கடன் சுமை குறையாமல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? அப்படியானால் நிலை வாசலில் நீங்கள் செய்யும் இந்த தவறும் ஒரு காரணமாக இருக்கலாம்.

nilai vashal kolam
- Advertisement -

முன்பெல்லாம் கடன் வாங்குவதை ஒரு பெரிய பாவ செயல் என்பதைப் போல பார்த்தார்கள். இன்றோ கடன் என்பது சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. அதன் பலனாக இன்று ஒவ்வொரு குடும்பமும் கடனில் தத்தளிப்பது மட்டுமல்லாமல், பல குடும்பங்கள் அதில் மூழ்கி காணாமல் போய் விடுகிறது. இந்த கடன் தொல்லை தீர நாம் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், இந்த ஒரு செயலை நாம் செய்யும் பொழுது கடனானது அடையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போது நாம் தேவைக்கு மீறி ஆடம்பரத்தையும், வருமானத்திற்கு மீறிய செலவையும் செய்ய ஆரம்பிக்கிறோமே அப்போதே கடனானது பெருகி விடுகிறது. கடன் பெருகுவதற்கு இவையெல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும், நாம் செய்த கர்ம வினைகளின் பலனும் இதற்கு முக்கியமான காரணம். எந்த அளவிற்கு நம் கர்மா ஆனது தொடர்கிறதோ, அந்த அளவிற்கு கடனிலிருந்து நம்மால் மீள முடியாது. அப்படி நம்மால் நமக்குத் தெரியாமல் ஏற்பட்ட கர்மாவை விட, தெரிந்தே நாம் செய்யும் இந்த ஒரு தவறை சரி செய்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

- Advertisement -

கர்மா நீங்கி கடன் அடைய செய்ய வேண்டியது
முன்பெல்லாம் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதை மங்களகரமான செயலாகவும், தெய்வங்களை நம் இல்லம் தேடி வர வைக்க செய்வதாகவும் இருந்தது. அதுமட்டுமின்றி முன்பெல்லாம் கோலம் போட வேண்டும் என்றாலே பச்சரிசி மாவில் மட்டும் தான் போடுவார்கள்.

பச்சரிசி மாவில் கோலம் போடுவது என்பது அன்றைய நாளின் தொடக்கத்திலே நம் தான தர்மங்களை தொடங்க ஆரம்பித்து விடும். அதாவது இந்த பச்சரிசி மாவை எறும்புகள் காலை முதல் மாலை வரை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சேர்த்து வைத்து உண்ண ஆரம்பிக்கும். இது மிகச் சிறந்த தானமாக பார்க்கப்பட்டது. இதனால் நம் கர்ம வினைகள் பெருமளவு குறைந்து விடும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இன்றெல்லாம் கோலம் என்பது சுண்ணாம்பு கட்டியை பயன்படுத்தி தான் போடுகிறோம். இந்த சுண்ணாம்பு கட்டினால் போடப்படும் கோலத்தை எறும்புகள் வந்து உண்ணும் போது அவைகளுக்கு சுண்ணாம்பினால் வாயில் புண் ஏற்பட்டு விடும். இது மிகப் பெரிய ஒரு பாவ செயலாக பார்க்கப்படுகிறது. இதை யாரும் தெரிந்தே செய்வதில்லை தான் ஆனால் தெரிந்து கொண்ட பிறகு செய்யாமல் இருக்கலாம் அல்லவா.

நம் முன்னோர்கள் காலையில் தொடங்கும் போதே தான தர்மத்துடன் தொடங்கிய ஒரு செயலை இன்று நாம் தொடங்கும் போது சாபத்தோடு தொடங்குவது போல் ஆகி விட்டது. ஏனென்றால் எறும்பானது நாம் போடும் கோலத்தில் இருந்து பச்சரிசி மாவை எடுக்கும் போது இறைவனிடத்தில் நமக்கான வேண்டுதலை அவைகள் வேண்டிக் கொள்ளும். இதனால் நம் கர்மா வினை குறையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைய கோலத்தை சுண்ணாம்பு மாவினால் போடும் போது அவைகள் துன்பத்திற்கு ஆளானால் அந்த பாவமும் நம்மை தானே சேரும். இப்படி கர்ம வினைகள் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்லும் போது கடனுக்காக நீங்கள் எந்த பரிகாரங்களை செய்தாலும் அது எந்த பலனையும் அளிக்காது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் கஷ்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். வீட்டில் லட்சுமி கடாக்ஷம் குறைய முக்கிய காரணம்.

இந்த தவறை இது வரையில் தெரியாமல் செய்திருந்தால் பரவாயில்லை. இது தெரிந்த பிறகு இனி மேல் பச்சரிசி மாவில் கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டு நம் கர்ம வினைகளை மிக மிக எளிய வழியில் தீர்த்து கடன் என்னும் பெரிய பிரச்சனையிலிருந்து வெளிவர இதையும் ஒரு முயற்சியாக மேற்கொள்வோம்.

- Advertisement -