உப்பு ஜாடிக்கு பக்கத்தில் எண்ணெய் வைக்கலாமா? செல்வம் பெருக இப்படியும் ஒரு வழி இருக்கிறதா?

lakshmi-salt-jaadi
- Advertisement -

உப்பு என்பது மகாலட்சுமிக்கு இணையானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். அத்தகைய மகாலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கும் பொழுது நமக்கு அள்ள அள்ள குறையாத செல்வம் வீட்டில் சேரும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் உப்பு ஜாடிக்கு இருக்கும் சக்தி என்ன? உப்பு ஜாடிக்கு பக்கத்தில் எண்ணெய் வைக்கலாமா? செல்வம் பெருக இந்த உப்பு ஜாடியை என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vishnu-laxmi

கடலில் வாசம் செய்யும் மகாலட்சுமிக்கு கடலில் இருந்து கிடைக்கக் கூடிய இந்த உப்பானது தாய் வீட்டு சீதனம் போன்றது. குடும்பத்தில் சுபிட்சம் நிலவ, கல் உப்பை வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ளுமாறு சாஸ்திரங்கள் அறிவுறுத்துகிறது. எப்பொழுதும் சமையலுக்கு கல் உப்பை பயன்படுத்தினால் ஆரோக்கியம் சிறக்கும் என்று அறிவியல் அறிவுறுத்துகிறது. நம் முன்னோர்கள் கூறி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும், ஒவ்வொரு அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கும் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

- Advertisement -

எப்பொழுதும் உப்பை நம்முடைய தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்கள் எல்லாம் அடுப்பிற்கு பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அடுப்பு எப்பொழுதும் கிழக்கு திசையில் வைத்து, மேற்கு நோக்கி பார்க்குமாறு இருப்பது சரியான முறையாகும். நீங்கள் சமைக்கும் பொழுது கிழக்கு திசையை பார்த்தவாறு சமைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் சூரிய ஒளிக்கதிர்கள் உங்களுடைய அடுப்பின் மீது விழுவது மிகவும் விசேஷமானது. இத்தகைய அமைப்பு உள்ள வீட்டில் செல்வமானது அதிகம் பெருகும்.

epsam-salt

அடுப்பிற்கு பக்கத்தில் வலது புறத்தில் இருக்கும் மூலையில் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் இந்த கல் உப்பை வைப்பது சிறப்பம்சமாகும். ஜாடியை எப்பொழுதும் தரையில் வைக்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கல் உப்பை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைப்பது அல்லது எவர்சில்வர் டப்பாக்களில் போட்டு வைப்பதை தவிர்க்கவும். பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் மட்டுமே கல் உப்பை வைக்க வேண்டும்.

- Advertisement -

வெறும் தரையில் அப்படியே வைக்காமல் அதற்கு கீழே ஒரு சிறிய தட்டு அல்லது மரப்பலகை ஏதாவது ஒன்றை வைத்து அதன் மீது உப்பு ஜாடியை வைப்பது முறையாகும். உப்பு ஜாடி வைப்பதற்கு முன் அதற்கு கீழ் பகுதியில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். பின்னர் உப்பை ஒவ்வொரு முறை வாங்கும் பொழுதும் வெள்ளிக் கிழமையாக பார்த்து வாங்குவது சிறப்பு. உப்பு குறைவதற்குள் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

uppu jaadi

வெள்ளிக் கிழமையில் உப்பு ஜாடியை கழுவக் கூடாது. வியாழன், புதன், ஞாயிறு போன்ற கிழமைகளில் உப்பு ஜாடியை கழுவிச் சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து மீண்டும் உப்பை நிரப்பி வைத்து விட வேண்டும். நிரப்பும் பொழுது அதில் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். இப்படி செய்யும் பொழுது மகாலட்சுமியின் அருள் கிடைத்து உங்களுடைய வீட்டில் கடன் இல்லாமல் செல்வமானது மென்மேலும் பெருக வழி வகுக்கும். உப்பு ஜாடிக்கு பக்கத்தில் மட்டுமே எண்ணெய் வைக்க வேண்டும்.

oil-cane

சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்று எந்த எண்ணெயாக இருந்தாலும், அதனை உப்பு ஜாடிக்கு பக்கத்திலேயே வையுங்கள். உப்பு ஜாடியை தனியாகவும், எண்ணெயைத் தனியாகப் பிரித்து வைக்க கூடாது. அப்படி பிரித்து வைத்தால் குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படும். எனவே இரண்டையும் ஒன்றாக பக்கத்தில் வைத்து அதனை எப்பொழுதும் சுத்தமாக பராமரித்து வாருங்கள். வீட்டில் செல்வமானது நீங்கள் எதிர்பார்ப்பதை விட பன்மடங்கு பெருகும்.

- Advertisement -