சமையலறையில் ஒரு போதும் நாம் செய்யவே கூடாத தவறு இது. வீட்டில் வறுமை ஏற்பட இதுவும் ஒரு முக்கியமான காரணம் தான். அது என்ன தவறு? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

cooking

நம் வீட்டில் இருக்கக்கூடிய சமையலறை நமக்கு மற்றோரு பூஜை அறை என்று கூட சொல்லலாம். வீட்டில் பெண்கள் பூஜை அறையை எப்படி பராமரிக்கிறார்களோ, அதே பக்தியோடு தான் சமையலறையும் பராமரிக்க வேண்டும். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் அலட்சியம் காரணமாக சோம்பேறித்தனம் காரணமாக சில பெண்கள், சமையலறையை சுத்தமாக பராமரிப்பது இல்லை. இந்த சமையலறை சுத்தத்தோடு சேர்த்து, சமையல் அறையில் நாம் இன்னும் சில விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சில தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அது என்ன தவறுகள்? இப்போதே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

kitchen1

சமையலறையில் சமையலுக்குப் பல உலோகங்களில் பாத்திரத்தை நாம் பயன்படுத்துவோம். அந்த காலங்களில் பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். சில பேர் இரும்பு பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் அலுமினியம், சில்வர், போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் புழக்கத்திற்கு வந்தது.

இப்போது நான்ஸ்டிக், இந்தோனிம் போன்ற விதவிதமான நிறைய பாத்திரங்கள் சமையலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் முடிந்தவரை நம்முடைய வீட்டில் அலுமினிய பாத்திரங்களை அதிகமாக பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். அலுமினிய பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்துவது ஆரோக்கிய ரீதியாகவும் நல்லது அல்ல. ஆன்மீக ரீதியாகவும் நல்லது அல்ல.

aluminiyam

இந்த அலுமினிய உலோகம் ராகு பகவானுக்கு சொந்தமான உலோகமாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த அலுமினிய பாத்திரத்தில் பால் காய்ச்சி வைக்கவே கூடாது. அலுமினிய பாத்திரத்தில் சாதம் வடித்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கட்டாயமாக வீட்டில் தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். சண்டை சச்சரவுகள் வரும். பண கஷ்டம் இருக்கும். வறுமை வாட்டி வதைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் அலுமினிய பாத்திரத்தில் சாதத்தை சமைப்பவர்கள் ஆக இருந்தால், சாதத்தை வடித்து நிம்மதியுடன் அந்த சாதத்தை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்வது நல்லது.

- Advertisement -

அடுத்தபடியாக தோசை சுட பயன்படுத்தும் தோசை கல்லாக இருந்தாலும் சரி, அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் கடாய்களாக இருந்தாலும் சரி, சில பேர் வீட்டில் கொஞ்சம் மாடனாக ஃப்ரயிங் பேன் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களாக இருந்தாலும் சரி, அந்தப் பாத்திரத்தை சமைத்து முடித்து விட்டு அந்த எண்ணெயோடு எடுத்து அப்படியே வைக்கக்கூடாது. குறிப்பாக நிறைய பேர் தோசைக்கல்லை கழுவினால் வீணாகிவிடும் என்று அப்படியே எடுத்து வைப்பார்கள்.

kitchen

லேசாக ஒருமுறை சமைத்த இரும்பு பாத்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு தான், அதன் பின்பு எடுத்து வைக்க வேண்டும். தோசைக்கல், ஃபிரையிங் பேன் வடிவத்தில் இருக்கக்கூடிய பொருட்களை சமையலறையில் கவிழ்த்து வைக்க கூடாது. எப்போதுமே நிமிர்த்தி வைத்து தான் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

kitchen1

அதிக சுமை உள்ள இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை, சமைத்து முடித்தவுடன் எப்போதுமே அடுப்புக்கு மேலே அப்படியே விட்டு விடக்கூடாது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் சமைத்த அந்த தோசைக்கல் அல்லது வேறு ஏதேனும் எடை அதிகம் உள்ள பாத்திரத்தை அடுப்பின் மேலே இருந்து வேறு இடத்திற்கு மாற்றி வைத்து விட்டு, அடுப்பின் மேலே சாதாரணமாக ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இரவு முழுவதும் அடுப்பின் மேலே இரும்பால் செய்யப்பட்ட பொருட்களை வைப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். மேலே சொல்லப்பட்டுள்ள சில மாற்றங்களை பின்பற்றினால் வீட்டில் நிச்சயமாக நல்ல மாறுதல்கள் தெரியும். முயற்சி செய்து பாருங்கள்.