மணி பிளான்ட்க்கு அடுத்து இந்த செடிதான் வாஸ்து ரீதியாக பணம் தருமாம் தெரியுமா? செல்வம் பெருக்கெடுக்க கஷ்டம் நீங்க இந்த செடியை இந்த நாளில் வைத்து வளர்த்து பாருங்கள்!

sangu-poo-cash
- Advertisement -

இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு நாடுகளில் பரவலாக நம்பப்படும் ஒரு விஷயம் மணி பிளான்ட் வீட்டில் வளர்த்தால் செல்வம் அதிகரிக்கும் என்பது தான் ஆகும். இதனால் எல்லோருடைய வீடுகளிலும் சிறிய அளவில் இருந்து, புதர் போல மணி பிளான்ட் செடிகளை வளர்த்து வருகிறோம். இப்படி வளர்க்கப்படும் வாஸ்து ரீதியான மணி பிளான்ட் செடிக்கு இணையாக மற்றொரு செடியும் உண்டு. அது என்ன? அதை எப்படி எந்த நாளில் வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும்? என்பதை தான் இந்த வாஸ்து சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மணி பிளான்ட் செடியை போலவே பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு செடி ‘சங்கு பூ’ செடி ஆகும். பல்வேறு நிறங்களில் கிடைக்கக்கூடிய இந்த சங்கு பூ, நீல நிறத்தில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. நீல நிற சங்கு பூ செடி வீட்டில் வளர்த்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்குமாம். வீட்டில் செல்வ மழை பொழிய கூடும் என்று நம்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆரோக்கிய ரீதியாக சங்குப்பூ செடியிலிருந்து பறிக்கப்பட்ட பூக்களை கொண்டு தேநீர் கூட தயாரிப்பது உண்டு. இந்த சங்குப்பூ தேநீர் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இந்த அதிர்ஷ்டம் தரும் சங்கு பூ செடியை வாசலில் வலது பக்கத்தில் வைத்து செழிப்பாக வளர்த்து வந்தால் குடும்பமும் செழிக்கும், செல்வமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.

சங்குப்பூ செடியை காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் பார்த்துவிட்டு கண் விழித்தால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்குமாம். மனதிற்கு இனிமையையும், கண்களுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடிய வகையில் இதன் நிறம் அமைய பெற்றுள்ளது. சங்குப்பூ செடியை எந்த நிறத்திலும் நீங்கள் வளர்க்கலாம். குறிப்பாக நீல நிறத்தில் வளர்த்தால் பணம் சேரும். வெள்ளை நிறத்தில் வளர்த்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

சங்குப்பூ சங்கு வடிவில் இருப்பதால் இது மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் கருதப்படுகிறது. எனவே மகாவிஷ்ணுவிற்கு உகந்த வியாழன் கிழமையில் முதன்முதலில் சங்கு பூ விதைகளை நட்டு வளர்ப்பது அதிர்ஷ்டம் மிக்கதாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் மகாலட்சுமியின் அம்சமாக சங்கு பூ செடி இருப்பதால் இதை வெள்ளிக்கிழமையிலும் நீங்கள் நட்டு வைத்து வளர்க்கலாம். வியாழன் அல்லது வெள்ளியில் முதன் முதலில் சங்கு பூச்செடியை வீட்டில் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் ஐஸ்வரியம் நிறையும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
உங்க வீடு இந்த திசையில் இருந்தால் நீங்கள் எந்த மிதியடியை பயன்படுத்த வேண்டும் தெரியுமா? வாஸ்துபடி இதை செய்து பாருங்கள் அதிர்ஷ்டம் தானாக வரும்.

சங்குப்பூ கொடி போல படர்ந்து வளரக்கூடியது. இதை காடு போல அடர்த்தியாக வளர்க்கக் கூடாது. அவ்வபொழுது வெட்டிவிட்டு வளர்க்க வேண்டும். இதில் கிடைக்கக் கூடிய பூக்களை கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பது நம்பிக்கை. எல்லா வகையான இறைவனுக்கும் சங்கு பூவை வைத்து வழிபட்டு அதன் பலனை நீங்கள் பெறலாம். சங்குப் பூ செடி பல்வேறு வண்ணங்களில் நீங்கள் வளர்த்தால் அதுவும் அதிர்ஷ்டம் தரும் பலன்களை கொடுக்கும்.

- Advertisement -