சமையல் அறையில் பெண்கள் இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

kitchen
- Advertisement -

ஒரு வீட்டில் பணம் காசு என்பது தேவைக்கு மட்டும் தான் உள்ளது. ஆனால், அந்த வீட்டில் சந்தோஷத்திற்கு மனநிம்மதிக்கு குறைவே இல்லை என்ற ஒரு சூழ்நிலை இருந்தாலும் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் பெண்கள்தான் காரணம். ஒரு வீட்டில் பணம் காசு ஏராளமாக ஒருபக்கம் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அந்த வீட்டில் மனநிம்மதியும் சந்தோஷமும் ஒரு துளி அளவும் இல்லை. எந்த நேரமும் சண்டை சச்சரவு தான் நிலவுகிறது என்றாலும், இதற்கும் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள்தான் காரணம். ஒரு வீட்டை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் பெண்கள் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதாக இருந்தாலும் அதற்கு காரணமும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் தான்.

women8

இதற்காக பெண்களை குறை கூறுவதாக அர்த்தம் கிடையாது. ஒரு வீட்டினுடைய ஆணிவேர் அந்த வீட்டின் பெண்மணிகள் தான். இந்தப் பெண்கள் தங்களுடைய வீட்டு சமையலறையை எப்படி பராமரித்து வருகிறார்களோ, அதை வைத்துதான் அந்த பெண்ணின் மன நிலமையும் இருக்கும்.

- Advertisement -

அதாவது சராசரி குடும்பத்தில் வசிக்கும் பெரும்பான்மையான பெண்கள் தங்களுடைய நேரத்தை அதிகமாக கழிப்பது அந்த சமையல் அறையில்தான். சமையல் அறையை எப்படி பராமரித்து வந்தால் ஒரு வீட்டில் பெண்களின் மன நிலைமை சந்தோஷமாக இருக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெண்களின் மனநிலை சந்தோஷமாக இருந்து விட்டாலே போதும். அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு கிடையாது.

women1

காலையில் பெண்கள் சமையல் அறையில் நுழையும் போதே அவர்களுடைய மனது சந்தோசமாக இருக்க வேண்டும். இதற்காக இரவு கொஞ்சம் நேரம் எடுத்தாலும் சமையல் அறை சிங்கை சுத்தம் செய்துவிட வேண்டும். எச்சில் பாத்திரங்களை அப்படியே போட்டு வைக்க கூடாது. காலையில் எழுந்து சமையல் அறைக்குள் நுழையும்போது ஒரு கோவிலுக்குள் நுழைவது போல எண்ணம் தோன்ற வேண்டும்.

- Advertisement -

இந்த காலத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு இவையெல்லாம் சாத்தியமா என்று சிலர் நினைக்கலாம்? இருப்பினும் காலை எழுந்தவுடன் சமையல் அறைக்குள் செல்லும் போது எச்சில் பாத்திரத்தை பார்ப்பதற்கும், சுத்தமான சமையலறையில் கண்விழிப்பதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உள்ளது. இதை வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரே ஒரு நாள் சோதித்து பாருங்கள்.

kitchen

சுத்தமாக இருக்கும் சமையல் அறையில் நுழைந்ததும் காலை முதலில் ஒரு மண் அகல் தீபத்தை நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு, அன்னபூரணியை மனதார வேண்டிக் கொண்டு அதன் பின்பு சமைக்கச் செல்வது மிகவும் நல்லது. இப்படி செய்தால் உங்கள் வீட்டில் சமைக்கும் உணவு பண்டங்கள் வீணாவதற்கு வாய்ப்பு இல்லை. சமையலின் ருசி கூடும். வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். சமையலறை வேலையை சீராக முடித்த பெண்களின் மனம் அந்த நாள் முழுவதும் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

deepam

இந்த தீபத்தை வெறும் மங்களகரத்திற்காக மட்டும் நாம் சமையலறையில் ஏற்றி வைக்க வில்லை. சமையலறையில் நாம் எப்போதுமே மன அமைதியுடன் தான் சமைப்போம் என்பது கிடையாது. எத்தனையோ சூழ்நிலையில், எத்தனையோ பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு சமையலை செய்வோம்.

deepam

சில பெண்கள் சில நேரங்களில் சமைப்பதற்கு ரொம்பவும் அலுத்துக் கொள்வார்கள். தினமும் இதே வேலைதானா? தினமும் நாமே சமைத்து தான் சாப்பிட வேண்டுமா? என்ற எதிர்மறை எண்ணங்களோடு சமைப்பார்கள். எங்கெங்கோ இருக்கும் கோபத்தை கொண்டுவந்து சமையலில் காட்டும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் அந்த சமையலறையில் சேர சேர நிச்சயமாக அந்த வீட்டில் நிம்மதி என்ற ஒன்று குறைந்து கொண்டே போகும்.

cooking-vilakku

சில வீடுகளில் மளிகை பொருட்கள் கூட சீக்கிரமே கெட்டுப் போகும். சில வீடுகளில் மளிகை பொருட்களை வாங்கி வைப்பதற்குக் கூட பணம் காசு இருக்காத சூழ்நிலை ஏற்படும். இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கு சமையலறையில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றலும் ஒரு காரணம் தான்.

cooking'

இந்த எதிர்மறை ஆற்றல்கள் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போக தினமும் காலையில் ஒரு மண் அகல் தீபத்தை சமையல் அறையில் ஏற்றி வைப்பது மிக மிக நல்லது. காலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால், இரவு உங்கள் சமையலறையை கட்டாயம் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.

lemon

ஆனால் இந்த தீபத்தை கொஞ்சம் கவனமாக ஏற்றி வைக்க வேண்டும். சமையலறையில் கேஸ் சிலிண்டருக்கு அருகில் எல்லாம் ஏற்ற வேண்டாம். கொஞ்சம் பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பக்கம் பார்த்தவாறு ஒரு மண் அகல் தீபத்தை சமையலறையில் தினமும் ஏற்றி வையுங்கள்.

kitchen

முடிந்தால் இரவில் ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, அந்த எலுமிச்சம் பழத்தை அடுப்புக்கு அருகில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை  எதிர்மறை ஆற்றலை அந்த எலுமிச்சம்பழம் ஈர்த்துக் கொள்ளும். காலை சமையலறைக்குள் வந்தவுடன், அந்தப் எலுமிச்சம் பழத்தை தூக்கி குப்பை டப்பாவில் போட்டு விடுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்தாலும் நல்லது தான்.

kitchen2

முதல் விஷயம், இரவே சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும். இரண்டாவது விஷயம், சமையல் அறைக்குள் நுழைந்ததும் தீபம் ஏற்ற வேண்டும். முடிந்தால் மூன்றாவதாக வாரம் ஒருநாள் எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி சமையல் அறையில் வைக்க வேண்டும். இதை செய்து பாருங்கள் வீட்டில் நிச்சயமாக நல்ல மாற்றங்கள் தெரியும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -