கோவிலுக்கு சென்று வழிபட்டால் தான் கடவுள் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவாரா? கடவுளை உணர கோவிலுக்கு தான் செல்ல வேண்டுமா? ஏன்?

vivekananda-praying
- Advertisement -

கடவுளை உணர பல வழிகள் இருந்தாலும், கோவிலுக்கு செல்லும் பொழுது தான் மன திருப்தி கிடைக்கிறது. ஆனால் கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று தான் அனைவரும் கூறுகின்றனர். அப்படி இருக்கும் பொழுது ஏன் கடவுளை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்? கோவிலுக்கு செல்லாமல் கடவுளை உணர முடியாதா? என்கிற கேள்விக்கு இவர் கூறும் பதிலை தான் இந்த ஆன்மீக குறிப்பு கதைகளின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கடவுளை உணரும் சக்தி கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் கடவுளை உணர்வது கோவிலில் தான் அதிகம் நாம் அனுபவித்து இருப்போம். இது ஏன்? மற்ற நேரங்களில், மற்ற இடங்களில் கடவுளை நம்மால் அதிகம் உணர முடியாமல் போவதற்கு என்ன காரணம்?

- Advertisement -

ஆன்மீக சொற்பொழிவுக்கு சென்றிருந்த விவேகானந்தர், ஒரு நாள் ஒருவரை சந்தித்தார். அந்த ஒருவர் சுவாமி விவேகானந்தரிடம், இதே கேள்வியை கேட்டாராம். கோவிலுக்கு செல்லாமல் கடவுளை உணர முடியாதா? ஏன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்? என்று அவர் கேட்க, அதற்கு விவேகானந்தர் எதுவும் கூறாமல் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். உடனே அவர் ஓடி சென்று செம்பு நிறைய தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார். தங்களிடம் நான் தாகத்திற்கு குடிக்க தண்ணீர் தானே கேட்டேன், எதற்கு இந்த செம்பு? என்று கேட்டார். உடனே அவர் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகினார். தண்ணீர் வேண்டும் என்றால் செம்பு இல்லாமல் எப்படி எடுத்துக் கொண்டு வர முடியும்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

விவேகானந்தரிடம் இந்த குழப்பத்தை கேட்கவே அவர், ஆமாம்! தண்ணீர் எடுத்து வர செம்பு அவசியம் வேண்டும் தான். அதே போல கடவுளைப் பற்றி சிந்திக்க, அவரை உணர ஒரு இடம் வேண்டும் தண்ணீரை போல, காற்றைப் போல எங்கும் நீக்கமற இருக்கும் கடவுளை உணர்வதற்கு ஒரு செம்பு என்கிற இடம் வேண்டும். அந்த இடம் தான் கோவிலாக இருக்கிறது எனவே கோவில் வழிபாடு மிகவும் அவசியம் என்று விளக்கினார்.

- Advertisement -

எல்லா இடங்களிலும் கடவுளின் படைப்பு என்பதால் எங்கும் அவர் நிறைந்து இருக்கிறார். ஆனால் அவரை மனதார உணர வேண்டும் என்றால், அமைதியான ஒரு இடம் தேவை. அவருக்கென ஒரு தனி இடம் இருந்தால் அங்கு அவரை எந்த விதமான சிந்தனையும் இல்லாமல் நிம்மதியாக வழிபாடு செய்து நாம் உணர முடியும்.

ஒருவேளை கோவில்கள் இல்லை என்றால், மனதிற்குள்ளேயே நாம் இறைவனை நினைத்துக் கொண்டிருப்போமா? நமக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில் இறைவனை நினைப்பதற்கு நேரம் தான் கிடைக்குமா? அப்படியே நேரம் கிடைத்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி முழு மனதார அவரை நம்மால் உணர முடியுமா? இதற்கெல்லாம் தீர்வாகத் தான் கோவில் என்கிற ஒன்று அமைந்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
நாளை 21/1/2023 தை அமாவாசையில் தவறாமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

அக்காலங்களில் மாமன்னர்கள் இறைவனை உணர்ந்த காரணத்தினால் தான் மிகப்பெரிய கோவில்களை இன்றும் கம்பீரமாக நிற்கும் வகையில் பல நுட்பமான விஷயங்களை கையாண்டு, பல வேலை ஆட்களை நியமித்து, பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து எழுப்பி உள்ளனர். இங்கு ஒலிக்கப்படும் மந்திரங்களும், கருவறைக்குள் இருக்கும் பூஜை செய்யப்பட்ட சிலைகளும் ஒரு விதமான அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன. இந்த அதிர்வலைகள் தான் கோவிலுக்குள் சென்றதும் அது நம்மை சாந்தப்படுத்தி, கோவிலில் எந்த வித சிந்தனையையும் ஏற்படுத்தாமல் முழுமையாக கடவுளை உணர செய்கிறது.

- Advertisement -