பாத்ரூம் டைல்ஸே தெரியாத அளவுக்கு உப்பு கறை படிந்திருந்தால் கூட பத்து நிமிஷத்துல பளிச்சென்று சுத்தப்படுத்திடலாம்.

salt stain bathroom tiles
- Advertisement -

வீட்டை சுத்தப்படுத்தும் வேலைகளிலே அதிக சிரமத்தை தரக் கூடியது பாத்ரூமை சுத்தப்படுத்துவது தான். பாத்ரூமை பொருத்த வரையில் நாம் எப்படி தான் சுத்தப்படுத்தினாலும் ஆங்காங்கே உப்பு கறை படிந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கும். சில இடங்களில் அந்த கறைகள் நிரந்தரமாக கூட படிந்து விடும்.

இந்த உப்பு கறையை போக்க நாமும் பலவிதமான கெமிக்கல் கலந்த பொருட்களை கடைகளில் வாங்கி ஊற்றி கை வலிக்க தேய்த்தாலும் கூட டைல்ஸ் மார்பில் போன்றவை எல்லாம் பழையபடி மாறுவது கிடையாது. ஏனெனில் மறுபடியும் அதில் உப்பு தண்ணீர் பட்டுக் கொண்டிருப்பது தான். இதனால் தரையும் வீணாகும் வாய்ப்பு அதிகம்.

- Advertisement -

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பாத்ரூம் டைல்ஸை எளிமையான முறையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எப்படி சுத்தம் செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த முறையில் சுத்தம் செய்வதால் நமக்கு செலவும் குறைவு அதே நேரத்தில் வேலையும் அதிகம் இருக்காது.

உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்ய

இந்த முறையில் நாம் பாத்ரூமை சுத்தப்படுத்த முதலில் சீயக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் பயன்படுத்தும் எந்த சீயக்காய் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பவுலில் ரெண்டு ஸ்பூன் சீயக்காய் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் ஷாம்பூ இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றிக் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸ் சுவர் என எங்கு உப்பு கறை படிந்து அதிக கறையாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த தண்ணீரை தெளித்து சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு பாத்ரூம் தேய்க்கும் பிரஷ் அல்லது தேங்காய் நார் கொண்டு தேய்த்தால் போதும். உப்பு கறைகள் அனைத்தும் எளிதில் நீங்கி விடும்.

இந்த லிக்விடை கொண்டு பாத்ரூம் டைல்ஸ் மட்டும் அல்லாது தண்ணீர் குழாய், அடுப்பு மேடை போன்றவற்றை கூட சுத்தப்படுத்தலாம். இது அனைத்து கறைகள், எண்ணெய் பிசுக்கு போன்றவை எல்லாம் நீங்கி சுத்தமாக்கும். இந்த லிகிவீட் ஒன்று இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உப்பு கறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

இதையும் படிக்கலாமே: கடைசியில் குப்பை தொட்டிக்கு போகும் இந்த குட்டி குட்டி சோப்பு துண்டுகளை இப்படியும் கூட பயன்படுத்தலாமா?

இனி கை வலிக்க பாத்ரூம் சுத்த படுத்த வேண்டிய அவசியமே இல்லை. உப்பு கறை படிந்த பாத்ரூம் கறையை சுத்தப்படுத்தும் இந்த எளிமையான குறிப்பு உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -