நம்மில் நிறைய பேர் வீடுகளில், பெண்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு இது. சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பொருளை வீடு முழுவதும் பறக்க விடும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதா?

cook-lakshmi

நம்முடைய வீட்டில் தேவையில்லாமல் அடிக்கடி பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் எதனால் வருகிறது என்ற மன குழப்பம் நம்மில் பல பேருக்கு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு! பிரச்சனைகளுக்கான தீர்வை பல இடங்களுக்கு சென்று தேடுவோம். சில பேர் பல பரிகாரங்களின் மூலம் தேடுவார்கள். ஆனால் நம் வீட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைக்கு தீர்வு, நம் கையில் தான் இருக்கின்றது என்பதை நம்மில் பலபேர் அறிவதே கிடையாது. நம்முடைய சமையலறையில் செய்யவே கூடாது என்று பல தவறுகள் உள்ளது. அந்த வரிசையில் குறிப்பிட்ட சில தவறுகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

cook1

அதிகமாக, பெண்கள் வெங்காயம் உரிக்கும் போது, அந்த வெங்காயத்தை சமையல் அறையை தவிர்த்து மற்ற இடங்களில் கொண்டுவந்து தோலுரிக்கும் பழக்கம் இருக்கும். அப்போது, அந்த வெங்காயத் தோலை வீடு முழுவதும் பரவ விடக்கூடாது. அதாவது டிவி பார்த்துக்கொண்டே அமர்ந்து வெங்காயத்தை உரிக்க வேண்டும் என்று, மின் விசிறிக்கு கீழே அமர்ந்து வெங்காயத்தை உரிப்பவர்கள், தோலை பறக்க விடாமல் ஒரு பாத்திரத்தில் தான் போட வேண்டுமே தவிர, அந்த தோல்களை மூலைமுடுக்குகளில் போய் சேர்ந்து, அதை கூட்டாமல், அப்படியே விட்டு வைப்பது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்துவிடும்.

இரண்டாவதாக பூண்டு. நிறைய பேர் வீடுகளில் செய்யக்கூடிய தவறுகளில் இதுவும் ஒன்று. வீட்டின் நடுப் பகுதியில் அமர்ந்து பூண்டை உரிப்பார்கள். அந்த பூண்டு தோல் வீடு முழுவதும் பரவிச் செல்லும். இப்படியாக மூலைமுடுக்குகளில் போய் சேரும் பூண்டு தோல் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஈர்த்து வைத்துக் கொண்டு, நமக்கு தேவையில்லாத கடன் பிரச்சனை, தேவையில்லாத சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

முடிந்தவரை எந்த காய்கறிகளை சுத்த படுத்தினாலும், அதில் இருந்து எடுக்கப்படும் கழிவுகளை அப்படியே சமையலறையில் தேக்கி வைத்துக் கொள்ளாமல், முடிந்தவரை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும் என்பது நீங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி சுத்தப்படுத்திவிட்டு சுத்தப்படுத்தப்பட்ட பொருட்களிலிருந்து கழிந்த மீதம் இருக்கக் கூடிய எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதில் எதிர்மறை ஆற்றல் நிறைந்து விடும். அந்தப் பொருள் நம்முடைய வீட்டில் தேங்கி கிடைப்பதன் மூலம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் இனி திருத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முடிந்தவரை உங்களுடைய வீட்டில் வெங்காய தோல், பூண்டு தோல், இப்படிப்பட்ட தோல்களை மூலைக்கு செல்லும் அளவிற்கு விடாமல், அந்த தோலை ஒரு சிறிய பாத்திரத்தில் சேகரித்து வைத்துக்கொண்டு, உடனடியாக குப்பைக் கூடையில் கொண்டு போய் கொட்டி விடுவதே நல்லது.

chinna-vengayam

பூண்டு தோல் ஆக இருந்தாலும், வெங்காயத்தில் ஆக இருந்தாலும் குழந்தைகள் விளையாடுவதற்க்காக என்று, அவர்கள் கையில் கொடுத்து அதை வீடு முழுவதும் பரப்ப செய்யவே கூடாது. இதே போல் சில வீடுகளில் குழந்தைகள் பேப்பரை கிழித்து போட்டு கொண்டே இருப்பார்கள். சில வீடுகளில் கத்தரிக்கோலை கொண்டு சிறு சிறு துண்டுகளாக பேப்பரை வெட்டி விளையாடுவது, துணிகளை வெட்டி விளையாடுவது போன்ற பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு இருக்கும்.

baby

இவை அனைத்தும் தவறு வீட்டிற்கு தரித்திரத்தை தேடித்தரும் பழக்கவழக்கங்கள் இவை, என்பதை அவர்களுக்கு வலியுறுத்த வேண்டியது நம்முடைய கடமை. குழந்தைகள்தானே விளையாடுகிறது என்று சொல்லி நம்முடைய முன்னோர்கள் நமக்குச் சொல்லித் தந்த பழக்கத்தை, நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க நான் மறக்கவே கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! எந்த வரத்தைக் கேட்டாலும், அது உடனே கிடைக்க, நவராத்திரியின் 5ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.