சமையலறை மேடை மேல் வைக்கவே கூடாத 5 டப்பாக்கள். இந்தப் பொருட்களை எல்லாம் சமையல் மேடையில் வைத்தால் வீட்டில் தரித்திரம் பிடிப்பது உறுதி. பணக்கஷ்டம் வரத்தான் செய்யும்.

annaporani
- Advertisement -

சமையலறையில் நூற்றுக்கணக்கான பொருட்களை வைத்திருப்போம். சமைப்பதற்காக பயன்படுத்துவதற்கு தான். அதில் இது நல்லது, இது கெட்டது என்று பிரிக்க வேண்டாம். எல்லா பொருட்களுமே சாப்பிடக்கூடிய பொருட்கள் தான். எல்லா பொருட்களுமே அன்ன லக்ஷ்மியின் ஆசிர்வாதம் பெற்ற பொருட்கள்தான். ஆனாலும் இதில் ஒரு சில பொருட்களை சமையலறை மேடையில் வைக்க கூடாது என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லி வைக்கப்பட்டுள்ளது. சமையலறை மேடை என்றால் திண்ணை இருக்கும் அல்லவா சமையலறையில். அந்த மேடை மேலே அடுப்புக்கு பக்கத்திலும் இந்த பொருட்களை வைக்கக்கூடாது. அது என்னென்ன பொருட்கள் ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

சமையலறை மேடையில் வைக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன
சில பேர் வீட்டில் கருவாடு, நெத்திலி, காய்ந்த இறால், இப்படி பட்ட பொருட்களை எல்லாம் வாங்கி ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். இந்த பொருட்களை சமையலறை மேடையில் வைக்க கூடாது. சமையலறை மேடைக்கு மேல் பக்கத்தில் இருக்கும் அலமாரியிலும் வைக்கக்கூடாது. சமையலறைக்கு கீழ்ப்பக்கத்தில் திண்ணைக்கு கீழே இருக்கக்கூடிய அலமாரிகளில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதேபோல கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு, ஊறுகாய் வகைகள் எண்ணெய் வகைகள் இவைகளை எல்லாம் சமையலறை மேடை மேலே வைக்காதிங்க. சமையலறை மேடைக்கு கீழ் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. சரி சமையலறை மேடையில் சமைக்கும் அடுப்புக்கு பக்கத்தில் எந்தெந்த பொருட்களை வைக்கலாம். கல்லுப்பை வைக்கலாம். தூள் உப்பை வைத்துக் கொள்ளலாம். தேவை என்பவர்கள் மஞ்சள் தூளையும் அந்த இடத்தில் வைக்கலாம்.

குறிப்பாக ஒரு சொம்பில் நிரம்ப எப்போதுமே சமையலறை மேடைக்கு பக்கத்தில் நீர் வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்புக்கு பக்கத்தில் வலது பக்கத்தில் கல் உப்பு, நெய், தண்ணீர், இந்த பொருட்களை எல்லாம் வைப்பது வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். நிறைய பேர் கல் உப்பை சமையலறை மேடைக்கு கீழே ஜாடியில் வைத்திருப்பார்கள். அது தவறு கிடையாது. இருந்தாலும் சின்ன ஜாடியில் கொஞ்சம் கல் உப்பை போட்டு அடுப்புக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு சுபிட்சம் கிடைக்கும்.

- Advertisement -

சமையலறை என்பது வீட்டின் பூஜை அறைக்கு சமமான ஒரு இடம். ஆகவே வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் அந்த சமையலறை சுத்தபத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த வீட்டில் இரவு தூங்கும் போது சிங்கிள் எச்சில் பாத்திரமோ, மத்த பத்து பாத்திரங்களோ இல்லாமல் சுத்தபத்தமாக இருக்கிறதோ, நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கும். பெண்களுடைய மன நிம்மதியும் கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் அள்ள அள்ள குறையாத ஐஸ்வர்யங்கள் நிறைந்து இருக்க ஐந்து மிளகு உங்க கையில் இருந்தால் போதும். பணத் தடைகளை தகர்த்தெறிந்து பணமழையை பொழிய செய்யும் அற்புத பரிகாரம்.

சின்ன சின்ன விஷயங்களை நிதானத்தோடு கவனித்து நாம் செய்யும் போது, நம்முடைய குடும்பத்தில் சந்தோஷம் பெருகுவதை கண்கூடாக நம்மால் காண முடியும். அலட்சியமாக செய்யக்கூடிய எந்த ஒரு விஷயமும் நிச்சயமாக நமக்கு நன்மையை தராது. நம்பிக்கை உள்ளவர்கள் பொறுப்போடு கவனத்தோடு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நிச்சயமாக நன்மை நடக்கும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நாம் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -