சனி தோஷம் விலக இந்த வன்னி மர குச்சியை வைத்து எளிமையான ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களை பிடித்திருக்கும் சனி பகவான் உங்களை விட்டு விலகி விடுவார்

sani
- Advertisement -

கிரகங்களில் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இந்த கிரகங்களின் சுழற்சியில் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இன்பம், துன்பங்கள் மாறிமாறி வருகிறது. அதுபோல வெற்றி, சோகம், யோகம் இவை அனைத்துமே ஒருவரின் வாழ்க்கையில் இந்த கிரக நிலைகளை பொறுத்துதான் அமைகிறது. அவ்வாறு ஒவ்வொரு கிரகமும் ஒரு மனிதனை ஒவ்வொரு வருடம் ஆட்சி செய்கிறது. ஆனால் இந்த கிரகங்களில் சனி கிரகம் மட்டும் ஒவ்வொருவரையும் ஏழரை ஆண்டுகாலம் ஆட்சி செய்கிறது. இந்த ஏழரை ஆண்டு காலமும் ஒருவர் மிகுந்த துன்பத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அவர்களின் வாழ்க்கை அதிகம் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். அந்தப் போராட்டத்தில் வெற்றியை தேடுவதென்பது மிகுந்த கடினமான விஷயமாகும். எனவே சனி பகவானின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட இந்த எளிமையான பரிகாரத்தை மட்டும் ஒருமுறை செய்து பாருங்கள். இதன் பலனை விரைவிலேயே உணர்ந்திடுவீர்கள். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒருவர் அவரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு ஜென்மத்தில் செய்த பாவங்களாக இருந்தாலும், அல்லது இந்த ஜென்மத்தில் அவரையும் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்கின்ற வகையில் தான் சனிபகவான் ஒவ்வொருவரையும் அவர்கள் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப தகுந்த பலன்களைக் கொடுத்து வருகிறார். அவ்வாறு சனி பிடித்தால் சிலர் யோககாரர்களாக மாறுவதும் உண்டு. சிலர் நடுத்தெருவிற்கு வருவதும் உண்டு.

- Advertisement -

அதிலும் ஒரு சிலர் இந்த போராட்டத்திற்கு இடையே எப்படி வாழ்க்கையை நடத்துவது என்று தெரியாமல் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவிற்கு கூட வந்துவிடுவார்கள். இப்படி அவர்கள் செய்த பாவத்தின் பலன் இந்த அளவு கஷ்டத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது. இதற்கு பரிகாரமாக சனி பகவானுக்கு பூஜை செய்யும் விதமாக இந்த எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் நாட்டு மருந்து கடைகளில் வண்ணிமரபட்டை அல்லது வன்னி மர குச்சி என்று கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு எள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கிராம தேவதை கோவிலுக்கு சென்று, அங்கு பொங்கல் வைப்பதற்கு முன்னர் மண்ணில் கையில் எடுத்து வந்த எள்ளை பரப்பிவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு அதன் மீது அடுப்பை தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வன்னி மர குச்சிகளை அடுக்கி வைத்து, அதில் நல்லெண்ணெய் சேர்த்து, கற்பூரம் வைத்து, தீபம் ஏற்றி பொங்கல் வைக்க ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவானின் கோபத்தை குறைக்க முடியும்.

பின்னர் உங்கள் கிராம தேவதையை வணங்கி, சனியின் பிடியில் இருந்து நம்மை காக்க வேண்டுமென வேண்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு கிராமத்திற்குள் நுழைவதற்கு முன்னர் எந்த ஒரு தேவதையாக இருந்தாலும் கிராம தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான் உள்ளே நுழைய வேண்டும். அது போல அவர்களின் அனுமதி இல்லாமல் நிலையாக அந்த கிராமத்திலும் இருக்க முடியாது. எனவே கிராம தேவதையின் அருள் நமக்கு இருந்தால் சனிபகவானின் பிடியிலிருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்கும்.

- Advertisement -