மே 19 சனி ஜெயந்தி – இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட யோகம் தான்

- Advertisement -

சனி ஜெயந்தி 2023

நீதிதேவன், ஆயுள்காரகன் என வேத சாஸ்திரங்களில் சனி பகவான் குறிப்பிடப்படுகிறார். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருளும் சனி பகவான், தவறு செய்யும் நபர் யாராக இருந்தாலும் ஒரு நீதி தேவன் ஸ்தானத்திலிருந்து அவரை கடுமையாக தண்டிக்கவும் செய்கிறார். எனவே தான் சனி கிரகத்தின் மீது மக்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை உள்ளது.

ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் அவதரித்தது வைகாசி மாதம் அமாவாசை தினமாகும். இந்த தினமே “சனிபகவான் ஜெயந்தி” எனும் பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சனி ஜெயந்தி தினம் வருகிற மே மாதம் 19 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. வருகின்ற வைகாசி அமாவாசை தினம் என்பது மே 18 ஆம் தேதி இரவு 9.42 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 19 ஆம் தேதி இரவு 9.22 நேரம் வரை நீடிக்கின்றது. இந்த காலத்தில் சனி பகவானை வழிபடுவது நற்பலன்களை தரும் என கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சனி ஜெயந்தி காலத்தில் நீதி தேவனாகிய சனிபகவான் சில ராசிகளுக்கு நற்பலன்களை வழங்க போகிறார் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி நற்பலன்களை பெறும் அந்த ராசியினர் யார் என்பதும் குறித்தும், என்னென்ன வகையான பலன்களை சனி பகவான் அவர்களுக்கு வழங்கப் போகிறார் என்பதை குறித்தும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சனி ஜெயந்தி தினம் செய்ய வேண்டியவை

வருகின்ற வைகாசி மாத அமாவாசை தினம் சனி ஜெயந்தி தினம் என அனைவரும் அறிந்ததே. இந்த சனி ஜெயந்தி தினத்தன்று உங்கள் வீட்டிற்கு அருகில் அரச மரம் இருக்கின்ற கோயிலுக்கு சென்று அரச மரத்தை 108 முறை சுற்றி வந்து வழிபட்டு, அந்த அரச மரத்திற்கு அடியில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். தீபமேற்றிய பிறகு “ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் ஸஹ் ஷன்யே நம” எனும் சனிபகவானுக்குரிய மந்திரத்தை 108 முறை துதித்து வழிபாடு செய்ய வேண்டும். கோயில்களில் இருக்கின்ற நவகிரக சன்னதியில் சனி பகவானுக்கு கருப்பு எள் கலந்த தீபமேற்றி வழிபாடு செய்வதாலும் சனி பகவானின் அருட்கடாட்சம் கிடைத்து வாழ்வில் இருக்கின்ற துன்பங்கள் தீரும்.

- Advertisement -

சனி ஜெயந்தியால் பலன் பெரும் ராசிகள்

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார். இந்த சுக்கிர பகவான் என்பவர் சனி பகவானுக்கு நட்பு கிரகமாக இருக்கிறார். எனவே ரிஷப ராசியினருக்கு சனி பகவான் தீவிரமான பாதக பலன்களை அளிக்காமல் நற்பலன்களையே தருவார். இந்த ராசியினருக்கு செல்வ வளங்கள் பெருக, சனி பகவான் அருள் புரிவார். மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி, அதிகாரம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கக்கூடும். உறவினர்கள் மத்தியிலும், பொதுவெளியிலும் செல்வாக்கு மதிப்பு பெருகும். எனவே ரிஷப ராசியினர் இந்த சனி ஜெயந்தி தினத்தன்று தவறாமல் சனி பகவான் வழிபாடு செய்வதால் மேலும் பல நல்ல பலன்களை பெறலாம்.

கடகம்
சந்திர பகவானுக்குரிய கடக ராசி சனிபகவானுக்கு பகைத்தன்மை கொண்ட ராசியாக இருந்தாலும் இந்த சனி ஜெயந்தி அன்று சனி பகவானை முறைப்படி வழிபடுவதன் மூலம், கடக ராசியினர் சனி பகவானின் அருட்கடாட்சத்தை பெற முடியும். சனி பகவானை கடக ராசியினர் முறைப்படி வழிபடுவதால் இந்த ராசியினருக்கு குடும்பத்தில் இருக்கின்றவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடை ஏற்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். மனதிருப்தி உண்டாகும்.

- Advertisement -

துலாம்
சுக்கிர பகவானின் ஆட்சி வீடாகிய துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் நல்லாசிகளை வழங்க கூடியவராக உள்ளார். இந்த சனி ஜெயந்தி அன்று சனி பகவானை வழிபடும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சிறந்த பொருளாதார முன்னேற்றங்களை வழங்குவார். பதவி, புகழ் போன்றவை கிடைக்கச் செய்வார். பலவிதமான இன்பங்களை அனுபவிக்க வழி வகுப்பார். இந்த துலாம் ராசியினர் வறுமையின் நிலையில் இருக்கின்ற மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு உணவளிப்பது மூலம் தங்களின் கர்மவினைகள் நீங்கி சனி பகவானின் முழுமையான அருளைப் பெற முடியும்.

மகரம்
செவ்வாய் பகவானின் உச்ச வீடாகவும், சனி பகவானின் சொந்த வீடாகவும் இருக்கின்ற மகர ராசியினருக்கு சனி பகவான் பல நன்மைகளை வாரி வழங்குவார். இந்த சனி ஜெயத்தை காலத்தில் சனிபகவானை வழிபடும் மகர ராசியினர் பதவிகளையும், ஊதிய உயர்வையும் பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் சிறப்பான லாபத்தை அடைவார்கள். செயல்கள் அனைத்தும் சிறப்படைந்து புகழையும், செல்வத்தையும் கொடுக்கும். காவல்துறை ராணுவம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் சிறந்த நிலையை அடைவார்கள்.

இதையும் படிக்கலாமே: தமிழ் புத்தாண்டு முதல் ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்

கும்பம்
சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனி ஜெயந்தி காலத்தில் சனி பகவான் வரங்கள் பலவற்றை அருள்வார். பொருளாதார நிலை முன்னேற்றம் பெறும். கடின உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வெற்றியையும், புகழையும் பெறுவார்கள், பொது வெளியில் மரியாதை உயரும். குடும்பத்தில் இருப்பவர்களின் அன்பும், ஆதரவும் நிறைவாக கிடைக்கும்.

- Advertisement -