சமையலறையில் எல்லா பெண்களும் செய்யக்கூடிய 1 தவறு இது. இந்த தவறை செய்தால் வீட்டில் நிச்சயம் தரித்திரம் தலைவிரித்து ஆட தான் செய்யும்.

kitchen-lakshmi
- Advertisement -

நம்முடைய வீட்டில் கஷ்டங்கள் தொடர்ந்து வருவதற்கு நாம் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் காரணமாக இருக்கலாம். இதற்காக வீட்டில் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயந்து பயந்து, ‘இது செய்தால் பிரச்சனை வந்துவிடுமோ! அதை செய்தால் பிரச்சனை வந்துவிடுமோ! இந்த பொருளை இந்த மூலையில் வைக்கலாமா! அல்லது இந்த பொருட்களை, எந்த மூலையில் வைத்தால் நம் குடும்பத்திற்கு நன்மை வரும்!’ என்று எல்லா விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்து மனக் குழப்பத்தோடு வீட்டில் இருக்கும் பெண்கள் வேலையை செய்யக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் மன குழப்பம் இல்லாமல், மனத்தெளிவுடன் தான் இருக்க வேண்டும்.

cooking'

எந்த வீட்டில் பெண்கள் மனக் குழப்பத்தோடு இருக்கின்றார்களோ, குழப்பத்தோடு வேலையை செய்து கொண்டே இருக்கிறார்களோ, அந்த வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி கடாட்சம் நிறைந்தது இருக்காது. இதை மனதில் வைத்துக் கொண்டு இன்றைய பதிவை பார்க்க செல்வோம் வாருங்கள். இன்றைக்கு நம் வீட்டு சமையல் அறையில் சிங்கிற்கு அடியில் நாம் செய்யவே கூடாத ஒரு தவறை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நம்மில் பலபேர் செய்யக்கூடிய தவறு இது. உங்களுக்கு சரி என்று பட்டால் இந்தப் பதிவை படித்த பின்பு, அதை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லை, எங்களுடைய இஷ்டம். அதை அப்படித்தான் செய்வோம் என்றால், அது உங்கள் விருப்பம். ஆனால், இந்த ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் நம்முடைய வீட்டில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இன்றைய சூழ்நிலையில் எல்லா வீட்டு சமையலறையிலும் சிங் என்பது கட்டாயமாக உள்ளது. அதேபோல் அந்த சிங்கத்துக்கு அடியில் குப்பை கூளங்களும் சேர்ந்து தான் உள்ளது. குறிப்பாக நிறைய பேர் சிங்குக்கு அடியில் குப்பை தொட்டியை வைத்து பயன்படுத்தும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். தேவையில்லாத பொருட்களை சிங்குக்கு அடியில் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள்.

- Advertisement -

அந்த இடத்தில் கரப்பான் பூச்சிகளும் மற்ற பூச்சி பொட்டுகளும் சேர்ந்திருக்கும். இப்படி ஒரு வீட்டு சமையலறையில் சிங்குக்கு அடியில் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கக்கூடாது. சிங்க் அடியில் சொல்லப்போனால் எந்த ஒரு பொருளும் இருக்கக் கூடாது. சுத்தமாக இருக்க வேண்டும். நறுமணத்தோடு இருக்க வேண்டும். கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். இருப்பினும் இதை கடைபிடித்தாலே போதும். நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் தேடிவரும்.

shink

சிங்க் என்றாலே அதில் தண்ணீரின் வருகை இருந்து கொண்டே உள்ளது. அதாவது, அது கங்கா தேவிக்கும் சொந்தமான ஒரு இடம். அந்த இடத்தை சுத்தமாக வைத்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி தானாக கூடி வருவாள். சிங்கை சுத்தமாக கழுவி வைத்திருந்தால், ஈரமாகவே இருக்காது. சீக்கிரமே உலரும். எந்த வீட்டில் ஈரம் இருந்துகொண்டே இருக்கின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தரித்திரம் பிடிக்கும் என்ற கருத்தும் உள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய வீட்டில் இந்த ஒரு மாற்றத்தை கொண்டு வந்து பாருங்கள். நிச்சயமாக நல்ல முன்னேற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -