இந்த ஒரு விளக்கை சனி பகவானுக்கு ஏற்றினால் போதும். சனிபகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் பெரிய கஷ்டங்கள் வரவே வராது. ஏழரை சனியாகவே இருந்தாலும் அது உங்களுக்கு நன்மையை செய்யும்.

sanibagavaan
- Advertisement -

சனிபகவான் என்றதுமே வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடும். ஆனால் சனி பகவானை போல கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது என்று சொல்லுவார்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அது இந்த ஏழரை சனி காலத்தின் மூலமாகத்தான் முடியும். வாழ்க்கையை நமக்கு கற்றுத் தரக்கூடிய கடவுள் சனி பகவான் தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், வாழ்க்கையில் சனி பகவானால் கொடுக்கப்படும் கஷ்டத்தையும், சனி பகவானால் கொடுக்கப்படும் சந்தோஷத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். இது விதி. ஆனால் வரக்கூடிய பிரச்சினைகள் பெரிய பாதிப்புகளை கொடுக்காமல் இருக்க நம்மால் சில வழிபாடுகளை மேற்கொள்ள முடியும். அதை பற்றி தான் இந்த ஆன்மீகம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சனிபகவானால் வரும் பிரச்சனையின் தாக்கம் குறைய ஏற்ற வேண்டிய விளக்கு:
இந்த விளக்கை கட்டாயம் கோவிலில் தான் ஏற்ற வேண்டும். வீட்டில் ஏற்றக்கூடாது. நவகிரக சன்னிதானத்தின் முன்பு ஏற்ற வேண்டும். சனி பகவானுக்கு உரிய உலோகம் இரும்பு என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இரும்பு கடாய் வாங்கிக் கொள்ள வேண்டும். சின்னதாக கடைகளில் கிடைக்கும். 1/2 லிட்டர் அளவு நல்லெண்ணெய் பிடிக்கும் அளவுக்கு இரும்பு கடாய் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த கடாயை கோவிலுக்கு எடுத்துச் சென்று அதில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் தடிமனாக நீளமான திரியை போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சனி பகவானின் பாதங்களில் சரணடைந்து விடுங்கள். கொடுக்கக்கூடிய கஷ்டங்கள் எதுவும் பெரிய அளவில் துன்பத்தை கொடுக்கக் கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த விளக்கை சனிக்கிழமை அன்று ஏற்றுவது சிறப்பு. முடிந்தவர்கள் ஒரே ஒருமுறை சனிக்கிழமை இந்த விளக்கை ஏற்றலாம். அடிக்கடி இந்த இரும்பு பாத்திரம் வாங்கி விளக்கு ஏற்ற முடியும் என்பவர்கள் அடிக்கடி இந்த விளக்கை ஏற்றுவதில் தவறில்லை. ஏற்றிய இரும்பு பாத்திரத்தை கோவிலிலேயே தான் விட்டுவிட வேண்டும். மீண்டும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. இந்த ஒரு விளக்கு பரிகாரம் உங்களுக்கு பெரிய அளவில் நன்மையை கொடுக்கும். என்னதான் நீங்கள் சனி பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் அனுமனையும் விநாயகரையும் தினமும் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அனுமனுக்கு வெற்றிலை மாலை கட்டி போடுங்கள். எப்போதெல்லாம் முடிகிறதோ விநாயகருக்கு அருகம்புல் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு சிதறு தேங்காய் உடையுங்கள். அனுமரையும் விநாயகரையும் உங்களது நண்பராக மாற்றிக் கொண்டால் நீங்கள் சனிபகனை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது.

அதேபோல தாலிக்காத தயிர் சாதத்தை நீங்கள் உங்கள் கைகளால் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும். காலையில் சமைத்த சாப்பாட்டில் எச்சில் படாமல் எடுத்து அதில் தாளிக்காத தயிர் போட்டு காகத்திற்கு உங்கள் கைகளால் வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: பொன் பொருள் பதவி அந்தஸ்து என எதை நீங்கள் இழந்திருந்தாலும் அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று அரசனைப் போல வாழ இந்த அரச மர பரிகாரத்தை செய்தால் போதும்.

கால் ஊனமாக இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நடக்க முடியாமல் சிலர் கஷ்டப்படுபவர்கள் அல்லவா அவர்களுக்கு வீல் சேர் செருப்பு போன்ற பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். நடக்க முடியாதவர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைப்பில் காலணிகள் விற்கும் அல்லவா அப்படிப்பட்ட காலணிகளை வாங்கி தானம் கொடுப்பதும் சிறப்பு. ஏழரை சனி உள்ளவர்கள் சனி தோஷம் கொண்டவர்கள் எல்லோருமே இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் பெறலாம்.

- Advertisement -