சமையலறையில் இந்த தவறுகள் அடிக்கடி நடந்தால், உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.

kitchen-cash
- Advertisement -

பணக்கஷ்டம் நமக்கு வரப்போகிறது என்பதை உணர்த்துவதற்கு முன்கூட்டியே சில சகுன அறிகுறிகள் நமக்கு தெரியும். ஆனால் அதை எல்லாம் நாம் மனப்பூர்வமாக நம்ப மாட்டோம். பண கஷ்டம் வந்த பிறகு யோசிப்போம். ஓஹோ நம்முடைய வீட்டில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானோ என்று. காலம் கடந்த பின்பு சிந்திப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி சமையல் அறையில் ஏற்படக்கூடிய இந்த சின்ன சின்ன தவறுகளின் மூலம் பணம் கஷ்டம் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.

சமையலறையில் கவனக்குறைவால் கூட இந்த தவறுகள் ஒருபோதும் நடக்கவே கூடாது. அது எந்தெந்த தவறுகள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தவறுகள் எல்லாம் உங்கள் மனதிற்கு சரி தான் என்று படும் பட்சத்தில் அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். இதெல்லாம் இயல்பாக நடக்ககூடிய விஷயம் தான். இதன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பவர்கள் இதை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அது அவரவர் விருப்பம்.

- Advertisement -

முதலாவதாக சமையலறையில் நாம் ஸ்டோர் செய்து வைத்திருக்கும் அரிசி பருப்பு, தானியத்தில், புழு, பூச்சி, வண்டு, நூலாம்படை வரவே கூடாது. உணவுப் பொருட்கள் இருந்தால் அதில் பூச்சி புழு வண்டு வருவது இயல்பு தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி நம் வீட்டில் வாங்கி வைத்திருக்கக் கூடிய மளிகை பொருட்களில் சீக்கிரம் சீக்கிரமாக பூச்சி பிடிக்கிறது என்றால், உங்களுடைய வீட்டில் கண்ணுக்குத் தெரியாத தீட்டு தோஷம் ஏதோ இருக்கிறது என்று அர்த்தம்.

கூடுமானவரை மொத்தமாக வாங்கி வைக்கக் கூடிய பொருட்களை தனியாக பூஜை அறையில் கூட வைத்துக் கொள்ளளாம். அதாவது மூட்டை மூட்டையாக சில பொருட்களை நம் வீட்டில் வாங்கி சேமித்து வைப்போம் அல்லவா. அந்த பொருட்களை எல்லாம் பெண்கள் தீட்டு காலத்தில் இருக்கும்போது தொடக்கூடாது. சமையலறையில் நம்முடைய தேவைக்கு ஏற்ப சின்ன சின்ன டப்பாவில் போட்டு வைக்கும் பொருட்களை எடுத்து தான் சமைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி பெண்களுக்கு இருக்கக்கூடிய மாதவிடாய் சமயத்தில் பெண்களின் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் சீதோசன நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த சமயத்தில் மொத்தமாக இருக்கும் பொருட்களை தொடும்போது அந்த பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உதாரணத்திற்கு அந்த காலத்தில் பாட்டிகள் சொல்லுவார்கள். இப்படி பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருந்தால் ஊறுகாய், வடகம், போன்ற பொருட்களை தொடக்கூடாது. தொட்டால் அந்த பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போய்விடும் என்று.

இந்த விஷயங்களை எல்லாம் இப்போது மூடநம்பிக்கை என்று நாம் அதை கடைபிடிப்பதே கிடையாது. ஆனால் அந்த தவறை நீங்க செய்யாதீங்க. மொத்தமாக இருக்கக்கூடிய பொருட்களை கூடுமானவரை தீட்டு சமயத்தில் தொடாதீர்கள். அப்படி வீட்டில் சேகரித்து வைத்திருக்கும் தானியங்கள் அரிசி பருப்பு வகைகளில் பூச்சி பிடிக்கும் போது வீட்டிற்கு ஒரு தரித்திர நிலையை உண்டு பண்ணிவிடும். (சமையலறையில் மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு இருந்தாலும் தீட்டு சமயத்தில் அதை நீங்க தொடாதீங்க. தேவை என்றால் வீட்டில் இருப்பவர்களை அதிலிருந்து கொஞ்சமாக எடுத்துக் கொடுக்க சொல்லுங்க.)

- Advertisement -

அடுத்தபடியாக நாம் சமைத்த உணவு அடிக்கடி கெட்டுப் போகிறது. பால் அடிக்கடி பொங்கி கீழே வலிக்கிறது. சமைத்த உணவை வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவதே இல்லை. சமையலில் ருசி இல்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு பசி ஜீவன் இல்லை என்ற பிரச்சினைகள் எல்லாம் இருந்தாலும் அது உங்களுடைய வீட்டிற்கு ஏதோ ஒரு கெட்ட சகுனத்தை உணர்த்துவதாக தான் அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: இந்த தேவதையின் ஆசி உங்களுக்கு கிடைத்தால் போதும், உங்கள் வாழ்கை சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்ததாக மாறுவதை யாராலும் தடுக்கவே முடியாது.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருந்தால் உங்களுடைய வீட்டை முதலில் தலைகீழாக புரட்டிப் போட்டு சுத்தம் செய்து, மஞ்சள் தண்ணீர், கோமியம் தெளித்து வீடு முழுவதும் வாசனை நிறைந்த சாம்பிராணி தூபத்தை போட வேண்டும். வீட்டிற்கு உங்கள் வீட்டு வழக்கப்படி திருஷ்டி கழித்து விடுங்கள். நிச்சயம் பெரிய அளவில் எந்த கெடுதலும் நடக்கக்கூடாது என்று குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -