ஏழரை சனி காலத்தில் இதை செய்தால், ‘நான் அவர்களுக்கு எந்த துன்பமும் தர மாட்டேன்’ என்று சனிபகவானே வாக்கு கொடுத்திருக்கிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டியது என்னென்ன?

sanibagavan
- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சியின் மூலமாக ஏழரை சனி தொடங்கிய ராசிக்காரர்களுக்கு, எல்லாருக்கும் மனதில் ஒரு பயம். ஏழரை சனி தொடங்கி விட்டது. இனிமே நமக்கு வாழ்க்கையில் கஷ்டம் தான், நஷ்டம் தான். வாழ்க்கையில் இன்னும் என்னென்ன எல்லாம் பார்க்கப் போகின்றோமோ என்ற பயம் இருக்கிறது. ஆனால், இந்த ஏழரை சனியை நினைத்து நாம் பயப்படவே வேண்டாம். சனி பகவான் ஒன்றும் அவ்வளவு கெட்டவர் அல்ல.

சுப கிரகங்கள் நமக்கு தரக்கூடிய நன்மையை விட, அசுபகிரகம் என்று சொல்லப்படும் இந்த சனி பகவான் கோடி கோடி நன்மைகளை கொட்டி தருவார். நம்முடைய கர்ம பலனை தீர்ப்பதற்கு தானே மனித பிறவி எடுத்து இருக்கின்றோம். அந்த கர்ம பலனை தீர்க்க வேண்டும் என்றால் அது சனி பகவானால் தான் முடியும். தியாக புருஷர், கருணை உள்ளம் கொண்டவர், கடுமையாக உழைக்கக்கூடியவர் சனிபகவான் என்று நமக்கு புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சனி பகவானை யாரும் தவறாக நினைக்காதீங்க.

- Advertisement -

ஏழரை சனி காலத்தில் இவைகளை எல்லாம் நீங்கள் பின்பற்றி வந்தால், உங்களுக்கு என்னால் எந்த துன்பமும் வராது என்று சனி பகவானே வாக்கு கொடுத்துள்ளார். அந்த விஷயங்கள் எல்லாம் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா. இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் இதில் சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்ய முடிந்தால் கூட செய்யுங்கள். உங்களுக்கு சனி பகவான் எந்த தொந்தரவும் கொடுக்கவே மாட்டார்.

ஏழரை சனி பாதிப்பிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை:
முதல் விஷயம் மனப்பூர்வமாக சனி பகவானை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். அடுத்தது மனப்பூர்வமாக ஏழைக்கு உதவுபவர்களை சனி பகவான் எதுவுமே செய்ய மாட்டார். நல்லெண்ணெய் தானம் செய்பவர்கள், எள்ளு தானம் செய்பவர்கள், எள்ளு சாதம் செய்து அதை பசியோடு இருப்பவர்களுக்கு தானம் கொடுப்பவர்கள், நீல நிற வஸ்திரத்தை தானம் செய்பவர்களை, நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று சனி பகவானே வாக்கு கொடுத்துள்ளார்.

- Advertisement -

கருங்குவளை மலர்களால் எனக்கு அர்ச்சனை செய்பவர்களுக்கு வரங்களை அள்ளி அள்ளிக் கொடுப்பேன் என்று சனி பகவான் வாக்கு கொடுத்துள்ளார். அதேபோல தர்மசாஸ்தா ஐயப்பனை விரதமிருந்து வழிபாடு செய்பவர்களுக்கு நான் கஷ்டம் கொடுக்க மாட்டேன். ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி வழிபாடு செய்பவர்களை நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்றும் சனி பகவான் சொல்லியதாக சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல தினம்தோறும் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறைக்கு வந்து சனிபகவானை மனதார நினைத்து நமஸ்காரம் செய்து குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். இப்படி செய்தால் ஏழரை சனி காலத்தில் நமக்கு கர்மவினையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும், அதன் மூலம் பெரிய அளவில் தீங்கு நடக்காமல் சனி பகவானே பார்த்துக் கொள்வார்.

இதையும் படிக்கலாமே: கடன் சுமை குறையாமல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? அப்படியானால் நிலை வாசலில் நீங்கள் செய்யும் இந்த தவறும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று சொல்லுவோம் அல்லவா அப்படிப்பட்ட அதிசயங்கள் எல்லாம் கூட உங்களுடைய குடும்பத்தில் நடக்கும். எவ்வளவு கஷ்டங்களை உங்களுக்கு சனி பகவான் கொடுக்கின்றாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த கஷ்டத்திலிருந்து உங்களை காப்பாற்றவும் செய்வார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -