சனீஸ்வர பகவானை குளிர வைக்க, இந்த தை அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதுடன், இதையும் செய்து விடுங்கள். உங்களின் கிரக தோஷம், பித்ரு தோஷம் அனைத்தும் நீங்க இதை விட எளிய வழி கிடையாது.

- Advertisement -

அமாவாசையிலேயே மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியமானது. அது புரட்டாசி, ஆடி, தை, மாதங்களில் வரும் இந்த அமாவாசைகள் தான். பிற அமாவாசை நாட்களில் நாம் பித்ரு பூஜைகளை செய்ய தவறினாலும் கூட, இந்த மூன்று அமாவாசை நாளில் தவறாமல் அதை செய்து விட வேண்டும். இந்த அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு திதி கொடுப்பதுடன் சேர்த்து சனீஸ்வர பகவானுக்கும் இந்த ஒரு காரியத்தை சேர்த்து செய்யும் போது நமக்கான கிரக தோஷம், பித்ரு தோஷம் என அனைத்தும் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை எவர் ஒருவர் சரி வர செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு பித்ருக்களின் சாபங்கள் கிடைப்பதுடன், எந்த கிரகங்களின் ஆசியும் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட தோஷங்களை கூட சனீஸ்வர பகவானுக்கு இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தானத்தால் சரி செய்து விடலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தானம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த அமாவாசையானது சர்வ அமாவாசையாக (முழு நாள் அமாவாசை) வந்திருக்கிறது. இந்த தை அமாவாசை நாளில் காலை பித்ரு கடமைகளை செய்த பிறகு, மதியம் அவர்களுக்கு பிடித்த உணவை செய்து படையல் இட்டு வணங்க வேண்டும். அதன் பிறகு படையல் சாப்பாட்டை முதலில் காகத்திற்கு வைக்க வேண்டும். காகத்திற்கு வைக்கும் போது அதில் கொஞ்சம் எள் கலந்து வைக்க வேண்டும். அதன் பிறகு யாராவது ஒருவருக்கேனும் உணவு கொடுத்து விட்டு நாமும் உண்டால் பித்ருகளின் ஆசீர்வாதம் நேரடியாக நமக்கு கிடைப்பதுடன், அவர்களே நாம் படைத்த இந்த படையல் உணவை சாப்பிட்டதாக ஒரு ஐதீகம் உண்டு.

இவையெல்லாம் செய்த பிறகு அன்று மாலை அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று கண்டிப்பாக தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி ஏற்றும் இந்த தீபமானது நவகிரகங்கள் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சனீஸ்வரருக்கு இந்த தீபத்தை ஏற்றினால் மிக மிக விசேஷம். இதற்கு எள் தீபம் தான் ஏற்ற வேண்டும் என்று இல்லை. நல்லெண்ணெய் தீபமே கூட ஏற்றலாம்.

- Advertisement -

இவையெல்லாம் செய்யும் இந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் ஏதேனும் உதவி செய்தால் சனீஸ்வர பகவான் மனம் குளிர்ந்து நம்முடைய கிரக தோஷத்தையும், சாபங்களையும் நிவர்த்தி செய்து விடுவார் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு இந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யும் இந்த தானமானது, சனீஸ்வர பகவானின் பரிபூரண அருளை பெற செய்யும். இன்றைய நாளில் ஏதேனும் ஒரு மாற்றுத் திறனாளிக்கு உங்களால் முடிந்த உணவு, உடை அல்லது அவர்களுக்கான உபகரணங்கள் இப்படி ஏதாவது ஒன்றை அவர்களுக்கு வாங்கி கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோவிலுக்கு சென்று வழிபட்டால் தான் கடவுள் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவாரா? கடவுளை உணர கோவிலுக்கு தான் செல்ல வேண்டுமா? ஏன்?

இந்த தை அமாவாசையானது சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் சனீஸ்வர பகவானுக்கு இந்த ஒரு தானத்தையும் சேர்த்து செய்து பித்ரு தோஷம்,கிரக தோஷம் என அனைத்திலிருந்தும் விடுபட்டு நல்ல ஒரு வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -