உங்கள் சமையல் அறையில் தான் பூஜை அறையும் இருக்கிறதா? அப்படின்னா இரவு தூங்க செல்லும் முன் உங்கள் சமையலறை இப்படித்தான் இருக்க வேண்டும் தெரியுமா?

kitchen-lakshmi
- Advertisement -

ஒரு வீட்டில் சமையலறை தனியாகவும், பூஜை அறை தனியாகவும் இருப்பது மிகவும் சிறப்பம்சமாகும். சமைக்கும் பொழுது அது இடையூறாக இல்லாமல் இருக்கும். ஆனால் எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறையை தனியாக அமைக்கும் அளவிற்கு வசதி இருப்பதில்லை. எனவே வரவேற்பறை அல்லது அடுப்பறையில் பூஜை அறையை அமைத்துக் கொள்வது இயல்பானது ஆகும். அப்படி உங்கள் பூஜை அறை, சமையல் அறையுடன் சேர்ந்து இருந்தால் நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன் உங்களுடைய சமையலறை இப்படி இருப்பது மிகவும் முக்கியம்.

சமையலறையை இப்படி வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் வீட்டில் கடன் பிரச்சினை இல்லாமல், செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் எப்படி நம்முடைய சமையலறையை வைத்திருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

சமையலறையில், பூஜை அறையும் சேர்ந்து இருக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் தனியாக இருக்கும் பொழுது நாம் ரொம்பவே சுத்தபத்தமாக பூஜை அறையை வைத்து இருப்போம். ஆனால் அடுப்பறையில் பூஜை அறை அமைக்கப்பட்டிருக்கும் பொழுது அதனை கையாள்வதில் நிறைய சிரமங்கள் உண்டாகும். பூஜை அறையில் அசைவம் சமைக்கும் பொழுது பூஜை அறை திரையை மூடி வைத்து இருப்போம். தீட்டு போன்ற சமயங்களில் பூஜை அறையை நாம் நெருங்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அடுப்பங்கரைக்கு செல்லாமல் இருக்க முடியாது. இத்தகைய தர்மசங்கடங்கள் இருக்கும் பொழுது பூஜை அறையை மேலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இரவு தூங்க செல்வதற்கு முன்னர் பொதுவாக எச்சில் பாத்திரங்களை சிங்கிள் போட்டு வைக்கக் கூடாது. குறிப்பாக இது போல அடுப்பங்கரையில் பூஜை அறை அமைத்து இருப்பவர்கள் கட்டாயம் சிங்கிள் எச்சில் பாத்திரங்களை போட்டு விட்டு இரவு தூங்கச் செல்லக் கூடாது, அதை கழுவி கவிழ்த்து விட்டு அடுப்பங்கரை மேடையைச் சுத்தம் செய்ய வேண்டும். அடுப்பு வைத்திருக்கும் மேடையை ஒருமுறை சாதாரணமாக தண்ணீர் விட்டு கழுவி விட வேண்டும். அதில் சிந்தி இருக்கும் பொருட்கள் மூலம் தோஷங்கள் உண்டாகும் என்பதால் மேடையை சுத்தம் செய்ய சொல்லுவார்கள்.

- Advertisement -

இரவு தூங்கும் பொழுது அடுப்பங்கரையில் அன்னபூரணியும், மகாலட்சுமியும் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே கொஞ்சம் சாதத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களை பட்டினி போடக் கூடாது என்று ஒரு நியதி உண்டு, அதனால் அடுப்பங்கரையில் இவ்வாறு செய்வது வழக்கம். மேலும் அடுப்படியை சுத்தம் செய்து, சிங்கிள் இருக்கும் பாத்திரங்களை கழுவி கவிழ்த்து விட்ட பின்பு ஈரமான துணிகளை அடுப்பங்கரையில் போட்டு வைக்கக் கூடாது.

இரவு நேரங்களில் கறி துணியை அலசி போடுவது அல்லது கால்மிதியை அலசி காய வைப்பது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. பூஜை அறையுடன் கூடிய அடுப்பங்கரையில் இரவு நேரத்தில் எந்த விதத்திலும் ஈரத்துணி இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்துங்கள். இரவில் இப்படி ஈரத்துணியை போட்டு வைப்பதால் கடன் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று கூறுவார்கள். மேலும் அடுப்பங்கரையில் இருக்கும் எச்சில் பாத்திரங்கள் தரித்திரத்தை உண்டாக்கும். முற்றிலுமாக ஒரு பருக்கை கூட இல்லாமல் அடுப்பங்கரை வைத்திருக்கக் கூடாது, இவ்வாறு இருந்தாலும் செல்வ வளம் குறையும். எனவே அடுப்பங்கரையுடன் கூடிய பூஜை அறை வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல், எல்லோருமே இதனைக் கடைப்பிடித்து வருவது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

- Advertisement -