சேலம் ஸ்பெஷல் எசன்ஸ் தோசை ஒரு வாட்டி இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் 10 தோசை சாப்பிட்டாலும் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.

dosai
- Advertisement -

கல் தோசை வார்த்து, அதன் மேலே நாம் தயார் செய்த இந்த கெட்டி கிரேவியை தடவி அப்படியே தோசையை இரண்டாக மடித்து சாப்பிட வேண்டும். இதை தான் எசன்ஸ் தோசை என்று சொல்லுவார்கள். சேலத்தில் இந்த தோசை பிரபல்யம் என்பதால் இந்த தோசைக்கு சேலம் எசன்ஸ் தோசை என்ற பெயரும் வந்தது. இந்த ரெசிபியை இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். நாளைக்கு நீங்க உங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்க போறீங்க.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பட்டை – 1, கிராம்பு – 1, நட்சத்திர சோம்பு – 1, ஜாதிபத்திரி – 1, மராத்தி மொக்கு – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், கசகசா – 1/2 ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 3, தேங்காய் – 1/2 கப், இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவேண்டும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, புதினா இலை – 10 சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, சேர்த்து தக்காளிப்பழத்தை தொக்குப் போல வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். இந்த இடத்தில் உங்களுக்கு, இந்த மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும். அந்த எண்ணெயை கொஞ்சமாக எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி, ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரையும் ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டு இந்த கிரேவியை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஏனென்றால் தேங்காய் விழுதில் மசாலா பொருட்களை பச்சையாக தான் போட்டு அரைத்திருக்கின்றோம் அல்லவா. அந்த பச்சை வாடை முழுவதும் நீங்கி இந்த எசன்ஸ் நமக்கு கிடைக்க வேண்டும். அதாவது சாந்து பக்குவத்தில் கெட்டியாக இது நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

ஏசன்ஸ் தயாரானதும் அடுப்பை அனைத்து விட்டு, கடாயில் இருக்கும் இந்த எசன்ஸை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். சிறிய கிண்ணத்தில், வதக்கும்போது எண்ணெயை எடுத்து வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த எண்ணெயை, இந்த எசன்சின் மேலே ஊற்றி அப்படியே பரப்பி விடுங்கள். அப்போதுதான் இந்த எசன்ஸ் ட்ரை ஆகாமல் இருக்கும். இப்போது தோசைக்கும் மேலே தடவ வேண்டிய எசன்ஸ் தயார். தோசை எப்படி சுடுவது என்று பார்த்துவிடுவோம்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் தோசை போல தோசையை வார்க்க வேண்டும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தோசை சிவந்து வந்ததும் திருப்பி போடுங்கள். தோசை வெந்ததும் தோசைக்கு மேலே தயாராக இருக்கும் இந்த எசன்ஸை தடவி தோசையை அப்படியே இரண்டாக மடித்து பரிமாறினால் சூப்பரான எசென்ஸ் தோசை தயார்.

தோசைக்கு மேலே எசன்ஸை தடவும் போதும் மேலே இருக்கும் எண்ணெயை விட்டுவிட்டு அடியிலிருக்கும் சாந்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் சாந்து தீரும்வரை ட்ரையாகாமல் அப்படியே இருக்கும். ஒரே ஒரு வாட்டி இந்த தோசையை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

- Advertisement -