சமையல் அறையில் பெண்கள் இந்த விஷயங்களை பின்பற்றி வந்தாலே போதும். வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி விடுவாள்.

kitchen-lakshmi
- Advertisement -

ஒரு வீட்டின் மகாலட்சுமி அம்சம் கொண்டவள் தான் பெண். வீட்டில் இருக்கும் பெண்கள் மன நிம்மதியோடு, நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக இருந்தாலே போதும். அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு லட்சுமிகடாட்சமும் சுபிட்சமும் நிறைவாகக் கிடைக்கும். அந்த வீடும் கோவிலாக இருக்கும். பெண்களுடைய மனதில் குழப்பம், மன நிம்மதி இல்லாமல் எப்போதும் சஞ்சலத்தோடு இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் தொடர் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். பெண்கள் என்றாலே அவர்கள் அதிக நேரம் இருப்பது சமையல் அறையில் தான். சமையலறையில் என்னென்ன விஷயங்களை சரியான முறையில் பின்பற்றி வந்தால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்பதைப் பற்றிய சில சாஸ்திர ரீதியான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சமையலறையில் கூடுமானவரை பெண்கள் இரும்பு பாத்திரத்தை சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இரும்பு தோசைக்கல், இரும்பு கடாய், இரும்பு சட்டி போன்ற பாத்திரங்களில் தினம்தோறும் சமைக்கும் பழக்கத்தை கொண்டுவரும் போது உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல முடிந்தவரை ப்ளாஸ்டிக் டப்பாக்களை சமையலறையில் பயன்படுத்தும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் குளிர்சாதன பெட்டியை வைக்க வேண்டாம். சமையலறை பக்கத்திலோ அல்லது டைனிங் ஹாலில் குளிர்சாதனப் பெட்டியை வைப்பது சாஸ்திர ரீதியாக நல்லது.

இதேபோல ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலை அசுத்தமாக இருந்தால் அதனுடைய பாதிப்பு அந்த வீட்டில் இருக்கும் பெண்களையே சேரும். பெண்களின் மனதும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டால் அந்த வீட்டில் இருக்கக்கூடிய அனைவரின் முன்னேற்றமும் தடைபடும். வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சமையலறையில் எப்போதுமே ஒரு அஷ்ட லட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. அந்த அஷ்ட லட்சுமி திருவுருவப் படத்திற்கு முன்பு மண் குடுவையில் கல்லுப்பு‌ வைத்து அந்த கல் உப்பை சமையலுக்கு பயன்படுத்தி வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இது அல்லாமல் ஒரு சமையலறை என்றால் அந்த சமயலறையில் கட்டாயமாக ஊறுகாய் நிரம்ப இருக்கவேண்டும். அஞ்சறைப்பெட்டி இருக்க வேண்டும். அஞ்சறைப்பெட்டியில் வெந்தயம், பட்டை, கிராம்பு, மஞ்சள் தூள்,  நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். இவை அனைத்துமே லட்சுமி கடாட்சம் நிலைத்திருப்பதற்க சாஸ்திர ரீதியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள்.

மேல் சொன்ன விஷயங்களை மட்டும் பின்பற்றிவிட்டு எங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவில்லை. வறுமை இருக்கத்தான் செய்கிறது. மன நிம்மதி கிடைக்கவில்லை. என்று சொல்லக்கூடாது. இதோடு சேர்த்து வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்தவுடன் சுத்தபத்தமாக குளித்து, வீட்டையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர வேண்டும். மனசுத்ததோடு சேர்ந்த, உடல் சுத்தமும், நிறைவான இறைவழிபாடும் இருந்தால் மேல் சொன்ன மாற்றங்கள் உங்களுக்கு நிச்சயமாக கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -