உங்க வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்கள் குறையக் குறைய, பணம் காசும் வீட்டில் குறைந்து கொண்டேதான் செல்லும். நம் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டிய அந்த 3 பொருள் என்னென்ன?

cash1

ஒரு வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் கையில் பணம் காசு என்பது சில சூழ்நிலைகளில் இல்லாமல் கூட போகலாம். ஆனால், ஒரு வீட்டில் இருக்கக் கூடிய பெண்ணின் கையில், கட்டாயம் காசு இருக்க வேண்டும். அந்தப் பெண்மணியின் வாயிலிருந்து ‘என் கையில் காசு இல்லை’ என்ற ஒரு வார்த்தை மட்டும் வரவே கூடாது. அந்த அளவிற்கு பொறுப்போடு ஒரு குடும்பத்தை நடத்தி செல்லும் பெண், வசிக்கும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாங்க என்பதில் சந்தேகமே கிடையாது. சரி, இதற்கு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

women3

நம்முடைய வீட்டில் பூஜை அறை என்று கட்டாயம் ஒன்று இருக்கின்றதோ, இல்லையோ! சமையலறை என்பது கட்டாயம் இருக்கும். சில பேர் பூஜை அறையை ஹாலில் கூட வைத்து இருப்பார்கள் அல்லவா? ஆனால் சமையலறை என்பது கட்டாயமாக ஒரு வீட்டில் இருக்கும். இதற்காக பூஜை அறை  அவசியம் இல்லை என்பது அர்த்தமில்லை. பூஜை அறைக்கு பெண்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களோ, அந்த அளவிற்கு சமையலறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

நம் சமையலறையில் நிறைவாக இருக்க வேண்டிய அந்த மூன்று பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, எடுத்துக்காட்டாக ஒரு நடைமுறை விஷயத்தை பார்த்துவிடுவோம். நம் வீட்டிற்கு வந்து யாகம் நடத்தினாலும் சரி அல்லது வீட்டில் ஏதாவது நல்ல விசேஷத்திற்காக புரோகிதர்கள் வருகை தந்தாலும் சரி, அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் தட்சணை வைத்து கொடுக்கும் போது, அந்தப் பணத்தோடு வாசனை மிகுந்த ஏலக்காய் கிராம்பு இப்படி ஏதாவது ஒரு பொருட்களை வைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

krambu

இது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு சாஸ்திர முறை. வெற்றிலை பாக்கோடு மகாலட்சுமி தேவியை, அதாவது பணத்தை வைத்து பிராமணருக்கு தட்சணை கொடுக்கும் போது, இப்படிப்பட்ட வாசனை மிகுந்த பொருட்களோடு தானம் கொடுப்பார்கள். அவர்களும் அந்த பணம் வெற்றிலை பாக்கு வாசனை பொருட்களிலிருந்து இரண்டை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மீதம் உள்ள வாசனைப் பொருட்களை அந்த தட்டிலேயே வைத்து விட்டு செல்வார்கள்.

- Advertisement -

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மனநிறைவோடு அவர்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த பணத்தின் மூலம், அவர்களுடைய வருமானமும் பெருக வேண்டும். தட்சனை கொடுப்பவர்களுடைய, நம் வீட்டிலும் செல்வ செழிப்பு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அந்தத் தட்டில் மீதம் வாசனை மிகுந்த பொருட்களை மிச்சம் வைத்து விட்டு செல்வார்கள்.

இப்படியாக பணம் காசு ஒருவருக்கு நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால், அதற்கு உறுதுணையாக நிற்பது வாசனை மிகுந்த இந்த ஏலக்காயும் கிராம்பும் தான். இந்த 2 பொருட்களுக்கு முதலிடம் உண்டு. இது தவிர சோப்பையும் நாம் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோம்பிற்க்கும் பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய வீட்டு சமையலறையில் பயன்படுத்தக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் எக்காரணத்தைக் கொண்டும் சுத்தமாக காலி செய்யக் கூடாது. அது கொஞ்சம் மீதம் இருக்கும் போதே, புதியதாக வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் இந்த 3 பொருட்களையும் கண்ணாடி பாட்டிலில் தான் கொட்டி வைக்க வேண்டும். அது நமக்கு மேலும் செல்வத்தை சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

krambu

சிறிய அளவில் மூன்று கண்ணாடி பாட்டில்களை வைத்துக்கொள்ளுங்கள். இப்போதெல்லாம் காபி பவுடர் கண்ணாடி பாட்டிலில் வருகிறதல்லவா? சிறிய அளவிலான அந்த பாட்டில் இருந்தால்கூட போதும். எப்போதுமே நிறைவாக 3 கண்ணாடி பாட்டிலில் இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக கொட்டி வைத்து, 3 பாட்டில்களையும் ஒருசேர உங்கள் வீட்டு சமையலறை அலமாரியில் வைக்க வேண்டும். அந்த மூன்று பாடல்களிலும் கட்டாயம் ஒரு ரூபாய் நாணயம் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

one rupee

இதை மட்டும் உங்கள் வீட்டு சமையலறையில் நிரந்தரமாக வைத்து பாருங்கள். சிலுவான சேமிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். பெட்டியில் இருப்பு காசும் உயர்ந்து கொண்டே செல்லும். வீண் விரயம் குறையும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்மணி கையில் காசு இல்லை என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது.

1 ரூபாய் நாணயத்தை அதில் போட்டு வைத்தால், கிராம்பு சோம்பு இந்த பொருட்களை எல்லாம் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். நீங்கள் அந்த டப்பாவில் போட்டு வைக்கவேண்டும் என்று நினைத்த ஒரு ரூபாய் நாணயத்தை நன்றாக மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, தண்ணீரை உலர வைத்துவிட்டு, அதன் பின்பு அந்த டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தவறொன்றும் கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். பலன் கிடைத்தால் இதன் மூலம் உங்கள் கைக்கு, பணம் சேர்ந்தது என்று மட்டும் வெளியே சொல்ல வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 2 விரதத்தை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் போதும். அதிர்ஷ்டலட்சுமியே நேரில் வந்து உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டுவாங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.