கிச்சன் சுவர் மற்றும் ஜன்னலில் இருக்கும் என்னை பசை நீங்க

kitchen cleaning
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் கிச்சன் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அப்படி இருக்கும் இடத்தில் அடுப்பிற்கு பக்கத்தில் ஜன்னல் என்பதும் இருக்கும். பலரது இல்லங்களிலும் இந்த ஜன்னலிலும் அடுப்படி சுவரிலும் எண்ணெய் பசை பிடித்துக் கொண்டு இருக்கும். அப்படி விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கும் எண்ணெய் பசையை நீக்க எளிமையான வழியை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அந்த வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவார்த்தமாக ஒரு வீட்டின் அடுப்படியும் கழிப்பறையும் சுத்தமாக இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் நபர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த அடுப்படியை சுத்தமாக வைத்துக்கொள்ள பலரும் ஆசைப்பட்டாலும் அந்த அடுப்படியில் இருக்கக்கூடிய சுவர் மற்றும் ஜன்னலில் பிடித்திருக்கும் எண்ணெய் பசையை நீக்க மிகவும் பாடுபடுவார்கள்.

- Advertisement -

இந்த எண்ணெய் பசையை நீக்குவதற்கு பல வழிகளில் நாம் முயற்சி செய்தாலும் மிகவும் எளிமையான வழியில் அதே சமயம் நம் கைகள் வலிக்காமல் செய்யக்கூடிய ஒரு எளிய முறையைப் பற்றி பார்ப்போம். பொதுவாக சமையலறையில் இருக்கக்கூடிய சுவர் மற்றும் ஜன்னலை மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்தால்தான் எண்ணெய் பசை இல்லாத சமையலறையை நம்மால் பயன்படுத்த முடியும்.

இதற்கு ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை போட வேண்டும். பிறகு 100 மில்லி அளவு வினிகரை ஊற்ற வேண்டும். வினிகர் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை பழச்சாறை ஊற்றலாம். இவ்வாறு ஊற்றியவுடன் அது பொங்கி நுறைத்து வரும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்ற வேண்டும். இதற்கு பதிலாக துணி துவைக்கும் லிக்விடையும் நாம் பயன்படுத்தலாம் அல்லது துணி துவைக்கும் பவுடரையும் நாம் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எண்ணெய் பசை இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்து விட வேண்டும். ஐந்து நிமிடம் அப்படியே இருக்கட்டும். பிறகு ஒரு ஸ்கிரப்பரை வைத்து எண்ணெய் பசை இருக்கும் இடங்களை தேய்த்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும். டைல்ஸ் இடுக்குகளில் இருக்கக்கூடிய எண்ணெய் பசை ஸ்க்ரப்பரை வைத்து தேய்ப்பதன் மூலம் போகாது.

அதற்கு ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய டூத் பிரஷை பயன்படுத்தும் பொழுது அதற்கு நடுவில் இருக்கும் எண்ணெய் பசையும் நீங்கிவிடும். இவ்வாறு ஸ்கிரப்பரை வைத்து தேய்த்து முடித்த பிறகு பழைய துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: துணியில் இருக்கும் அழுக்கு நீங்க டிப்ஸ்

இந்த முறையில் நாம் கிச்சனை சுத்தம் செய்வதன் மூலம் கிச்சனில் எந்தவித எண்ணெய் பசையும் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

- Advertisement -