சனி பகவான் 108 போற்றி

sani-baghavan-1

வானியல் சாஸ்திரம் அடிப்படையில் ரீதியில் பார்க்கும் போது விண்ணில் இருக்கும் கிரகங்களில் பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும் கிரகம் சனி கிரகமாகும். எத்தனை தொலைவில் இருந்தாலும் சனி கிரகம் பூமியில் மனிதர்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். நீதிதேவனாக ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப சனி கிரக பெயர்ச்சியின் போது ஒவ்வொரு ராசியினரும் பலன்களை அனுபவிக்கின்றனர். சனி பகவானின் நல்லருளை பெற்று தரும் சனி பகவான் 108 போற்றி துதி இதோ.

sani bagavaan

சனி பகவான் 108 போற்றி

ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி

ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி

ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி

Sani bagavaan veedu

ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி

- Advertisement -

ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி

ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி

ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி

ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி

ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி

sani bagavaan temple

ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி

Sani Baghavan

ஆயுள்ககாரகனான சனி பகவானை போற்றும் 108 போற்றி துதி இது. நவகிரக பெயர்ச்சிகளில் ஒரு மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களையும் அதே நேரத்தில் மிகுந்த வளங்களையும் அனுபவிக்கும் நிலை சனி கிரக பெயர்ச்சியால் மட்டுமே உண்டாகிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் சனி பெயர்ச்சியால் பாதகமான பலன்களை அனுபவிக்கும் ராசியினர் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு சங்கு பூக்களை சமர்ப்பித்து, கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி இந்த போற்றி துதியை படித்து சனீஸ்வரரை வழிபடுவதால் சனி கிரக தோஷங்கள் நீங்கும், சனி கிரகத்தின் பாதகமான பலன்கள் ஏற்படுவது குறையும், விபத்து, அவப்பெயர், கடும் நோய்கள் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

மனித வாழ்வு என்பதே நன்மை தீமை கலந்தது தான். வாழ்வில் செய்யப்படும் எத்தகைய ஒரு செயலுக்குமான பலன்களை ஒரு மனிதன் இம்மையிலோ அல்லது மறுமையிலோ அனுபவிப்பான் என நமது வேதங்கள் உறுதியாக கூறுகின்றன. இதில் தீமையான செயல்களுக்கு ஏற்ற பலன்களை ஒருவருக்கு தரும் இறைவனின் பிரதிநிதியாகவும், நீதி தேவனாகவும் சனீஸ்வர பகவான் இருக்கிறார். அத்தகைய சனி பகவானை அவருக்குரிய சனிக்கிழமை தினங்களில் இந்த 108 போற்றியை துதித்து வழிபடுவதால் பல நன்மைகளை பெறலாம்.

2019 ஆம் ஆண்டு ராசி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே:
அனுமன் 108 போற்றி

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sani bhagavan 108 potri in Tamil. It is also called Sani bhagavan mantra in Tamil or Saneeswara thuthi in Tamil or Sani bhagavan thuthi in Tamil or Saneeswara manthiram in Tamil.