எச்சரிக்கை! உப்பு பரிகாரத்தை இப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து விடும்.

salt

எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்ல தீர்வை தருவது இந்த கல் உப்பு. அதாவது, கெட்ட சக்தி நம்மிடம் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றாலும், நம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும் என்றாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிய வேண்டும் என்றாலும், கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என்றாலும் சரி, இப்படி பல வகையான நல்ல விஷயங்களுக்கு, பயன்படுத்தப்படும் இந்த உப்பை தவறான முறையில் யாரும் பயன்படுத்தி விடக்கூடாது.

salt

அப்படி, தவறான முறையில் பயன்படுத்தி விட்டால், நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனையானது, இருக்கும் நிலைமையை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். உப்பை வைத்து, செய்யக்கூடாத தவறு என்ன? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீடு துடைக்கும் போது, அந்த தண்ணீரில் நீங்கள் கலக்கும் மருந்தோடு, ஒரு கைப்பிடி அளவு கல் உப்பையும் சேர்த்து வீடு துவைத்தால், வீட்டில் இருக்கும் கெட்ட ஆற்றல் வெளியேறிவிடும் என்பது உண்மைதான். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டை துடைக்கும் போது, கல்லுப்பு போட்டு துடைக்க கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலானது அதிகரிக்கப்பட்டு, வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் இரட்டிப்பாகி, வீட்டில் இருக்கும் நிம்மதி முழுமையாக குறைந்துவிடும். இதை எத்தனை பேர் நம்புகிறார்கள் என்பது தெரியவில்லை. பல பேர், பணிச்சுமை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று வீடு துடைக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அவர்கள் இந்த தவறை செய்யும் பட்சத்தில், அவர்களது வீட்டில் பிரச்சனை கட்டாயம் அதிகரிக்கும். இது பலரின் அனுபவம், உண்மையும் கூட.

salt-water-bath

இரண்டாவதாக, கல் உப்பை தண்ணீரில் போட்டு குளிப்பது மிகவும் நல்லது. நம் உடம்பில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும், வெளியேறிவிடும். பலபேர் ஞாயிற்றுக் கிழமைகளில் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த கல் உப்பை கலந்து குளிக்க வேண்டாம். மனரீதியான பிரச்சனையும் அதிகரிக்கும். உடல் ரீதியான பிரச்சனையும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் சிறிய கிண்ணத்தில், கல் உப்பைப் போட்டு மூலை முடுக்குகளில் ஆங்காங்கே வைப்பது நல்லது. ஒரு கண்ணாடி டம்ளரில் கல்லுப் போட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்து குளியலறையில் வைப்பார்கள். வீட்டின் கட்டிலுக்கு அடியில் வைப்பார்கள். கதவுக்குப் பின்னால் வைப்பார்கள். இதிலும் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், அந்த உப்பு அழுக்கு படிந்த நிலையில் இருந்தாலோ அல்லது கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கும், தண்ணீர் நிறம் மாறி இருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் கவனிக்காமல், பழைய உறுப்பை எடுத்து கொட்டாமல், பழைய தண்ணீரை கீழே ஊற்றாமல், அப்படியே விட்டு விட்டீர்களானால், அந்த எதிர்மறை ஆற்றல் திரும்பவும் உங்களை இரண்டு மடங்கு அதிகமாக தாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

salt

உப்பை வைத்து பரிகாரம் செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால், ‘தவறில்லாமல் பரிகாரத்தை செய்ய வேண்டும்’ என்பதை மறக்க வேண்டாம். பரிகாரங்கள் அனைத்தும் நமக்கு நன்மை தருவதற்காக தான் சொல்லப்பட்டுள்ளது. அதை யாரும் எக்காரணத்தை கொண்டும், தவறாக பிரயோகப்படுத்தி விடக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்! எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kal uppu pariharam in Tamil. Salt pariharam. Uppu parigarangal. Kal uppu pariharam. Uppu pariharangal Tamil.