நீங்கள் என்ன செய்தாலும் சமையல் ருசிக்கலையா? அப்படின்னா அன்னபூரணியை இப்படி செய்து பாருங்க! அதன் பிறகு நீங்கள் தான் சமையலின் ராணி!

cook-anna-poorani

ஒரு சிலர் என்ன சமைத்தாலும் அதில் அப்படி ஒரு அலாதியான ருசி அமைந்துவிடும். அவரின் கை பக்குவத்திற்கு வேறு யாரும் ஈடு இணை இல்லை என்று மற்றவர்கள் மிகவும் பெருமையாக பாராட்டி விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ என்ன செய்தாலும் அவர்களுக்கு சமையலில் ருசி என்பது வருவதில்லை. அவர்களும் விதவிதமான சமையல்கள் செய்து பார்ப்பார்கள்! ஆனால் எந்த பயனும் இருக்காது. சமையல் என்பது ஒரு ‘கலை’ என்று இதனால் தான் கூறப்படுகிறது. இக்கலை அனைவருக்கும் எளிதில் வந்து விடுவதில்லை! சரி இக்கலையின் ராணியாக மாற என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

cooking'

சமைக்கும் பொழுது எப்பொழுதுமே மனம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது முதல் விதி ஆகும். வேண்டாவெறுப்புடன் சமைக்கும் பொழுது அந்த சமையலில் ருசி என்பது கட்டாயம் வருவதில்லை. அன்னம் என்பது அன்னபூரணியை குறிக்கிறது. அன்னமும் ஒரு கடவுள் தான் என்பதற்கு கைலாயத்தில் திருவிளையாடல் ஒன்று நடந்தது. அந்த திருவிளையாடலில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனையும் மாயை என்று கூறுகிறார். ஆனால் அன்னை பார்வதியோ இதனை ஏற்க மறுக்கிறார்.

அன்னம் மட்டுமல்ல எல்லா பொருட்களும் தனித்துவமான ஆற்றல்களை கொண்டுள்ளது. எதுவும் மாயை இல்லை என்பதை உணர்த்த அவர் மறைந்து போனார். அன்னை மறைந்த சிறிது நேரத்தில் உணவின்றி ஜகம் ஆனது ஸ்தம்பித்தது. அன்னபூரணியாக இருப்பவளும் பார்வதிதேவி தான். அவள் இல்லை என்றால் இவ்வுலகில் அனைத்தும் ஸ்தம்பித்து போய் நிற்கும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கவே இவ்வாறு மறைந்து சென்றார். பின்னர் உயிர்களின் நன்மை கருதி மீண்டும் வந்த பார்வதி தேவியிடம் சிவபெருமான் நீ கூறியது சரிதான் என்று ஒப்புக் கொண்டார்.

annapoorani

தண்ணீர் உயிருக்கு தேவையானது என்றாலும் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்துவிட முடியாது. எனவே அன்னத்தை, அன்னபூரணியை மதித்து நடக்க வேண்டும். வீட்டில் கட்டாயம் அன்னபூரணியின் படம் இருப்பது வறுமையை நீக்கும். சிறிய அளவிலான அன்னபூரணி விக்ரகங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அன்னபூரணி விக்ரஹம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதன் அடியில் சிறிய அளவிலான தாம்பூலம் வைக்க வேண்டும். பலரும் இதனை சாதாரணமாக பூஜை அறையில் வெறுமனே வைத்து விடுகிறார்கள். இவ்வாறு செய்யக்கூடாது.

சிறிய தாம்பூலத் தட்டில் அரிசி பரப்பி அதன் மேல் அன்னபூரணியை அமர செய்ய வேண்டும். அன்னபூரணியின் கையிலிருக்கும் கரண்டியிலும் ஒன்றிரண்டு அரிசிகளைப் போட்டு வைக்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில், வெள்ளிக்கிழமைகளில் அல்லது பவுர்ணமி நாட்களில் அன்னபூரணியை வழிபட்டு வர வேண்டும். தினமும் சமையலறையில் ஒரு சிறு விளக்கை ஆவது 6 மணியிலிருந்து 7 மணி வரை எரிய விடுவது நல்லது. அடுப்பின் அருகில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆபத்தில்லாத ஏதாவது ஒரு பகுதியில் வைத்தால் போதும். வழிபாட்டின் பொழுது முதலில் விநாயகர் மந்திரங்களை உச்சரித்த விட்டபின், அன்னபூரணியின் ஸ்லோகங்களையும் துதிகளையும் உச்சரிக்க வேண்டும்.

Annapoorani

வாசனை மிக்க மலர்களால் அர்ச்சிக்க அன்னபூரணியின் அருள் நமக்கு விரைவாக கிடைக்கும். மேலும் உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு போன்ற பொருள்களையும் தானம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். வீட்டிற்கு யாசகம் கேட்டு வருபவர்களுக்கு பணமாக கொடுக்காமல் அரிசியாக கொடுத்து அனுப்புங்கள். இவற்றையெல்லாம் கடைபிடித்தால் அன்னபூரணியின் அருள் கிடைத்து வறுமை இல்லா வாழ்வு பெறலாம். நீங்களும் சமையற்கலையில் முடி சூடா ராணியாகலாம்.