சனி திசை பரிகாரங்கள்

- Advertisement -

சனிபகவான் என்றாலே யாருக்கும் பாரபட்சமின்றி சரியான நீதி வழங்கும் ஒரு நீதி தேவனாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு நபரின் ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகத்திற்குரிய திசை, அந்த நபரின் வாழ்நாள் முழுவதும் நடை பெறுவதாக குறிப்பிடுகிறது. அந்த வகையில் சனி கிரகத்திற்குரிய சனி திசை காலம் என்பது 19 ஆண்டுகள் ஆகும். பொதுவாக சனி திசை என்றாலே அனைத்திலும் கஷ்டம் மட்டுமே இருக்கும் என அனைவருமே கருதுகின்றனர். ஆனால் சனி பகவானின் அருளாசிகளை நாம் பெற்றுவிட்டால், இந்த சனி திசை காலத்தில் அனைத்தும் நன்மையாகவே நடக்கும். அப்படி ஜாதகப் படி சனி பகவானின் சனி திசை நடைபெறுகின்றவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி திசையில் செய்யவேண்டிய பரிகாரம்

ஜாதகத்தின் அடிப்படையில் தங்களுக்கு சனி திசை நடக்கும் பட்சத்தில், சனி பகவானால் பாதகமான பலன்கள் ஏதும் அடையாமலிருக்க சனிக்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில் சிவபெருமானுக்கு “ருத்ராபிஷேகம்” செய்து வழிபாடு செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் தங்களின் சுண்டு விரல் அளவிற்கு குறைவான அளவில் இருக்கின்ற உலோகம் அல்லது படிக லிங்கத்திற்கு கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதாலும் சனி திசை காலத்தில் பாதகங்கள் ஏற்படாமல் காக்கும் .மேலும் சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவதாலும், காலபைரவர் அஷ்டக மந்திரத்தை துதிப்பதாலும் சனி திசை காலத்தில் பெரிய அளவில் பாதகங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

- Advertisement -

கருப்பு எள் தானியங்களில் சனிபகவானின் ஆற்றல் நிறைந்ததாகும். சனிக்கிழமைகளில் இந்த கருப்பு எள் தானியத்தை தங்களிடம் பணி செய்கின்ற தொழிலாளர்களுக்கு தானம் செய்வது நல்லது. அதேபோன்று கருப்பு நிற போர்வைகளை நோயாளிகளுக்கும், ஏழ்மை நிலையில் இருக்கின்ற முதியவர்களுக்கும் தானம் வழங்குவது சனி பகவானின் அருளைப் பெற்றுத் தந்து, சனி திசை காலத்தில் நன்மைகளை உண்டாக்கும்.

சனி திசை காலங்களில் பாதகமான பலன்கள் ஏற்படாமல் தடுக்க அனுமன் வழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, அனுமன் சாலிசா மந்திரத்தை காலையும், மாலையும் துதிக்க வேண்டும். இந்த பரிகாரம் சனி திசை காரணமாக கெடு பலன்கள் ஏதும் ஏற்படாமல் நம்மை காக்கும் ஒரே கவசமாக செயல்படுகிறது.

- Advertisement -

சனிபகவானுக்குரிய நிறமாக கருப்பு நிறம் கருதப்படுகிறது. அதேபோன்று அடர் நீல நிறமும் சனிபகவானுக்குரியதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜாதகப்படி சனி திசை நடைபெறுபவர்கள் சனிக்கிழமைகளில் கருப்பு ஆடையை தவிர்த்து, அடர் நீல நிற ஆடைகளை அணிந்து வருவது சனிபகவானின் அருட்கடாட்சத்தை உங்களுக்கு பெற்று தரக்கூடிய ஒரு எளிய பரிகாரமாக உள்ளது.

இதையும் படிக்கலாமே: ஏழரை சனி பரிகாரம்

ஒரு பாத்திரம் நிறைய கடுகு எண்ணெயை ஊற்றி, அதில் உங்களில் நிழலை பார்க்க வேண்டும். பிறகு அந்த பாத்திரத்தில் இருக்கின்ற எண்ணெயை ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும். இதுவும் சனி திசை தோஷத்தை குறைக்கும் ஒரு தாந்திரீக பரிகாரமாகும்.

- Advertisement -