்து மரத்தடியில் போடலாம். கோதுமை மாவில், சப்பாத்தி மாவு போல பிசைந்து சிறு சிறு உருண்டைகள் பிடித்து, கடலில், குளங்களில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கலாம்.

amavasai

தொடர்ந்து அமாவாசை தினத்திலும் பௌர்ணமி தினத்திலும் வயது முதிர்ந்த அல்லது ஊனமுற்ற, ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும். தொடர்ந்து 11 அமாவாசை தினங்கள், 11 பௌர்ணமி தினங்கள், இந்த பரிகாரத்தை வீட்டிலிருக்கும் குடும்ப தலைவியும் செய்யலாம். குடும்பத் தலைவனும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Kagam

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யத் தொடங்கிய நாள் முதலில் உங்களுடைய வீட்டில் நிம்மதி நிலவ தொடரும். சில மாதங்கள் கழித்து திதி வழிபாட்டை முடித்து விட்டு, அமாவாசை பூஜையை முடித்துவிட்டு, சாதத்தைக் கொண்டு காகத்திர்கு வைத்து பாருங்கள்! மனநிறைவோடு அந்த காகம் எடுத்துச் செல்வதோடு, உங்களுடைய வீட்டிலும் நிச்சயம் நிம்மதி நிலவும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த சின்ன சின்ன விஷயங்களை தினம்தோறும் கடைப்பிடித்து வந்தாலே போதும். வாழ்க்கையில் பல பெரிய பெரிய முன்னேற்றங்கள் நம்மை தேடி வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.